இந்த ஊர்ஸ் லின்க்ஸ் பத்தி எனக்கு எப்பவுமே சில விஷயங்கள் உறுத்துவதுண்டு.அதப்பத்தி கொஞ்சம் கதைப்போம்....
மெட்ராஸ் காரன் என்று என்னை கூறிக்கொள்வதில் எப்பவுமே எனக்கு ஒரு பெருமை உண்டு, நான் பிறந்தது மற்றும் என் பெற்றோரின் ஊர் தஞ்சை மண்ணாக இருந்தாலும், நான் சுத்தமான சென்னைக்காரன். மெட்ராஸ் காரனுங்கல்லாம் எமாத்துக்காரனுங்க, மெட்ராஸ் பொண்ணுங்கல்லாம் மோசமானவுங்க திமிரு புடிச்சவுங்க என்பது போன்ற பல தவறான எண்ணங்கள் பலருக்கும் முக்கியமாக தென் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உண்டு... சில வருடங்களுக்கு முன் நான் மன்னார்குடியில் சில ஏக்கர் நிலம் வாங்கினேன், அப்போது அங்கு எனக்கு உதவி புரிய ஒரு லோக்கல் நண்பர் என்னுடன் இருந்தார், பண்ணையில் பணி புரியும் வேலை ஆட்களுடன் நான் மிக சாதாரணமாக பழகுவது அவருக்கு பிடிக்க வில்லை, மேலும் நான் அவர்களுடன் சமமாக உட்கார்ந்து தேனீர் அருந்துவது, சில சமயம் அவர்கள் எடுத்து வரும் பாத்திரத்திலேயே சாப்பிடுவது என இருப்பது அவருக்கு மேலும் நெருடலாக இருந்தது, என்னிடம் ஜாடை மாடையாக சொல்லி பார்த்தார், நான் அவரிடம், " நான் மெட்ராஸ் காரன், யாரையும் எந்த வகையிலும் வித்தியாச படுத்தி பார்த்து எங்களுக்கு பழக்கம் இல்லை நான் இப்படிதான் இருப்பேன்" என்று கறாராக கூறி விட்டேன், அவர் என்னை விட வயது அனுபவத்தில் முதிர்ந்தவர் நான் கூறிய தோரணையில் கொஞ்சம் அதிர்ந்து விட்டார். அவர் என்னிடம் ஒரு முறை சென்னை காரர்கள் மோசமானவர்கள், ஏமாற்றி பேர்வழிகள் என்று கேள்வி பட்டிருக்கிறேன் என்று கூறினார், அவரிடம் நான் ," இப்போது தமிழகத்தை மாற்றி மாற்றி கொள்ளை அடிப்பது இரண்டு குடும்பங்கள் , அந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று மன்னார்குடி குடும்பம், மற்றொன்று திருவாரூர் குடும்பம் அதற்காக தஞ்சை மண்ணில் பிறந்தவர்கள் எல்லாம் மற்றவன் சொத்திற்கு ஆசைப்படுபவர்கள் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா" என்று கேட்டேன், அதற்குப்பின் வாயே திறக்க வில்லை. சென்னையில் கோயம்பேடில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, பாறை வட்டி என்று அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து பலரின் வாழ்கையை சீரழிப்பதில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலோனோர் தென் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள்(பெயர் சொல்ல விரும்பவில்லை குஜிலி, GFK கோபித்து கொள்வார்கள் ), பர்மா பஜார், சீனா பஜார் பகுதிகளில் கடை வைத்து ஏமாற்றி கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள். பல இடங்களில் பல சரக்கு கடைகளை வைத்துக்கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் அடாவடிகள் செய்வது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த தென் மாவட்டக்காரர்கள் சென்னைகாரர்கள் இல்லை. இப்படி மேலும் மேலும் பல சொல்லிக்கொண்டே இருக்கலாம், ஆனால் சொல்ல விரும்பவில்லை. செந்தில், பாய், குஜிலி, GFK ஆகியோரில் யார் வேண்டுமானாலும் சென்னையிலோ, காஞ்சிபுரம்,திருவள்ளு, மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆக முடியும், திருநெல்வேலியில் நான் ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியாது, தென் தமிழகத்தில் போட்டியிட வேண்டுமென்றால் அங்கு பெரும்பான்மை சமுகத்தை சேர்ந்தவனாக இருந்தால்தான் எனக்கு சீட்டே கிடைக்கும்.... கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களாக இருந்தாலோ ஒழிய சாதாரணமானவர்கள் அங்கு போட்டியிட்டு ஜெயிப்பது குதிரைக்கொம்புதான். நான் கால்நடை மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு முன் சென்னையில் இரண்டு கல்லூரிகளில் படித்தேன், அங்கெல்லாம் ராக்கிங் நேரத்தில் பலவிதமான நல்ல அனுபவங்களே கிடைத்தது, நம் கல்லூரியில் ராக்கிங்கில் முதல் கேள்வியே நீ என்ன ஜாதி என்பதுதான்.......மெட்ராஸ் காரனின் சிறப்புகள் பல, எழுதிக்கொண்டே இருக்கலாம், மைனாரிட்டியாக இருந்தாலும் மெட்ராஸ் காரனாகவே கலக்குவேன்....
கரையான்.
machaan nalla googly than potirukka aanalum ball boundryyai thandum
பதிலளிநீக்குwait pannu
msk
Oors hmm... Well Mr.Karayaan, let me look some information before I can talk about the chennaikaarans in nellai. I suppose Nellaiyars are a bit unique in some ways..
பதிலளிநீக்குGujili
Well Karayan avargale it is human nature to put ooru links, just imagine if you meet an indian in your palaivanam,then you find out he is from chennai and then from arumbakkam,your affection will increase.This is the same for nellai people.there is something about thamarabharani river that binds us all,same cannot be said about koovum...sorry
பதிலளிநீக்குGFK
Hi All,
பதிலளிநீக்குParawailliye,karayanai koncham usuppiwitten.Kalam soodupiduthuwittadhu.
Ellam thamashukkutthaan.
My experience in our coolege days.
By the grace of God,nobody asked me 'What is your Caste?',because there is no such thing.
Yes,I did not like that "oors" linkage and will never.Look,Out of 150 classmates,most of them from the knowledge rich Nellai,Thoothukkudi and K.K. Districts.Though ,I had good rapport with all,I chose friends from rest.Karayan&Pambaram from MDS;Kattaiyan,Pottu Babu&Richard from TRY,SKB from ERD,TPK from CBE,Pandi&Parthi from MDU,Semi&Amul Baby from VRD,Kundan from DGL,Kolappan from SLM,General Tier from CDR,Reddy from A.P. etc...It doesn't mean that my district guys are bad.Ironically,from the list cited above nobody is having constant touch with me except my dear Karayan.
So,it not one's profile one should look into,but the heart i-e . the character.
Enne,olukkama ellorum enadhu ariwuraiyai pinpatranum,puriyudha!
Anbudan,
BHAI.
Dear All,
பதிலளிநீக்குThanks for the comments, i did write this not to offend anyone. Everyone talks about their oor perumai, same way i talked about my oor perumai. For GFK, coovum, is the thamirabarani of thiruvallur district, if you go to tirupathi via thiruvallur you can see that, for me i can say GFK and Gujili are madras kaararkal. Being a madras karan i have friends in every part of tamilnadu and still have contact with many.....
Again i say i did not mean to hurt anyone...karaiyan.
Hi karayan and Bhai:
பதிலளிநீக்குno offense taken, like you said just thamashukku thaan. Let me tell you I am the last person to believe in oors. I was born in Pune,brought up in bangalore and Tirupati,studied in madras,got married in Delhi to a Punjabi. Finally living in USA.naan entha ooru? kadavullukku thaan velicham.Ha ha ha
GFK
maaple karayan yenga ooru kaaranga niraya peru irukkrathaleyum yellorom koodi adicha pavamgrathaleyum itha apdiye vittuttu adutha postingukku perunthanmaya porem
பதிலளிநீக்குkeela per illenna athu msk than
Yes,ungalukkuthaan adrelanine suranthirukku,enakkillai.Frankness is one of the most essential character of Friendship.One final line about 'Oors',no place, whether MDS or Others,Can match the characters of CBE District.MDS,Nellai,Madurai -ellaam ore mattaiyila ooruna kuttai dhaan.
பதிலளிநீக்குBHAI