மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை இருக்கும், அந்த மாதிரியான ஆசைகளை இந்த பகுதியில் நண்பர்கள்/நண்பிகள் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்...
வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்கள் பெரும்பாலானோரின் பொதுவான ஆசை தேவையான அளவுக்கு சம்பாதித்து விட்டு ஊரில் கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி கிராமத்தில் வீடு கட்டிக்கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என்பதே. என்னுடைய ஆசை இதிலிருந்து மாறுபட்டது, போதுமான அளவு( எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும் போதும் எனற மனம் வரப்போவதில்லை ) சம்பாதித்து, சென்னை அல்லது வேறு ஏதாவது தமிழக நகரத்தில் ஒரு flat வாங்கி நகர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே. படிப்பை முடித்த நாள் முதல்(Unikay Hatcheries காலம் முதல் இது நாள் வரை) என் பணி நாட்கள் கிராமங்களிலேயே ஓடி விட்டது. செட்டிநாடு குதிரை பண்ணையில் பணி புரியும்போதும் நான் வசித்தது குக்கிராமம், இப்போது சவுதியில் பணி புரிவது மற்றும் வசிப்பதும் ஒரு குக்கிராமத்தில்தான். கிராமத்தில் வாசிப்பதில் பல சவுகரியங்கள் உண்டென்றாலும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. செட்டிநாடு குதிரப்பன்னையில் பணி புரியும்போது அருகிலிருக்கும் கிராம மக்கள் என்னையும் அவர்கள் குடும்ப உறுப்பினராகவே நினைப்பார்கள், காயத்ரி ரெண்டரை வயதில், அவளாகவே, பன்னையைவிட்டு வெளியே சென்று, பக்கத்து கிராமத்திற்கு சென்று விட்டாள், அங்கிருந்தவர்கள், பொறுப்பாக அழைத்து வந்து வீட்டில் விட்டு சென்றார்கள், நகரத்தில் இருப்பவர்களின் அவசர வாழ்க்கையில் எத்தனை பேர் இப்படி செய்வார்கள் என்பது சந்தேகமே. என் மனைவி அருகில் உள்ள கிராம குழந்தைகளுக்கு இலவசமாக மாலை வகுப்புகள் எடுப்பாள்(அவளுக்கும் பொழுது போக வேண்டுமே...குக் கிராமத்தில் பொழுதுபோக்கும் அம்சங்கள் குறைவு, மேலும் அப்போது எங்கள் வீட்டில் டி.வீ. சீரியல் தொல்லையெல்லாம் கிடையாது ), அந்த பெண் குழந்தைகளில் ஒன்று இப்போது கல்லூரி முடித்து அவள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பி, சவுதியில் இருக்கும் என் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து கண்டிப்பாக தன் திருமணத்திற்கு வர வேண்டும் என கூறுகிறாள். இந்த பாசம் சிடியில் கிடைக்காது, இருந்தாலும் நகர(நரக) வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை என்னை விட மாட்டேன் என்கிறது....
என்னுடைய ஆசையை சொல்லி விட்டேன்.....உங்கள் ஆசைகளை சொல்லுங்கள்...சென்னை நட்சத்திரங்களே......(குறிப்பாக நகரத்தில் வசிக்கும் சொக்கன், பாய்,தீபா, தாஸ், செந்தில் போன்றோர் கண்டிப்பாக எழுதவும், குஜிலி அமெரிக்க கிராம வாழ்க்கையைப்பற்றி எழுதலாம்)
கரையான்.
I want to settle down in my native hamlet on the banks of Tamiraparani-I have house ,plot,paddy fields and garden.The environment is greener there.But,My wife and children want to settle in Naragam[Chennai].I was not having enough funds to buy a flat or house.This has forced me to Gulf to save some lakhs.I purchased a 2020 sq.ft. plot between Poonamallee and Avadi.I don't know when I will build a house there.Until then I have to toil in desert.
பதிலளிநீக்குBHAI.
Anytime I plan and dream of something, it never happens or comes true. So I have learnt to take life as it comes and not plan much except for day to day. My life has been full of surprises, good ones mostly sometimes on a day to day basis. But I still have some desires whether they get fulfilled or not is another matter. I would like to retire in a warmer environment with the freedom to travel to all the beautiful natural wonders and appreciate God's creation, taste different cuisines and enjoy the simple things in life.
பதிலளிநீக்குGujili
Ok Guys:
பதிலளிநீக்குI have three flats in India,two in B'lore and one in Mysore. I would like to build a house in a hill station maybe in the US but which will be like a traditional south Indian village house with a central courtyard,tile roof,teak wood pillars. My dream retirement is to have a long easy chair,a cup of tea and a pile of wonderful books to read and peace of mind of knowing I earned all this because I did my duty well. Only time will tell if all this will come true but till then I will think positive.
GFK
Ul naattu aatkalum,aasaigalai yeludha wendum.
பதிலளிநீக்குBHAI.
please write it in the main content in tamil not in the comment.
பதிலளிநீக்குkaraiyan.