சனி, டிசம்பர் 27, 2008

பாவா இப்ப இருக்கிறது உழவர் மையத்தில , காட்டுப்பாக்கம் பக்கத்துல, ஐயா வ பாக்கப்போகும்போது முன்னாலையே சொல்லிட்டு செல்லனும். இல்லையினா நீங்களும் எதோ பண்ணைக்காரருன்னு நினைச்சு அவருட வழக்கமான recorded message ஐ தொடங்கிடுவார், " வாங்க என்ன பண்ணப்போறீங்க, கோழி வளத்தா கோவணாண்டி ஆகலாம், காடை வளத்து காணாம போகலாம், நாய் வளத்து நாசமா போகலாம், ஆடு வளத்து அம்பேல் ஆகலாம், கினி க்கொழி வாழ்த்து கிறுகிறுத்து போகலாம், பன்னி வளத்து பரதேசி ஆகலாம், " என நாம் யாரென்றே தெரியாமல் பேச ஆரம்பித்து விடுவார். அதனால் உங்கள் பெயரை நெத்தியில் எழுதி ஒட்டிக்கொண்டு போவது நன்று. சென்னையில் நாய்கள் பெருகிடுச்சி, அரசாங்கம் அதை குறைப்பதற்கு என்னென்னமோ வழியில் முயற்சி செய்யுதே, நாமும் நம்மால் ஆன முயற்சிகள் எடுப்போம்ன்னு ஒரு கிளினிக் ஆரம்பிச்சாரு, ஐயா நாங்க நாய்கள் எண்ணிக்கையதான் குறைக்க சொன்னோம், நாய்களே இல்லாமல் செய்ய சொல்ல வில்லைன்னு அரசாங்கம் கேட்டுக்கொண்டதிர்கிணங்க கிளினிக்கை மூடிட்டார். அவர் மையத்தில் "தென்னை கன்றுன்னு கொடுத்தா பனங்காய் காய்க்கும், மா மரம்ன்னு சொல்லி கொடுத்தா கொய்யா காய்க்கும், நெல் நாத்துன்னு கொடுத்தா புல்லுதான் முளைக்கும்" ஆகவே விவசாயப்பெருன்குடி மக்களே( ச்சே..... பாவா வ நினைச்சதும் எனக்கும் அப்படியே வருது) மன்னிக்கணும்! நண்பர்களே நண்பிகளே அவரை சந்திக்கபோகும் முன் நல்லா அறிமுகப்படுத்திக்கொண்டு செல்லுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக