திங்கள், மே 02, 2011

மனதில் தோன்றியது....

பாய் அவர்களின் ஆட்டோ கிராப் புத்தக வரிகளை படிக்கும்போது இனம்புரியாத ஒரு சோகம் மனதை பிசைவதை மறுக்க முடியவில்லை. பழங்கதைகளை அசை போடுவது சில சமயங்களில் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், மாணவப்பருவத்தில் கவலைகள் ஏதுமின்றி துள்ளி திரிந்த அந்த கால கட்டத்தை நினைத்து சோகமும் அடைய வைக்கிறது. நவீன கால வாழ்க்கை முறைகளின் மன உளைச்சல்கள் நம்மின் கடந்த  கால நிகழ்வுகளை எண்ணி பெருமூச்சு விடவைக்கிறது. நான் சந்தித்த பெரும்பாலான மெத்த படித்து பெரிய வேலைகளில் இருக்கும் நண்பர்கள் புலம்புவது அவர்களின் பணி மற்றும் வாழ்க்கைமுறையில் உள்ள மன அழுத்தம் பற்றித்தான், மேலும் அவர்களுடைய கனவு  தேவையான அளவு சம்பாதித்து விட்டு நிம்மதியாக கிராமத்தில் ஒரு ஆட்டு பண்ணையோ அல்லது  மாட்டு பண்ணையோ வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கவேண்டு என்பதாகவே இருக்கிறது. தேவையான அளவு சம்பாதிப்பது என்ற அளவுகோல் என்ன என்பது எனக்கு தெரியவில்லை, என்னுடைய அளவுகோல் பற்றி மட்டும் நான் கூற முடியும், ஒரு ஐம்பது ஏக்கர் அளவு விவசாய நிலம், அதில் பத்து  ஏக்கரில் நெற்பயிர், பத்து ஏக்கரில் தென்னை, பத்து ஏக்கரில் தீவனப்பயிர்கள், பத்து ஏக்கரில் பழ மரங்கள், ஐந்து ஏக்கரில் காய்கறிகள், பத்து பசுமாடுகள், அம்பது வெள்ளாடுகள், etc.etc... இவையெல்லாம் கேட்பதற்கும்  எழுதுவதற்கும் நன்றாகவே இருக்கும் ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் சாத்தியப்பட, நவீன யுகத்தின் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் நாம் அனுபவிக்க வேண்டி வரும். மேலும் குழந்தைகள் மற்றும் வாழ்க்கை துணை இந்த சூழலில் வாழ ஒத்துழைக்க வேண்டும். நான் கல்லூரி முடித்த காலம் முதல் கிராமங்களிலேயே பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்தினால் அந்த வாழ்க்கை எனக்கு மட்டுமில்லாமல் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் ஒத்துப்போகிறது... பாபு, சொக்கன்(நகரங்களின் பிளாட்டுகளில் வசிக்கும்) போன்றவர்களுக்கு இந்த சூழல் எந்த அளவுக்கு ஒத்து போகும் என தெரியவில்லை. என்னுடைய வேலையை நான் மிகவும் விரும்புவதற்கு இந்த கிராம வாழ்கையே கூட ஒரு காரணமாக இருக்கலாம்,  காலை எழுந்து ட்ராபிக் ஜாமில் நீந்தி அலுவலகம் சென்று சேர வேண்டிய டென்ஷன் இல்லை, குறிப்பிட்ட கால கெடு இல்லாமல் நமக்கு வசதியான நேரங்களில் பணி நேரங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம், (target எனக்கும் உண்டு), ஆனால் இருபத்தி நான்கு மணி நேரமும் பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் உண்டு, சில நேரங்களில் மூன்று நாட்கள் சில மணி நேரங்கள் மட்டும் தூங்கி தொடர்ச்சியாக பணி செய்த சூழலும் உண்டு, ஒரு மாதமாக ஒரு கேசும் இல்லாமல் தூங்கி விழுந்த நாட்களும் உண்டு......

மேலும் தொடருவேன்.....

கரையான்.

5 கருத்துகள்:

  1. dear karaiyan
    its always ikkaraikku akkarai pachai
    in my own experience the philosophy is
    try hard to get what u want or else live easy with what u have or what u get
    hope this solves ur prob
    we cannot get everything in this world as easy as......
    other peoples advice..
    hi hi!
    msk

    பதிலளிநீக்கு
  2. dear senthil,
    ungalidamirunthu innum niraiya advise ethirpaarkkirom(ilavasamaaka illai pondichery varumpothu kavanichiduvom)
    nanri.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. MSK..advice romba nannarukku. I too agri his views
    Chocks

    பதிலளிநீக்கு
  4. I have to agree with MSK also but one can dream and perhaps make some of their dreams come true if it is also iraivanin aruzhl. After our internship having a farm and living on it with animals was my dream also. I don't care for city life anymore and hence my life in my kugraamam gives me a lot of peace. Everytime I go back to Chennai, I am glad that I am visiting but then when I go to Tirunelveli and see some parts of the countryside I do ache for that longing of the slow pace of life. I have to admit that where I live things are a lot slower pace than Chennai, Mumbai, New York city of L.A. So I am trying to make the best of life wherever it is.
    Gujili

    பதிலளிநீக்கு