சனி, டிசம்பர் 27, 2008
இன்று நம் நண்பர் பார்த்திபன் உடன் செல் பேசி உரையாடல் நிகழ்த்தினேன், நம்முடைய ப்லோக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார், மேலும் அவருடைய சகோதரரும் நம்முடைய பிலோகை பார்த்து விட்டு, இவர்களுக்கு வேறு பிழைப்பே இல்லையா என்று கேட்டதாக கூறினார். சகோதரரின் கருத்துக்கு நன்றி. இது நண்பர்களை இணைக்கும் ஒரு முயற்சி. சில பகுதிகள் தன்னை கல்லூரி நாட்களுக்கே அழைத்து சென்றதாக பார்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார். குதிரை புதிதாக குட்டி போடும் போது நான் அதன் முதல் ஒரு மணி நேரத்தை கண்காணிக்க வேண்டும், இது பெரும்பாலும் இரவு நேரப்பணி, மேலும் இங்கு இருக்கும் குளிரில்( 0-2 டிகிரி ), நான் சற்று நேரம் என் கிளினிக்கில் உட்கார்ந்தே ஆக வேண்டும், அந்த சில மணித்துளிகள் நான் என்னுடைய பழைய நினைவுகளை கிளர பயன்படுத்தி கொள்கின்றேன். மேலும் இது என் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவழிக்க உதவுகிறது. இது வல்லாமல் நான் வாரம் தவறாமல் ஒரு பத்திரிகையில் "vets corner" பகுதியில் குதிரைகளின் நோய்கள் பற்றியும் எழுதுகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக