செவ்வாய், ஜனவரி 18, 2011

EQUINE VET

EQUINE VET -இங்கிராங்களே அப்படின்னா என்ன அவுங்க ரொம்ப பெரிய ஆளுங்களா, ஓவரா பில்ட் அப்  குடுக்கிறாங்களே உண்மையாவே ரொம்ப பெரிய ஆளுங்கள என்ன? நண்பர் ஒருவர் என் சக equine vet விட்ட பந்தாவில் கடுப்பாகி என்னிடம் கேட்ட கேள்வி... ரொம்ப பீத்திக்கிரீன்களே அப்படி என்னதான் உங்க  வேலையில விசேஷம் கொஞ்சம் சொல்லேன் என்றார்...(நண்பர் பாய் அவர்கள் மென்பொருளாளர்கள் பற்றி அனுப்பிய மெயில் போன்றதுதான் இது ஆனால் என் சொந்த சரக்கு)
"விசேஷம்னு பாத்தா ஒன்னும் கிடையாது" என தொடங்கினேன்.
எல்லா ஓனர்களும் தான் வாங்கும் குதிரைஎல்லாம் மில்லியன் டாலருக்கு வாங்கியதாக சொல்வார்கள் நாமும் நம்புகிற மாதிரி தலை ஆட்டி, ஆச்சரியத்தில் அடுத்த நிமிஷமே செத்து விழுதுடற மாதிரி ரியாக்ட் பண்ணுவோம்.(வெள்ளைக்காரன் குப்பைன்னு நெனைச்சு ஒதுக்கி தள்ளுறத மில்லியன் டாலர் குடுத்து இவர் எமாந்தாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்) அஞ்சு மில்லயொனுக்கு வாங்கினாலும் அஞ்சாயிரத்துக்கு வாங்கினாலும் முதலாளிக்கு மிஞ்சப்போவது சாணிதான் இருந்தாலும்  அவர் எதிர்பார்ப்பு அம்பது மில்லியன் அளவுக்கு இருக்கும், நாமும் அவ்வாறே ப்ராஜெக்ட் பண்ணனும்(அதோட குட்டி ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தானே விற்பனைக்கு போகும் அப்பதானே தெரியப்போகுது,அதப்பத்தி இப்ப கவலைப்படக்கூடாது). மில்லியன் டாலர் குதிரை போடுற குட்டி conformation கேவலமா இருக்கும், நாலு காலும் நாலு திசைக்கு போகும், குருடன் கூட வாங்க மாட்டான், இருந்தாலும் ஓனர்கிட்ட சொல்லும்போது "வாவ், எக்சலன்ட், கிளீன்" என்றெல்லாம் சொல்லி  அவர் மனதை குளிர வைக்க வேண்டும். அது ஒரு வழியா நம்ம சிகிச்சையெல்லாம் தாண்டி பொழச்சி கிடந்து ஒன்னரை வயசுல விற்பனைக்கு போனால் பத்தாயிரத்துக்கு கூட கேக்க ஆள் இருக்காது, விக்காம அந்த குதிரை நம்ம ஓனரோட ரேசிங் ஸ்டாபிளுக்கே போய் சேந்துடும், அங்க நம்ம டிரைனர் ரெண்டே மாசத்துல் tendinitis அல்லது fracture செய்து பைசா பெறாத குதிரை ஆக்கி விடுவான். மில்லியன்னு நெனச்சது ஒண்ணுமில்லாம மண்ணுக்குத்தான் போகும்.
(இதுக்கு நடுவுல நாங்க அடிக்கிற கூத்து இன்னொரு போஸ்டிங்கில் பார்ப்போம்)
கரையான்.

2 கருத்துகள்: