ஞாயிறு, ஜனவரி 09, 2011

இது அனந்த விகடனில் பிரசுரமாகிய ஒரு சுய முன்னேற்ற கட்டுரையிலிருந்து நம் நண்பர்களுக்காக கொடுக்கப்படுகிறது.... 

வேகம் பழகுவது எப்படி?


உங்களை ரெஃப்ரஷ் செய்து கொள்ள வாரத்தில் ஒருநாள் உங்கள் உடல் இயந்திரத்துக்கு முழு விடுமுறை அளியுங்கள்!
பரபரப்பான நேரங்களில் உங்கள் மூளையைக் காயவிடாமல், அடுத்த வேலைக்கான முயற்சியில் பயணிக்கத் தொடங்குங்கள்!
டார்கெட் என்ற வார்த்தையை சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்போர்ட்டிவ்வாக அணுகுங்கள்!
வேலைக்கு நடுவே சிறிது நேரம் இசை, புத்தகம் போன்ற விஷயத்தில் நாட்டம் செலுத்துங்கள். சமூக வலைதள விரும்பியாக இருந்தால் 10 அல்லது 15 நிமிடம் அதில் ரிலாக்ஸ் செய்யுங்கள்!

இன்று முடியாத ஒரு வேலையை, நாளை முதல் வேலையாகக்கொண்டு முடியுங்கள்!

அவசரத்துக்கும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல் படுங்கள்!

முறையற்ற வேகம்...

என்னென்ன பாதிப்புகள்?
எப்போதும் பரபரப்போடு திரிந்தால், அதீத கவனம் தேவைப்படாத சின்ன வேலையிலும் அதே பரபரப்பைச் செலுத்துவீர்கள். அது தேவைஇல்லை!
ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அதில் அப்படியே தயங்கி நின்றுவிடுவீர்கள். சோர்ந்து விழும் அந்த மனநிலையில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்!
நாள் முழுவதும் உழைக்கும் நீங்கள் நாள் இறுதியில் திருப்தி இல்லாமல் தூங்கச் செல்வீர்கள்!
நிம்மதி என்ன விலை என்பதைத் தேடி அலையும் நபராக அடையாளப்படுத்தப் படுவீர்கள்!
முறையற்ற வேகம் சங்கிலித் தொடர் போல உங்கள் எல்லா காரியங்களையும் கெடுத்து விடும். படபடப்பு அதிகமாகும். அந்தப் படபடப்பு எப்போதும் தொடர்ந்தால் 'ஹார்ட் அட்டாக்’ போன்ற ஆபத்துகள் விளையலாம். உஷார்!

கரையான்.

4 கருத்துகள்: