திங்கள், டிசம்பர் 29, 2008
இவரு வேல செய்யுறது மத்திய அரசு அலுவலகத்தில, காலை பத்து மணிக்கெல்லாம் அலுவலகத்துல வந்து உக்காந்துடுவாரு. அப்புறம் ஒரு காப்பி தம் போட்டுட்டு ஹிந்து பேப்பர் ஐ மேய ஆரம்பிப்பார், பதினொன்றரைக்கு மீண்டும் ஒரு கப் காப்பி, தொட்டுக்க பஜ்ஜி அல்லது பக்கோடா. பக்தி விகடன் மற்றும் பக்தி சம்பத்தப்பட்ட பத்திரிகைகளை பார்த்து அன்னைக்கு அவருடைய நாள் எப்படின்னு முடிவு செஞ்சிக்குவாறு(அதுக்குள்ளே பாதி நாள் முடிஞ்சிடும்), வீட்டுக்காரம்மா கொடுத்துவிட்ட சாப்பாட்ட ஒரு மணிக்கு சாப்பிட்டு விட்டு ஒரு தம் போடுவாரு, அப்புறம் கம்பியுடர் ல உக்காந்தாருன்னா அன்னைக்கு ஷேர் மார்க்கெட் நிலவரத்தப்பர்ப்பார், பிறகு மூணு மணிக்கு நெய் வடிய அல்வா, டிகிரி காப்பி. இதுக்கு நடுவுல ஏதாவது பார்வையாளர்கள் வந்து தொந்தரவு செஞ்சா இலவசமா அறிவுரை கொடுத்து அவுங்களை தலை தெறிக்க ஓட வைப்பார். நண்பர்கள் வந்தால் முதலில் கேட்கும் கேள்வி நீ என்ன ராசி, அப்புறம் உனக்கு இப்ப எட்டுல சனி, ஆறுல புதன், ஒன்பதுல செவ்வாய் என நண்பருக்கு ஜோசியம் பாக்க ஆரம்பிச்சுடுவார், அதுக்கப்புறம் நண்பருக்கு ஏழரைதான். நீயெல்லாம் அந்த கம்பனிக்கு போனால் எங்கோ போய்டுவா, இங்க பாரு இவன் என்னடா இப்படி சொல்ரானன்னு நினைக்காத, நானே நிறைய ப்ராஜெக்ட் ஐ கைல வச்சிக்கிட்டு பிரைவேட்டுக்கு போய்டலாம்னு இருக்கேன்(எந்த தனியார் கம்பெனில பேப்பர் படிச்சு, கம்ப்யூட்டர் கேம் விளையாட சம்பளம் கொடுக்குறாங்க.....!) இவரு இந்த டயலாக்க பத்து வருடமா சொல்லிக்கிட்டே இருக்கார், retire ஆகுற வரைக்கும் இதையே தான் சொல்லுவாரு. இப்படியே ஐந்து மணியாகி விடும், களைப்பாகி வீட்டுக்கு கிளம்பிடுவார்.ஒரு முறை கரையான கூட்டிக்கிட்டு நிலம் வங்க அலைஞ்ச கதை தனிக்கதை. ஒரு நாள் திடு திப்புன்னு கரையான கூப்பிட்டு ஒரு பிளாட் வாங்கலாம்னு இருக்கேன், உனக்கு தெரிஞ்ச இடம் இருந்தா காட்டுன்னு சொல்ல அவனும், இவரை அழைச்சிக்கிட்டு பிளாட் காட்ட கிளம்பினான். ஒவ்வொரு பிளாட்டுக்கு அவர் வாஸ்த்து பாத்து அவனை வறுத்து எடுத்துட்டார், இந்த இடம் கிழக்கு பார்த்து இருக்கு, இந்த இடத்துக்கு இடது புறம் வீடு இருக்கக்கூடாது, இது முக்கு சந்து(அந்த சந்து முக்குற சத்தம் எனக்கு கேக்கல, இவருக்கு மட்டும் எப்படி இந்த முக்கள் முனகல்லாம் கேக்குதோ), இந்த நிலம் ஈசானி மூலைல இருக்கு அதனால் வேணாம் என எட்டு திசைல எந்த திசைகளையும் பிளாட் இருக்க கூடாதுன்னு பல காரணங்கள் சொல்லி ஒரு நாள் முழுக்க சுத்த விட்டார். கரையான் ரொம்ப நொந்து "பலே பாண்டியா உனக்கு ஏத்த நிலம் கிடைக்கணும்னா 2012 வரைக்கும் பொறுத்துக்க, இந்தியா நிலாவுக்கு ராக்கெட் அனுப்புறாங்க, எப்படியாவது நாம் foot-board அடிச்சாவது நிலாவுக்குப்போய் உனக்கு ஏத்த எடமா பாத்துடலாம்" என்றான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
I have never seen a guy who is so adamant in 'WASTHU' as B.G.Pandi.
பதிலளிநீக்குBhai