ஞாயிறு, டிசம்பர் 21, 2008
கருப்பசாமிக்கும் எனக்கும் இடையே பல சமயங்களில் நகைச்சுவையான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. கருப்பசாமிக்கு எப்போதும் தான் ஒரு gazetted officer என்ற எண்ணம் உண்டு,(கால்நடை மருத்துவ கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்), அவன் ஆங்கிலப்புலமையை அவ்வப்போது மற்றவர்களுக்கு காட்டுவதில் அவனுக்கு தனிப்பெருமை. ஒரு முறை poultry lab-ல் நானும் அவனும் உட்கார்ந்திருந்தோம், அப்போது தீபா அங்கு வேகமாக வந்து சதீஷிடம் எதோ ஆங்கிலத்தில் கூறினாள். அவர்களின் சம்பாஷணையில், தீபா வீட்டுக்கு போவது மட்டும் எனக்கும் கருப்பசாமிக்கும் புரிந்தது, நான் வழக்கம்போல் ஆங்கிலப்படம் பார்த்து,புரிந்து விட்டதாக ஆக்டிங் பண்ணுபவன் போல் சும்மா இருந்து விட்டேன். கருப்பசாமிக்கு அவனுடைய ஆங்கில திறமையை காட்ட ஒரு அருமையான தருணம் கிடைத்தது, உடனே தீபாவிடம் "you happy, very very happy house going" (வீட்டுக்கு போகிறாய் ஜாலிதான் என்ற அர்த்தத்தில்)என்றான், தீபாவின் முகத்தில் என்னவென்று சொல்ல முடியாத குழப்பம், அவனை ஒரு வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றால். அவள் சென்ற பின்னர் சதீஷ் கருப்பசாமியிடம் "எண்டா அவளே பாட்டி செத்துட்டதா செய்தி வந்து வகுப்புலருந்து பாதியிலே கிளம்பி வீட்டுக்கு போறா, அவளிடம் போயி are you ஹாப்பி-ன்னு கேக்குராயே என நக்கலாக கேட்டான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Dey,
பதிலளிநீக்குI was reading this in my office and started laughing.My colleagues asked why am I laughing?When I explained it to them,they also laughed.
Good moment.Keep it up.
In CK's style 'Happy Enjoy'
This is hilarious!! Keep up the good job of writing on past memories.
பதிலளிநீக்கு