ஞாயிறு, மே 01, 2011

உதவ நினப்பவர்கள் உதவலாம்.....



கோவை:தெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
பேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், இந்துஸ்தான் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார்; 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ள இவர் படிப்பதும், உறங்குவதும் தெருவில் தான்.சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் குடிசையில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட, இரவில் ரோட்டோரத்தில் படுத்து இவரது குடும்பத்தினர் உறங்குகின்றனர். ஒரு முறை கல்லூரி பாடப் புத்தகங்களும் மழைவெள்ளத்தில் நனைந்து நாசமான சம்பவமும் நடந்திருக்கிறது. இரவு 12.00 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து குறைந்தபின்னர் பேரூர் ரோட்டோரங்களில் படுத்து உறங்குகின்றனர். பார்த்திபன் பி.சி.ஏ., பட்டப்படிப்பையும் தனியார் கல்லூரியில் முடித்திருக்கிறார். ஆனால், முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித்தொகை உட்பட எந்த கல்வி உதவித்தொகையும் இவருக்கு கிடைக்கவில்லை. படிப் பதற்கு புத்தகங்கள் வாங்க பணம் இல்லாததால், கல்லூரி நூலகத்தை பயன்படுத்திக் கொள்கிறார். எம்.சி. ஏ., படித்த போதும், லேப்டாப் இல்லை. இரவில் அண்டை வீடுகளில் கேட்டு, வாசலில் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கிறார். வங்கியில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது; ஆயினும் 1.7 லட்Œம் செலவாகி உள்ள நிலையில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே கடனாக கிடைத்திருக்கிறது.
அதேபோன்று, மதன் என்ற மற்றொரு நரிக்குறவர் இன மாணவர், இன்டஸ் இன்ஜி., கல்லூரியில் பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு பயின்று வருகிறார். கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்திருக்கிறது. இவ ரும் கல்விக்கடன் பெற்றுள்ளார். இதுவரை, 56 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்க, 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு ஆறுதலாக, முதல்பட்டதாரிக்கான உதவித்தொகை இவருக்கு வழங்கப்படுகிறது. இவரும், தெருவில் படுத்துறங்கி பக்கத்து வீட்டுவாசலில் உள்ள மின்விளக்குகள் மூலமே படித்து வருகிறார். கல்லூரி பஸ்சுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய்; கல்விக்கட்டணமாக 15,000 ரூபாய் செலவு ஏற்படுதாக கூறும் இவருக்கு "லேப்டாப்' இல்லை.நல்ல உடை இல்லை; கட்டாயம் ஷூ அணிந்து செல்ல வேண்டும், புத்தகங்களை நூலகத்தில் எடுத்து மட்டுமே படிக்க முடியும் என்ற போதும் மனம்தளராமல் படித்து வருகின்றனர். இருவருமே பிளஸ் 2வரை தமிழ்வழியில் படித்தவர்கள் என்பதால், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, பயிற்சி வகுப்புக்குச் செல்ல விரும்புகின்றனர். கட்டணம் செலுத்த முடியாததால் செல்லவில்லை. தெருவில் உறங்கி தெருவிலேயே படிப்பதை விட, விடுதியில் தங்கிப் படிப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். பெற்றோர் ஊசி, பாசி விற்பதன் மூலம் ஈட்டும் வருவாய் அவர்களின் உணவுக்கே போதாத நிலையில், கல்விக்கு கூடுதலாக செலவிட நினைப்பது சிரமமே. சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இரு மாணவர்கள், சுயமாக முன்னேறி இருக்கின்றனர்.
தொடர்புக்கு : இந்த மாணவர்களுக்கு உதவ விரும்புவர்கள் மதன், த/பெ., பாண்டு, நரிக்குறவர் காலனி, எம்.ஜி.ஆர். தோட்டம், இ.ராசசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர் போஸ்ட், கோவை - 10 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் : பார்த்திபன் : 9750670733 ; பாண்டு - 9865257726.

நன்றி...(தினமலர்)

கரையான்......

5 கருத்துகள்:

  1. Karayaan how do we know this is legitimate and our funds are going to the right place? Please enlighten.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. Dear gujili,
    this was not told to me by an individual, this story was published in a reputed tamil daily. Without verifying they will not write it.Becasue these boys are from coimbatore, I asked chockan to hand over the money personally to these boys.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. I met the guys today and hand over the money to them at their area.Both of them extended their gratitude to Karaiyan.It's really great that Karaiyan is doing this type of help to the needy without expecting any reciprocation.I feel much about the effort he is taking to help the people sitting away from mother land.
    I don't have any relevent words to express.
    GREAT.
    Chocks

    பதிலளிநீக்கு
  4. Dear Chocka,
    thanks a lot for spending a lot of time reaching those guys.
    karaiyan.

    பதிலளிநீக்கு