புதன், டிசம்பர் 24, 2008

மத்தவங்கல்லாம் பா பு -இன்னா இவர் பு பா. படிப்ப முடிச்சதும் ஆரோ-ல சேந்தாரு இப்ப அந்த கம்பெனியே கேக்க யாருமில்லாம டாரு டாரு-ன்னு சிதரிடுச்சி. அதுக்கப்புறம் பல கம்பெனிகள் , எல்லாத்தையும் முடிச்சி இப்போ நாய் பிஸ்கட் வித்துகிட்டு இருக்கார் சிங்கார சென்னையில. இவரோட டயலாக் " எங்க பிஸ்கட்ட சாப்பிட்ட அதுக்கப்புறம் எந்த பிஸ்கட்டையும் அந்த நாய் மோந்து கூட பாக்காது" உண்மைதான் அவுங்க பிஸ்கட்ட தின்னதுக்கு appuramஅதுக்கு மூச்சு இருந்தா தானே ". காலைல மத்தவுங்கல்லாம் மைதானத்துல பயிற்சிக்காக நடப்பாங்க, ஆனா இவர் நம்ம கல்லூரி மைதானத்தில நடந்துக்கிட்டே பிஸ்கட் விப்பாரு தொல்லைபேசி மூலமா. காலைல பாத்து மணிக்கு கைப்பேசிய எடுத்தாருன்னா சாயந்திரம் நாலு மணி வரை நம்ம கல்லூரி மைதானத்த சுத்தி சுத்தி வந்து கூவி கூவி விப்பாரு. டி.கல்லுப்படியில இருக்கிற பெட்டிக்கடை காரன்ல ஆரம்பிச்சு, சென்னை-ல இருக்கிற multiplex வரை அனைத்து கடைக்காரர்-இடமும் கதையளப்பார், அண்ணே முதல் சார் வரை அனைத்து வார்த்தைகளையும் உபயோகித்து அன்றைய கோட்டா வை முடித்து விடுவார். வீட்டுக்காரம்மா சாப்பிட கூப்புடுறது(வீட்டுல இருக்கும்போது) கூட செல் பேசியில தான், அவரு அவ்வளவு பிசி. நண்பர்கள் வந்தால் சில மணித்துளிகள் ஒதுக்குவாறு(அந்த நேரத்தில் ஏதும் செல் பேசி அழைப்பு இல்லையென்றால்), அவரை நேராக பார்ப்பதற்கு பதில் செல்லில் அழைத்து பேசுவது நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக