திங்கள், அக்டோபர் 11, 2010

கவிதை பாட நேரமில்லை

நண்பர் கரையானின் கவிதை ஆர்வத்துக்காக ஒட்டகம் படக் கவிதை

உங்களுக்கென்ன
மாலைப்போதில் மதுவும் நண்பரும்....

இரவைத் தொலைக்க கேளிக்கை விடுதிகள்..
உறக்கம் மறக்க இணையத் தேடல்கள்.

மனைவி குழந்தை மகிழ வேண்டினால்
மல்டி ப்லேக்ஸ்சில் சினிமா ஷாப்பிங் ...

அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
சமூகப் ப்ரங்க்ஜை..
தேசப்பற்று
அவலம் குறித்து வெட்டி அரட்டைகள்
என வாழ்வை ரசிக்க ஆயிரம் வழிகள்.

வெப்பத் தகிப்பில் உருகும் நகமும்
பற்றி எறியும் பாலை வெளியும்
எங்கள் வாழ்வில் என்றும் தொடரும்.
ஆனாலும்
நாளைப் பயத்தில் நித்தமும் இழக்கும்
இன்றைய வாழ்வும்,
துரோகமும் வெறுப்பும்
பொய்யும் வேஷமும்
எங்கள் உறவில் எப்போது கண்டீர் ..

ஒட்டகம் ஆயினும் நாங்கள் பாக்கியசாலிகள் ...
மனிதர்கள் எனினும் நீங்கள்...?

சொக்ஸ்

4 கருத்துகள்: