ஞாயிறு, டிசம்பர் 28, 2008
எனேக்கெல்லாம் பொண்ணு கொடுக்கவே ரொம்ப யோசிச்சாங்க, ஆனா இவருக்கு பொண்னையும் குடுத்து, வீடும் குடுத்து, அதுக்குள்ளே வைக்க பொருளும் குடுத்து, மலேசியா வுல வேலையும் வாங்கி குடுத்திருக்காரு மாமனார். அப்புறம் என்ன ஜாலியா இருக்க வேண்டியதுதானே. இவரை வீட்டுக்கோ,ஒட்ட்டலுக்கோ அழைக்கும் நண்பர்கள் ஜாக்கிரதை, ரெண்டு கிளாசுக்கு மேல குடிக்க விடாதீங்க(அது வெறும் தண்ணியா இருந்தா கூட), அதுக்கு மேல போனா,போன வேகத்தை விட வேகமாக எல்லாம் வெளியில் வந்துடும் அப்புறம் வுங்க பேரும் நாறிடும். போனா வாரம் பத்திரிகையில பார்த்தேன் அரசாங்கம் கடலை மஷின் வெளிநாட்டுலருந்து இறக்குமதி செய்யப்போகுதாம், இருந்த நல்ல கடலை போடுற மிஷின மலேசியா வுக்கு அனுப்பிட்டு இப்ப கடலை போட ஆல் தேடறாங்க. இவரு நம் batch ஓட முதல் get-to-gether ல பட்ட பாடு அனைவருக்கு தெரியும், கொஞ்சம் ஓவர் ஆகி குடை சாஞ்சிட்டாறு, வீட்டுக்காரம்மா அவரை தெரு க்காவல்ல வச்சிட்டாங்க (அது என்ன தெருக்காவல்னு நீங்க கேக்கறது தெரியுது, வீட்டுக்குள்ள வச்சி பூட்டினா வீட்டுக்காவல், தெருவுல விட்டு வீட்ட பூட்டிட்டா அது தெருக்காவல்). இங்க நண்பர்களைப்பாக்கும் போது மலேசியா வுக்கு வந்தா மறக்காம எனக்கு போன் பண்ணுங்கடா என்பார்(ஏனென்றால் நீங்கள் வருவது தெரிந்தால் செல் பேசி யை switch off செய்து விடத்தான், இல்லையென்றால், குடும்பத்துடன் வெளியில சென்று விடுவார்).
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக