புதன், டிசம்பர் 31, 2008

இவர் இப்ப இருப்பது கேரளா வுல, அவரு வேல செய்யுற பல்கலைகழகத்துல புதுசா ஒரு டிபார்ட்மென்ட் உண்டாக்கி இருக்காங்களாம் மொழி ஆராய்ச்சிக்கென்று, அவர் பேசும் மொழி எது என்று கண்டு பிடிக்க. அவர் பேசுவது, தமிழா,தெலுங்கா,மலையாளமா அல்லது ஆங்கிலமா என்று பெரிய பட்டிமன்றமே நடக்குதாம். M.V.Sc., டிகிரி வாங்க ஒரு முழு old monk, Ph.D., வாங்க ஐந்து முழு Teacher's Scotch, இதுதான் இவர் formula. இவருக்கு ஆறறிவு இருந்தாலும், ஆங்கில அறிவு பூஜியம்தான். பல முறை சென்னைல viva நடத்த நம் கல்லூரிக்கு external examiner ஆக வந்து பிரியாணி சாப்பிட்டு தாகம் தீர்த்து செல்கிறார்(என்ன கொடுமை கண்ணன் சார் இது... நீங்களும் கல்லூரியில ஆசிரியர் இவரும் கல்லூரி ஆசிரியர்). ஒரு முறை கரையான்,பாண்டி மற்றும் நம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார் சென்னை வந்தபோது, அன்று கொஞ்சம் ஓவராகி குடை சாய்ந்து விட்டார், அடுத்த நாள் காலை கரையான் அக்கறையாக செல் பேசியில் அழைத்து external viva exam க்கு தயாராகி விட்டாயா என வினவ, ராத்திரி பன்னெண்டு மணிக்கு எல்லாம் தெளிஞ்சு, தூக்கம் வரல எழுந்து paper திருத்த ஆரம்பிச்சுட்டேன் என்று அவனை அதிர வைத்தார், இவர் அந்த நேரத்தில் இருந்த நிலைக்கு என்ன லட்சணத்தில் திருத்தி இருப்பார், ஐயோ பாவம் அந்த மாணவ மணிகள். இவருடைய விருந்தோம்பலில் முக்கி முத்தெடுக்காதவர்களே இல்லை என்றுகூட சொல்லலாம். ஒன்றுமே கிடைக்க வில்லை என்றால் பட்டையாவது படைத்து விடுவார். இவருடைய தேசிய உடையை இன்னும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார், ஒரு நைந்து போன சேப்பு துண்டும், கலர் மக்கி, நைந்து கிழியக்காத்திருக்கும் கைலியும்,சள்ளடையாகிப்போன முண்டா பனியனும் இன்னும் மணம் மாறாமல். அடுத்தது இவருடைய இலக்கு அரசியல்தான்.

3 கருத்துகள்: