எனக்கு தெரிஞ்சு நம்ம கல்லூரி நண்பர்கள் எங்கே, எப்படி இருக்காங்க என்பதை நம்முடைய வழக்கமான பா கே ப பாணியில் சொல்ல இருக்கிறேன், லிஸ்ட்ல் என்னை சேக்காதப்பா என்பவர்கள் இப்பவே சொல்லிடுங்க அப்புறம் என்னை என் இப்படி அசிங்கப்படுதுரே என்று சொல்லக்கூடாது.
பாய்- வழக்கம் போல இவர்தான் நம்மோட டீம் ஓபனிங் பேட்ஸ் மென். கல்லூரி முடித்து ஒரு கோழிப்பன்னையில நல்லாத்தான் குப்பை கொட்டிக்கிட்டிருந்தார்(குப்பைன்னா அதிகமான mortality). அந்த கோழிகளோட நல்ல நேரம் அவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சி அதுங்கள்லாம் பிழைசிகிடுச்சி. பொள்ளாச்சியில் கால்நடை மருத்துவமனைல அஞ்சி சிசி hivit injection- ஐ அரை லிட்டர் வடிகட்டி காய்ச்சிய (காஸ் இல்லை என்றால் அதுவும் கிடையாது) தண்ணீரில் கலக்கி impaction முதல் indigestion வரை அனைத்து நோய்களுக்கும் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தி சாதனை புரிந்தவர். கோழிகளுக்கு மட்டுமல்ல பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள ஆடு மாடுகளுக்கும் நல்ல நேரம் பிறந்து, டாக்டர் க்கு துபாய்-ல்(கல்ப்-ல எங்க வேலைக்கு போனாலும் ,அது சவுதி, குவைத், ஓமன்,கத்தார் என அனைத்தும் துபாய் என்றுதான் அழைக்கப்படும்)தப்பிதுக்கொன்டன. ஆனால் அவருக்கு எங்கு போனாலும் அரசாங்க காசுதான்(மச்சக்காரன்), கடாரிலும் அரசாங்க மருதுவமனைலதான் வேலை, தொண்ணூறு நாளைக்கு ஒரு A.I ன்னு, ரொம்ப உடல் வருத்தி வேலை செய்து கொண்டிருக்கிறார். எதோ அவரால் முடிந்த அளவு ஒட்டகம் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கையையும் அவ்வப்போது FALCON களின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொண்டு இருக்கிறார்.
இப்படிக்கு
கரையான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக