புதன், அக்டோபர் 20, 2010

படித்ததில் பிடித்தது -நண்பர் பாய்க்காக

பாயின் படம் நினைவு படுத்திய கவிதை. விகடனில் படித்தது .
தங்கச் சாலைகள் போட
அடுக்கு மாடிகள் கட்ட
மாநாடு போட
மைதானம் விரிவாக்க என
வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
எண்ணற்ற மரங்கள்

பள்ளி விட்டுச் செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத் தளிர்மேல்
வூற்றிச் செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர் வாழ்கிறது உலகம்.

சொக்ஸ்



1 கருத்து: