செவ்வாய், பிப்ரவரி 22, 2011

Good Samaritans - Part 1

ஏறக்குறைய 18  வருடங்களுக்கு முன்னால்அமெரிக்காவிற்கு வந்தேன்.  இந்த ஊரில் படிக்கச் வரும் மத்த graduate மாணவர் போல் என் வாழ்கையும் ஆரம்பித்தது. நல்ல இந்திய நண்பர்கள் எனக்கு roommate ஆக இருந்ததால்  சமைக்க, car ஓட்ட, மற்றும் இந்த ஊரில் வெள்ளை காரரிடம் எப்படி நடந்து கொள்வது என்றல்லாம் கற்று கொடுத்தனர். அவர்களுக்கு கோடி நன்றி. நான் church செல்வதால் சீக்கிரம் வெள்ளைக்கார நண்பர்களுடனும் பழகி விட்டேன். முதல் வருடம் thanksgiving இற்கு, ஒரு குடும்பம் என்னை அவர்கள் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்தனர் . அவர்கள் வீடு ஒரு சிறிய trailer. அவர்களுக்கு 6 குழந்தைகள். அதன் மத்தியிலும் அந்த அம்மா சமைத்து சாப்பாடு போட்டார்கள்; 6 குழந்தைகளும் வயது : 9 மாதம் முதல் 16 வயது வரைக்கும்; எல்லா குழந்தைகளும் சமத்தாக ஒழுங்கா table இல் உட்கார்ந்து தொந்தரவு ஏதும் கொடுக்காமல் சாப்பிட்டனர்.  உருள்ளை கிளுங்கு தவிர வேறு ஏதும் என்னால் சாப்பிட முடியவில்லை, ஏனென்றால் எல்லாம் மாட்டு கறியும் பன்றி கரியுமாக  இருந்தது, அவர்களுடைய hospitality இன்னும் எனக்கு மறக்க முடியாது. அவர்களுக்கு அதிக பணம் இருந்த மாதிரி தெரியவில்லை. எனினும் தங்கள் அன்பை என்னிடம் பகர்ந்து கொண்டது எனக்கு  இன்றைக்கும் மறக்க முடியாது.
அந்த நல்ல அனுபவங்குளடன் சில தமாஷான அனுபவங்களும் உண்டு. நானும் என் தெலுங்கு roommate  கோடைகாலத்தில் நடக்கும் விவசாயர் சந்தைக்கு  சென்றோம். இங்கு காய்கறி வளரும் காலம் குறிகிய காலமாதலால்,   விவசாயர் சந்தைக்கு போனால்   வீட்டில் விளைந்த fresh காய்கறிகள் கிடைக்கும். எங்கள் இருவரையும் பார்த்த விவசாயர் ஒருவர், நீங்கள் எந்த ஊரில் இருந்து இங்கு படிக்க வந்தீர்கள் என்று கேட்டார். எங்கள் ஊர்  தென் இந்தியா என்று சொன்னோம். உடனே அவர் நீங்கள் மூத்த பிள்ளைகளா என்று கேட்டார். இது ஒரு வினோதமான கேள்வி ஆச்சே என்று யோசித்தோம்.  எனினும் மரியாதை காக கேள்விக்கு நங்கள் இருவரும் மூத்த பெண் பிள்ளைகள் என்று பதில் சொல்லினோம். நீங்கள் இருவரும் மூத்த பெண் பிள்ளைகள்  என்றால் எப்படி தப்பித்தீர்கள்?  என்று கேட்டார். எங்களுக்கு  ஒண்ணுமே புரியவில்லை. நீங்கள் ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் என்று வினவினோம். அதற்கு அவர், நான் நேற்று தான் டிவி யில்  பெண் குழந்தைகளை கொலை 
செய்வதை பற்றி ஓர் ப்ரோக்ராம் பார்த்தேன். தென்  இந்தியாவில் அந்த கிராமத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் உடனே கொலை செய்வார்களாமே,  ஆகையால் நீங்கள் எப்படி தப்பித்தீர்கள் என்று கேட்டார்.  CNN channel இல் உசிலம் பட்டி யில் நடுக்கும் female infanticide பத்தி program பார்த்து இந்த விவசாயி கலங்கி போய் இருந்தார். நானும் என் roommate உம் துடுக்காக -  எங்கள் அம்மா எங்களை ஒரு சின்ன  படகில் வைத்து எங்களை நதியில் விட்டார்கள்; எங்கள் படகை பார்த்த ஒரு ராஜாத்தி எங்களை தத்து எடுத்தாள் என்று கூறிவிடலாம் என்று யோசித்தோம். ஆனால் அது நல்லா இருக்காது என்று நினைத்து அவரிடம் எங்கள் ஊரு உசிலம் பெட்டி இல்லை, சென்னை என்று சொன்னோம். இந்த மாதிரி கொடுரமான செயல்கள் கிராமங்களில் உண்டு, ஆனால்  சென்னையில்  எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் கிடையாது என்று கூறினோம். எனினும் எங்களை பார்த்து இரக்க  பட்டு சில காய்கறிகள் எல்லாம் இலவசமாக கொடுத்தார்.
நல்ல  மனுஷன்..
குஜிலி


6 கருத்துகள்:

  1. Excellent recollection Gujili.Keep going.Kaaikari wiyaabaariyidam 'manidha neyam' melongi irundhirukkiradhu.
    BHAI

    பதிலளிநீக்கு
  2. yes the problem is the international media blows many things out of proportion and adds lots of spices to the story to sensationalise it, but never shows the positive aspects of india like the"the head of the planning commision of india" is a woman", the leader of opposition is a woman and the speaker of the parliament is a woman. i accept it is a criminal act by a small section of people, this has to be clearly shown in their programme. I faced many such situations in saudi. Probably this programme would have been shot and reported by a woman.
    Gujili Keep posting your experiences in US.
    Karaiyan.

    பதிலளிநீக்கு
  3. Gujili..
    You have registered the US life in very interesting way.Hope you will contine the same with colourful experiences.

    Chocks

    பதிலளிநீக்கு
  4. Hey Stars,
    Yes I will try to blog more of these instances whatever my senile mind can remember. But you are right - the press definitely emphasizes more on shows that denigrate the developing countries vs the good that is happening. But this was 18 yrs ago and there are very positive documentaries about India which show it in a relatively unbiased light. To the extent that I am learning more about the current advances because I am still stuck in 1992 India.

    பதிலளிநீக்கு
  5. I meant to say - there are positive documentaries that they show now about India compared to before which is encouraging.
    Gujili

    பதிலளிநீக்கு