சனி, மே 14, 2011

தேர்தல் முடிவுகள் நம்மில் பெரும்பாலான வாக்காளர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அமைந்து உள்ளது. ஜெயலலிதா ஜெயிக்க வேண்டும்  என்பதை விட  பெரும்பாலானவர்கள் எண்ணம்  கருணாநிதி தோற்க வேண்டும் என்றுதான் இருந்தது. ஜெயலலிதா ஜெயித்து விட்டதால் என்னவோ தமிழகத்தில் பாலும் தேனும் ஓடப்போவது போன்று யாரும் எண்ணி விடவில்லை, தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவது கொஞ்சம் குறையும்,  அடாவடியாக நிலங்கள் பிடுங்கப்படுவது, கட்டப்பஞ்சாயத்து போன்றவை வழக்கம்போல் நடக்கத்தான் போகிறது. இந்த தேர்தலில் வினோதமான ஒன்று நடந்துள்ளது, BJP உதவியால் congress நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, கன்னியாகுமரியில் இரண்டு மற்றும் ஹோசூர் தொகுதிகளில் கணிசமான ஆளும்கட்சிக்கு எதிரான ஓட்டுக்களை BJP பிரித்ததால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது.   சில  நல்ல  விஷயங்கள்  என்று  பார்த்தால் பெரும்பாலான மக்கள் ஜாதி மற்றும் மத அடிப்படையில்  ஓட்டு போடவில்லை  என்று தெரிய வருகிறது. 
உதாரணத்திற்கு சேப்பாக்கம்  தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜெயித்திருக்க வேண்டும், ஆனால் தோற்றுள்ளார், பாளையங்கோட்டையில் மைதீன்கான் சுலபமாக ஜெயித்து விடுவார், அங்கு சிறுபான்மையினர் வோட்டுக்கள் அதிகம் என பெரும்பாலான பத்திரிகைகள் கணித்தன, ஆனால் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார். ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றவர் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்(இப்படி பல தொகுதிகளை மேற்கோள் காட்டலாம்).  தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி பதவியை தக்க வைத்து கொள்ளும் பச்சோந்திகளான திருநாவுக்கரசர், முத்துசாமி போன்றவர்களையும் மக்கள் தோற்கடித்துள்ளார்கள். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற முக்கிய ஜாதி கட்சிகள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. ஆகவே இந்த தேர்தலில் வெற்றி மக்களுக்குத்தான்....

கரையான்.

3 கருத்துகள்: