சைவ சமய சித்தாந்தங்களை தீவிரமாகக் கடைபிடிக்கும் எங்கள் குடும்பங்களில் யாரேனும் நோய்வாய்ப் பட்டிருந்தால் திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடி மனமுருக பிணி தீர்க்க வேண்டிக் கொள்வது வழக்கம்.
பதினோரு பாடல்கள் கொண்ட கோளறு பதிகம் கோள்கள் ,நட்சத்திரங்கள்,கொடிய நோய்கள் ,இயற்கை சீற்றங்கள் ,மிருகங்கள் ,பருவக் கோளாறுகள் ,
கெட்ட காலங்கள் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்பது நம்பிக்கை .
கூட்டுப் பிரார்த்தனைகளின் பலன் எப்போதுமே நிச்சயம் பலன் கொடுக்கும்.
தீபாவின் உறவினர் அனீஸ் நலன் பெற கோளறு பதிகத்தில் இருந்து ஒரு பாடல் மற்றும் அதன் விளக்கம்
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
விளக்கம் ......
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.
இது போல கிறிஸ்துவர்களும் ,முகம்மதியர்களும் எல்லா சமயத்தினருமே
அவரவர் வழிபாடுகளை செய்கின்ற தருணத்தில்
கணப் போது அனீஸ் அவர்களின் உடல் நலனுக்காக மற்றும் தீபாவின் மன அமைதிக்காக
பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.
மனமுருக செய்கின்ற பிரார்த்தனைகளுக்கு ஈடான மருந்து வேறேதும் இல்லை.
Chocks
i will do.
பதிலளிநீக்குkaraiyan.