செவ்வாய், மே 03, 2011

மனதில் தோன்றியது.....

கனவுகாணுங்கள் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதுவாக கனவு காணுங்கள்....இது அனுபவம் வாய்ந்த இந்திய அறிவியலார் முன்னாள் குடியரசு தலைவர்  டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வார்த்தை.... நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாள் நான் காணும் இந்த கனவுகள் மெய்ப்படும், (என் அரசியல் கனவு உட்பட  இது என்னுடைய திடமான நம்பிக்கை.)...பலருடைய அறிவுரைகளையும் நான் காது கொடுத்து கேட்பதுண்டு, அது இலவசமாக வந்தாலும்  or at a price , அறிவுரை கொடுக்க எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு, அதற்படி நடக்க நடக்காமலிருக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு. நண்பர் செந்தில் அவர்களின் அறிவுரையையும் கண்டிப்பாக எடுத்து கொள்வேன். தனியார் துறையில் பணி ஆற்றுவதால் சில பல கஷ்டங்கள் இருந்தாலும்(எப்போதும் தலைமேல்  கத்தி தொங்குவது போன்ற ஒரு உணர்வு) சில நல்ல விஷயங்களும் உண்டு, நமக்கு நம் திறமையை பொறுத்து எப்போதும்  ஒரு demand இருந்து கொண்டே இருக்கும் , நம் வசதிக்கு பணி இடத்தை மாற்றி கொள்ளலாம், என்னைப்போன்ற மிக குறுகிய வாய்ப்புகள்(இந்தியாவில்) உள்ள துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெளி நாடுகளில் மிக அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் அதீத திறமைசாலியாக இல்லையென்றாலும் செய்யும் வேளையில் ஓரளவுக்கு சின்சியராக இருந்தாலே மத்தியகிழக்கு நாடுகளில் ஓரளவுக்கு குப்பைகொட்டி விடலாம். செந்தில் போன்றவர்கள் தனியார் துறையில் இருந்திருந்தால்  மிக சிறப்பான நிலையை
 அடைந்திருக்கலாம் என்பது என் கருத்து.   நான் இப்போது பணி புரியும் இடத்தில் இதுவரை உற்பத்தி முதலாளிக்கு திருப்திகரமாக இருப்பதால் நான் கேட்கும் வசதிகள் உடனே கிடைக்கின்றது, சம்பளமும் என்னை திருப்தி அடையும் வகையில் உள்ளது, நான் முன்னர் இந்தியாவில் பணி செய்த இடத்தில்
எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கிட்டத்தட்ட் ஆறு மடங்கு சம்பளம் 
வாங்கினாலும் எப்போது நான் இந்திய செல்வேன் என்ற எண்ணம் எப்போதும் மனதில் அரித்துக்கொண்டே
இருக்கிறது. வெளிநாட்டில் பணி புரிவதால் நான் சம்பாதிக்கும் பணத்தை
எந்தவித ஒளிவு மறைவும் இன்றி தாயகத்தில் முதலீடு செய்யலாம்,
வருமான வரி பற்றிய கவலை இல்லை. ஆகவே என் தேவை அளவுக்கு சம்பாதிக்கும் வரை
தொடருவேன்....

கரையான்.

(இப்படி எல்லாம் எழுதியதால்தானே செந்தில் அறிவுரை கொடுக்கவாவது
பிளாகுக்கு வந்தான்.....)
,  

3 கருத்துகள்:

  1. Though we earn a lot we don't have the peacefulness and enjoyment of our father's and granpa's generation.They spend lot of time with family.Now we sacrifice so many things just to uplift our life style.As a elementary school teacher my father can make 5 children to a position in limited income.Now I feel not satisfied though earnings are much much more.
    I am aiming towards what i want than what i need just to satisfy the society
    Chocks

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3 மே, 2011 அன்று 10:53 PM

    Podhumendra Maname sirandha selwam.Adharkkaaga,munneruwadharkku ,muyarchi seiyyaamal irukkakkoodaadhu.
    BHAI.

    பதிலளிநீக்கு
  3. Amen to Fudail and Chocks..I am positive that the next generation will long for the "simple times and peace" that they had when they were kids just like how we long for the days of our grandparents. But as our income goes up, so does our standards and our wants not needs. So we try to upgrade and in the process have to work harder to make ends meet. I know that many families that I know here are trying to downgrade their lives to live in smaller houses with lesser incomes and instead seek the simple joys, playing board games as a family instead of watching TV, visiting with grandparents instead of vacationing somewhere else and sharing meals doing volunteer work on weekends instead of working. So if we make the right choices we can have a simple life with peace no matter where we are.
    Gujili

    பதிலளிநீக்கு