செவ்வாய், மே 31, 2011

உள்ளத்தில் தோன்றியது.....

இந்த வாரம் முழுவதும் எனக்கு  நொந்து நூடுல்ஸ் ஆன வாரம் என்று தலைப்பு கொடுக்கலாம்...(the most frustrating week at the farm), சாதாரண foal heat diarrhoea வாக துவங்கிய பேதி(எனக்கு இல்லை குட்டிக்கு) என்னை பாடாய் படுத்தி விட்டது, எனக்கே ஏற்பட்டு இருந்தாலும் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்.  மூன்று நாள் நிற்காமல் தண்ணி தண்ணியாய் ஆக அதற்கு இருபத்தி நாலு மணி நேரமும் சிகிச்சை அளித்து எனக்கு dehydration ஆகி விட்டது, இந்த குட்டியின் விலைதான் பிரச்சனைக்கு மூல காரணம் (மூன்று லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது), மேலும் அதன் பெடிகிரீ, பேதியில் தொடங்கி septicaemia வந்து மண்டையை போடும் நிலைக்கு வந்து கொஞ்சம் தேறி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் ஆகும் என் நிலை என்ன ஆகும் என தெரிவதற்கு. என்ன கொடும சொக்கா இது குட்டியோட தலை எழுத்து  டாக்டரோட விதியோட விளையாடுது பாரு. இதுல வீட்டுக்கு போனா என் சின்ன பொண்ணு வேற ஏம்ப்பா நான் சின்ன கொழந்தையா இருந்தப்ப  பால் குடிச்சனா, பேதி நின்னிச்சான்னு ஒரு வார்த்த கேட்டு இருப்பியா, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை stable- க்கு போன் பண்ணி குட்டி பால் குடிச்சுதா, பேதியாச்சா, நிக்குதா, தூங்குதா, நடக்குதான்னு கேக்குறே என நக்கல் பண்றா...என்ன செய்ய யானை  படுத்தா எலி கூட  ஏறி மிதிச்சிட்டு போகும்பாங்க , இந்த குதிர குட்டியால எவ்வளவெல்லாம் பட வேண்டியிருக்கு... எம் பொண்டாட்டி எங்கிட்ட  உங்க முகமே மறந்துடும் போல, எத்தன மணிக்கு வரீங்க எத்தன மணிக்கு போறீங்க எதுவுமே தெரிய மாட்டேங்குது, ராத்திரி குதிர நாத்தம் பக்கத்துல அடிச்சா நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க, அடிக்கலன்னா stable க்கு கிளம்பி போயிட்டீங்க என்று நானே முடிவு பண்ணிக்குறேன் என்று அவள் பங்குக்கு நையாண்டி.

தொடருவேன்....(அந்த குட்டிக்கு drip போடணும்  அப்புறம் எழுதுறேன்....)

கரையான்

1 கருத்து: