புதன், டிசம்பர் 31, 2008

குதிரைக்காரனின் புலம்பல்:

புத்தாண்டை முன்னிட்டு நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல காசை செலவு செய்து மனசை புன்னாக்கிக்கொண்டதுதான் மிச்சம். பாபு வுக்கு செல் பேசியில் அழைத்தால்,"மாப்பிள்ள maruti swift book பண்ணியிருக்கேன்டா அதான், பொண்டாட்டியோட போய் பாத்து கலர் select பண்ணிட்டு வரேண்டா என்கிறான், குமரவேளுக்கு பேசினால் china town ன்னு புதுசா ஒரு ஒட்டல் திறந்து இருக்காங்க குடும்பத்தோட புத்தாண்ட கொண்டாட போய்கிட்டு இருக்கேண்டா என பதில் அளிக்கிறான், பாண்டியனுக்கு பேசினால் குடும்பத்தோட கோவிலுக்கு போறேன் என்கிறான்மற்றொரு நண்பர் இப்பதான் பாருல ஆர்டர் குடுத்துக்கிட்டு இருக்கேன், வாங்க கலந்துக்குங்க என்றழைக்கிறார்.இப்படி எல்லோரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, இதோ வந்து விட்டது அழைப்பு,"டாக்டர் சாப் கோடி(குதிரை) பச்சா தேரா", அடித்து பிடித்து ஆடை மாற்றி புறப்பட்டு விட்டேன், மனைவி கண்விழித்துப்பார்த்து " என்ன பிழைப்போ இது போங்க" என புலம்ப இந்த புலம்பல் ஒரு தொடர்கதை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுப்பழகிவிட்டது எனக்கு. இரவு 10:30 துவங்கி விட்டது ஆண்டின் முடிவுக்கான count down , ஒரு புது உயிரின் ஜனிப்பு. புத்தாண்டு பரிசாக dystocia, குதிரையில் கொஞ்சம் கடினம், குதிரை சக்திக்கேதிராக மனித சக்தியை பயன் படுத்த வேண்டும், அரை மணி நேரப்போராட்டதிர்க்குப்பின் ஒரு புதிய உயிரின் தோற்றம், ஒரு வகையில் சந்தோசம் புத்தாண்டில் புத்தாடை இல்லையென்றாலும் புத்துயிருடன் துவங்குகிறதே என்று. இந்த புலம்பல் தொடரும் ஒவ்வொரு ஆண்டும்.

1 கருத்து:

  1. Hey Karaiyan,
    I am sorry to hear that all of our classmates have a life for New Year unlike us..But your effort to call them to wish Happy New Year is commendable.
    Gujili

    பதிலளிநீக்கு