ஞாயிறு, ஜனவரி 09, 2011

Kurangu Manam Vendum

பேரானந்தம்
பிரம்மச்சர்யம்.

உன்னிலை உணர்ந்து
உறவுகள் தொலைத்து
நான் எனும் அகந்தை
களைந்த பின் உனக்கு
பிறவிகள் இல்லா  
சொர்க்கம் நிச்சயம்.

மானுடப் பதரே
மனமே குரங்கு.
தாவும் குரங்கை
அகத்துள் அடக்கு.
வெளியே விட்டால்
வீணாய்ப் போவாய்...

என்று மிரட்டி
ஆசிகள் வழங்கி
அருளுரை செய்த
ஆசிரம சாமி
இம்போர்டட் காரில்
ஊர்வலம்  சென்றார்.

மறுநாள் காலை 
செய்தித் தாளில் 
சிரிப்பாய் சிரித்தது 
சாமியின் ரகசியம்..

பேசத் தெரிந்த குரங்கொன்று 
சாமிகள் இடத்தில்
அருளுரை பொழிந்தது...
மனுஷ மனசு குரங்கென சொன்னீர் .
குரங்குகள் உலகில் 
சாமியும் இல்லை 
சாத்தானும் இல்லை 
ஆசைகள் இல்லை
துன்பமும் இல்லை
உண்ண...உறங்க... 
சந்ததி பெருக்க
குட்டிகள் பேணி  
மார்பில் சுமக்கும்
குரங்குகள் மனசில்
குறையென்ன கண்டீர்
பகுத்தறிவில்லா உயிரினம் ஆயினும்
போலிகள் இல்லா
ஞானிகள் நாங்கள்.
மானுடப் பதர்களே
மீண்டும் ஒரு முறை 
பரிணாம வளர்ச்சியில் 
குரங்குகளாக  
மாற்றம் காண்பீர்.

Chocks

3 கருத்துகள்:

  1. senra vaaram muzhuthum oivillaamal uzhaiththu kalaiththu, ulaichchalil iruntha manam lesaakkiyathu un kavithai. nanri chockaa. This kavithai must be saved for the future publishing of a book, titled "marunthu viyaapaariyin thamizh kaathal"
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. indhya thunai kandathilirunthu unaku oru cut out vaika karaiyanai udhavi ketkiren chokx
    msk

    பதிலளிநீக்கு