சனி, ஏப்ரல் 09, 2011

மனித உரிமை

நம்ம ஊருல எதற்க்கெடுத்தாலும்  மனித உரிமை மீறல் என்று குரல் கொடுப்பத்தை பார்த்திருக்கிறோம், இந்த ஊரில் மனித உரிமை என்ற  ஒன்று இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான்  . நேற்று நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து சவுதி வந்தார், இங்கு ஒரு பண்ணையில் பணிபுரிய வந்திருக்கிறார், புதிதாக வருபவர்களுக்கு பெரும்பாலான நாடுகள் போலவே இங்கு விமான நிலையத்தில் கைரேகை மற்றும் கண் கரு விழி புகைப்படம் எடுக்கப்படும், அவ்வாறு எடுத்து பார்மாலிடீஸ் முடித்து வெளியே வர  மற்ற நாடுகளில் சில மணித்துளிகளோ சில மணி நேரங்களோ ஆகலாம், அவர் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரங்கள் வரிசையில் நின்றிருக்கிறார், இந்த நேரத்தில் அவர் தண்ணீரோ, உணவோ இன்றி, இயற்க்கை உபாதை கழிக்க வசதிகள் இன்றி தொடர்ச்சியாக நின்று உள்ளார்.  இந்தியாவில் கஷ்டம் என்று இங்கு வந்தபின்தான் அந்த கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது தெரிகிறது என்று புலம்பினார், வாழ்க்கை வெறுத்துபோய் திரும்ப போய்விடலாமா என்று நினைத்தாலும் போக முடியாது, கால் வலியில் சுரமே வந்து விட்டது, மேலும் அங்கிருந்த சவுதி காவல்துறையினர் எங்களை நடத்திய விதம், ஆடு மாடுகளை விட கேவலம் என்று கூறினார். ஒரு ஆளுக்கு இந்த டெஸ்ட்களை செய்ய குறைந்தது இருபது நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள், அதற்கடுத்து டீ சாப்பிட கால் மணி நேரம், கவுண்டரில் காத்திருக்கும் நபருக்கு நேரம் நன்றாக இருந்தால் டெஸ்ட் செய்யும் காவலருக்கு செல் போன் அழைப்பு ஏதும்  வராது, வந்து விட்டால் அவ்வளவுதான் அரை மணி நேரம் மேலும் காத்திருக்க வேண்டும். செல் போனில் பேசி முடித்தவுடன் எழுந்து கழிப்பறை அல்லது தம் அடிக்க சென்று விடுவான். அதை விட கொடுமை என்னவென்றால் அரபியில் மட்டும்தான் பேசுவார்கள், புதிதாக வந்தவனுக்கு அந்த பாஷை எப்படி புரியும் , அவனாக புரிந்து கொண்டு தவறுதலாக  எதையாவது 
செய்து விட்டால் கவுண்டரில்  உட்கார்ந்து இருப்பவனுக்கு  
கோபம் வந்து விடும், பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு அவனை
வரிசையின் கடைசியில் நிற்க வைத்து விடுவான், திரும்ப முதலில்
இருந்து காத்திருக்க வேண்டும்.
முதல் படியே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் இங்கு வாழ்க்கை
எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து  கொள்ள  இது  ஒரு
நல்ல அனுபவ பாடமாக இருக்கட்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன்.

கரையான்.

4 கருத்துகள்: