திங்கள், பிப்ரவரி 28, 2011

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.? தயங்குகிறோம்.? எது கடினம்.?

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”- சாக்ரடீஸ். 
சிந்தனைசெய் மனமே! மனிதனின் பலம் எதுஎது சிந்தனையார் அறிவாளிபடித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை? 
நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளாஇது சரியாநிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? 
மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதாவறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச் சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதாபெரிய கோடரியால் மரத்தை வெட்டிச் சாய்ப்பதா? 
கொடிய போர்க்களத்தில் உயிரை பணயமாக வைத்து முன்னேறிச் செல்வதாஇவைகள் யாவும் கடினமான வேலையா?
இல்லைஇல்லைஇல்லவே இல்லை! 
நம்மில் அநேகருக்கு இவைகள் யாவையும் விட மிகக் கடினமாக வேலை ஒன்று உண்டு. அதுதான் சிந்திப்பது!
மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எதுஎத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோஅத்தனையும் விட உயர்வானது எதுசிந்திப்பது! ஆம். அதுவேதான்.
மனிதனின் பலம் எது? 
குதிரையைப் போல ஓட முடியுமாபறவையைப் போல பறக்க முடியுமாயானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமாசிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதாஉறுதியான கொம்புகள் உள்ளதாநீண்ட துதிக்கை உள்ளதாஇல்லையே!!
நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமாஅதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே! 
மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? 
எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எதுஅதுதான் மனிதனின் சிந்தனையின் பலம்!
அதுதான் ஆறாவது அறிவு:
காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனையால் புதிய புதிய வழிகளையும்புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து உலகத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.
ஆனால் நம்மில் அநேகர் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறாவது அறிவான மனிதனின் மிகச் சிறந்தபலமான இந்த அறிவை பயன்படுத்துகிறோமாஇந்த அறிவு தேவை இல்லை என்று மூட்டை கட்டி அட்டாலியில் போட்டு விட்டவர்கள் அநேகர். அநேகர் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த மூளையை எடுத்துச் செல்வதே இல்லை.
எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால் தலை தலையாக இல்லை. என்ன ஆச்சுதலை வாலாக மாறிவிட்டது!
எது ஆடுகிறதோ அது வால்.
எது சிந்திக்கிறதோ அது தலை.
நம்மில் அநேகர் பிறர் சொல்லை ஆமோதிக்க தலையாட்டுவதற்கு மட்டுமே தலையை பயன்படுத்துகிறார்கள். சிந்திப்பதற்கு அல்ல. அப்போது அது வால்தானே?!
மறுப்பது ஏன்?ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஏன் சிந்திக்க தயங்குகிறோம்.
அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! 
நடக்குதாஇது போதும்டா சாமி. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப் போகுங்கோ. 
போகிற போக்கை மாற்றபுதிய வழி காண அநேகருக்கு ஒரு தயக்கம். ஆறுகள் கூட தான் போகும் வழியை மாற்றலாம். ஆனால் இந்த சாதா மனிதர்கள் யாரும் தன் போக்கை மாற்ற விரும்புவதில்லை.
மாறுபட்டு சிந்திக்கவேறுபட்டு செயல்படஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வுநம்மை மாறுபட்டு சிந்திக்கநமது கூட்டத்தை தாண்டி வர அனுமதிப்பதில்லை. ஆனால் சிந்திக்காத மனிதர்கள் செம்மறியாட்டு கூட்டங்கள்.
ஒரு புகை வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின் ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.
அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள்இந்த உலகை மாற்றியமைப்பவர்கள்இந்த உலகை உருவாக்குபவர்கள் சிந்திக்கும் சில மனிதர்களே! அவர்கள் ஆயிரத்தில் ஒன்று இருப்பது படு அபூர்வம்தான்.
இப்படி சிந்திப்பவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் ஆன்மிக அறிஞர்களாகவும்அரசியலில் பெரிய தலைவர்களாகவும்சிறப்புற்று விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற மாளிகையை கட்டும் உன்னத சிற்பிகள் இவர்களே!
கோபர்னிக்கோகலிலியோநியூட்டன்ஐன்ஸ்டீன்டார்வின்எடிசன் இவர்கள் அறிவியல் புரட்சி செய்தவர்கள்.
வால்டேல்ரூஸோகாரல் மார்க்ஸ் இவர்கள் அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
புத்தர்ஏசுநபிகாந்தி போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் உலகை புரட்டிப் போட்ட உத்தமர்கள். 
எது சிந்தனை?
நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.
இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சிமனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!
கணிதத்திற்கு விடைகாண முயலும்போதுபுதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போதுநாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.
பிரச்சனைகளை அலசி ஆராய்தல் ((Analyzing), கணக்கிடல் ((Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும். 
ஒவ்வொரு பிரச்சனையும்ஒவ்வொரு சிக்கலும்நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.
இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும்தடம் மாறிப் போகும். 
ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர்ஒரு பேனாகொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டுஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல்அரசியல் அறிஞர்.
யார் அறிவாளி? 
நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளாஇது சரியா?நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா?
எவர் நல்ல உணவுகளையும் உண்டுகடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. 
அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். 
நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா? 
படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன். 
படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை ?ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா? 
ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது. 
எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோஎங்கே சிந்தனை இருக்கிறதோஅவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள். 
செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.
தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!
அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.
கார்பரேட் நிறுவனங்கள்
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும்புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள். 
இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.

நன்றி
வஞ்சூர் வளைப் பூவிலிருந்து
தொகுப்பு:பாய்.

4 கருத்துகள்:

  1. Major trouble for human being is the sixth sense.If we don't have, we could be like a bird free from the fear of death.
    We create everything from construction to destruction though we know the life is not permenent.

    Chocks

    பதிலளிநீக்கு
  2. செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை
    i dont understand what is written. anyway thanks bhai.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. Bhai - I can definitely relate to my experience with students regarding padippu without sindhanai.
    Gujili

    பதிலளிநீக்கு