திங்கள், ஜூன் 13, 2011

முன்னாள் காதலிக்கு கடிதம்

 நம் நண்பர் பதிந்த காதலனின் கடிதம் போல் நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்ற விபரீத எண்ணத்தில் உதித்த கடிதம்.......

அன்பை மறந்த அன்பே,
என்னை விடவும் நல்ல OGPA அரசு வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாலும் புதிய காதலனை தேடிக்கொண்டாய் என்னையும் அப்படிதான் உன் முன்னாள் காதலனை உதறி தேர்ந்தெடுத்தாய், இன்று  தெரிகிறது  தட்டிப்பரித்தலின் துன்பம். கவலையில்லை எனக்கு வேறொரு பெண் கிடைக்காமல் போய்விடுவாளா   என்ன.... என் கவலையெல்லாம் இத்தனை நாட்கள் நான் விதைத்த கடலை வீணானதே என்பது மட்டுமல்ல, விளையாட்டு திடலில் உட்கார்ந்து பேசி கதைத்த நேரத்தில் பிடுங்கி கடித்த புல்  என்னை காரி உமிழாதா, ஒரு காதலை தக்க வைக்க முடிய வில்லையே உன்னால் என்று. 
பிள்ளை பசியுடன் இருப்பானே என்று அப்பாவுக்கு தெரியாமல் அம்மா  கொடுத்த பாக்கெட் மணி ஒரு நாளைக்கு ஐந்து ருபாய்  வீதம் உனக்கே செலவு செய்த வகையில் முன்னூறு நாளைக்கு மொத்தம் ஆயிரத்தைநூறு....
பைக்கிருந்தால்தான் காதலி அமைவாள் என்ற நண்பரின் அறிவுரையால் ஓசி பைக் வாங்கி பெட்ரோல் போட்டு உன்னை ஊர்வலம் அழைத்து சென்ற வகையில் ஒரு ரெண்டாயிரம்....
தெரியாத டென்னிஸ் விளையாடி கோப்பை வாங்கி வருவேன் என கூறி பயிற்சிக்கு பொய் சொல்லி தந்தையிடம் காசு வாங்கி  உன் பிறந்த நாளுக்கு பரிசளித்ததில்  ஆயிரம்.....
உன் மாமாவின் சித்தப்பாவின் பெரியப்பா மகனின் சகோதரன் வந்து என் கணக்கில் மெஸ்ஸில் மாத கணக்கில் உண்டு களித்த வகையில் மூன்றாயிரம்.....
ஆல் இந்திய டூரில் மாதம் முழுதும் உன் லக்கஜ் சுமந்த கூலி ஆயிரம்.....
(கழிப்பறையில் தண்ணீர் இல்லாமல் பக்கெட்-இல் தண்ணீர் சுமந்து வந்து அளித்தது  discount செய்து  விட்டேன்).
ஆக   மொத்தம் கூட்டி உன் செலவு ஏதும்  இருந்தால் (ஒரே  ஒரு முறை  பைக்கிற்கு parking கட்டணம்  நீ செலுத்தினாய்  அந்த  இரண்டு  ரூபாயை  கழித்துக்கொண்டு )
மிச்சத்தை  உன் தோழி  மூலமாக  திருப்பி அனுப்பவும் , முடிந்தால்  அவளிடம்  நான்கு  நல்ல  வார்த்தை என்னை  பற்றி  சொல்லவும்
இப்படிக்கு
என்றென்றும் காதலுடன்
காதலித்தோர் சார்பாக
கரையான்.

5 கருத்துகள்:

  1. Narpathil nai kunamnnu kelvipattirukken aana kathal kunamnnu ippathan puriyuthu

    Das.

    பதிலளிநீக்கு
  2. Bhai...
    kadhalikka villaiya...
    Illai..kadhali kidaikka villaiya..?
    Unmai sollavendum
    Chocks

    பதிலளிநீக்கு
  3. konjam paathiyileye publish aaki vittathu mannikkavum, draft il save seithirunthen, thavaraaka prasuram aaki vittathu...
    ippadikku...
    kaathali kidaikkaatha karaiyaan.

    பதிலளிநீக்கு
  4. I think I might know the recipient of this kadhal karayaan claims. Actually some of it may be true for a few of our batchmates heee heee..
    Gujili

    பதிலளிநீக்கு