சென்ற வாரத்தில் நண்பர் ஒருவர் தமிழகத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருடைய குடும்ப நண்பர் சவுதியில் பணி புரிய வந்து மிகவும் கொடுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் அவருக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார், இந்த ஊரில் வெளிநாட்டிலிருந்து வந்து பணி புரியும் அனைவருமே அடிமைகள்தான், இதில் ஒரு அடிமை மற்ற அடிமைக்கு என்ன வழியில் உதவி செய்ய முடியும் என எண்ணி கொண்டு நண்பருக்கு என்னால் ஆன உதவிகளை செய்வதாக உறுதி அளித்தேன், மிக நீண்ட தேடலுக்கு பின் அவருடைய இருப்பிடம் சென்று அடைந்தேன், அது ஒரு labour camp (hitler காலத்து concentration camp போலதான் இருந்தது), அங்கு மொத்தம் இரெண்டாயிரம் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர், அதில் கிட்டத்தட்ட எண்ணூறு வங்காள தேசத்தவர்கள், மொத்த தொழிலாளர்களுக்கு பத்து கழிப்பிடங்கள் மட்டும்தான், அதிலேயே குளிக்கவும் வேண்டும்.காலையில் பணிக்கு செல்லும் முன் அந்த இடத்தில் நடக்க கூடிய அடிதடியை மனதில் நினைத்து பார்த்தேன். அந்த கழிப்பிடங்களுக்கு வெகு அருகிலேயே குடிநீர் தொட்டி. அறைகள் அனைத்தும் container - களை மறு வடிவமைத்து செய்திருந்தார்கள், ஒரு container -ல் பதினெட்டு பேர் தங்கி உள்ளனர், நான் சென்று பார்த்த நண்பர் கணினி துறையில் பட்டம் பெற்றவர், சென்னையில் அஜென்ட் supervisor வேலை என்றும் 1200 riyal மாத சம்பளம் என்றும் கூறி அனுப்பி உள்ளார், இங்கு வந்த வுடன் தரை துடைப்பது, சுத்தம் செய்வது என்ற வேலைகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் சம்பளமும் 900 riyal ஆக குறைக்கப்பட்டுவிட்டது. பல்லைகடித்து கொண்டு வேலை செய்தாலும், நான்கு மாதத்தில் இரண்டு மாத சம்பளம் மட்டுமே கொடுத்து உள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் இவரால் வேலை செய்ய முடியாமல், ஊருக்கு செல்வதாக கூறி உள்ளார், உடனே அவரிடமிருந்த work permit அட்டையை பறித்துக்கொண்டு, காம்பில் தங்கி இருக்குமாறு கூறி விட்டார்கள், வேலை செய்யாததால், காண்டீனில் உணவு சாப்பிடவும் தடை விதித்து விட்டார்கள், அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லவும் முடியாது ஏனென்றால் அவரிடம் எந்த விதமான அடையாள அட்டையும் இல்லாததால் எங்கும் வெளியிலும் செல்ல இயலாது, அந்த காம்பின் உள்ளேயே வேலை செய்பவர்கள் நடத்து பெட்டிக்கடையில் பிஸ்கட், ஜூஸ் என கிடைத்ததை உண்டு நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார், நான் அவர் நிலையை பார்த்து அதிர்ந்து விட்டேன், பின்னர் அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசி, அருகிலிருந்த ஓட்டலுக்கு என் காரிலேயே அழைத்து சென்றேன்(அவரிடம் அடையாள அட்டை இல்லாமல் எங்கள் இருவரையும் காவல் துறையினர் பிடித்தல் எனக்கு 10,000 riyal fine போட்டு விடுவார்கள், ஒரு பயத்துடனே அழைத்து சென்றேன்) சாப்பிட வைத்து பின்னர் அவருக்கு தேவையான சில உணவு வகைகள், பிஸ்கட்,ஜூஸ் போன்றவற்றை வாங்கி கொடுத்து விட்டு செலவுக்கு பணமும் கொடுத்தேன். அவரிடம் பேசும்போது அவருடன் இன்னும் நிறைய பேர் தமிழகத்திலிருந்து வந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்கள் முதுநிலை பட்டதாரிகள் எனவும் கூறினார், ஒருவர் MBA பட்டதாரி, ICICI bank -இல் செய்து வந்த வேலையை (மாதம் 13000 சம்பளம் என்பதால்) விட்டு விட்டு இங்கு அதை விட இரண்டு மடங்கு கிடைக்கும் என வந்தாராம், வந்த பின் வெறும் 450 riyal தான் சம்பளம் என கூறி அக்ரிமென்ட் இல் கையெழுத்து போட சொன்னார்களாம், அதனால் வேண்டாமென்று திரும்பி சென்று விட்டார்கள் (அவர்கள் இங்கு வர கிட்ட தட்ட ஒன்னரை லட்சம் செலவு செய்தது தண்டம்தான், திரும்ப கிடைக்காது) இன்னொருவர் B.E(ECE) படித்தவராம் இப்போது தரை துடைத்து கொண்டு இருக்கிறார் . இப்படி பல கதைகளை பேசி விட்டு அவருடைய சோகத்தை கொஞ்சம் குறைத்து விட்டு வந்தேன்.
கரையான்.

My GOSH - this is just heart-breaking! Wow, so what is the status of this guy now? Can he just go back home? Thanks for being a good samaritan Karayaan - afterall isn't this what life is all about? All of us don't have to be a Gandhi or Mother Teresa but as best as we can, we should help our neighbor who could be next door or next town or state.
பதிலளிநீக்கு"Love your neighbor as yourself"
Thanks for setting a great example for your family and friends;
BTW For the record I am not ice vachufying!! Good acts of kindness always have to be appreciated.
Gujili
I used to meet our tamil friends every week.My humble request to them is not to bring anybody without verifying the credentials of the employer.
பதிலளிநீக்குBHAI
Now the guy says to me that he will work here in this company for a lesser salary and finish his contract(three years). He says that he can't go back home as he has borrowed about a lakh for coming here.
பதிலளிநீக்குkaraiyan.
Yenna solluvathu..Alla avargalaip paarthu kondu thaanirukkiraar.
பதிலளிநீக்குChocks
Yes.Chocks you are correct.The owners will be severely punished in the HereAfter.
பதிலளிநீக்குBHAI.