ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

சாய் பாபா பற்றிய இரண்டு பார்வைகள் -

டாக்டர் ருத்ரன் -மன நல மருத்துவர் பார்வை


 உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.




மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.



பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..

ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.

அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.

எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.

அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!

அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்....இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?

  With thanks from          http://rudhrantamil.blogspot.com/2011/04/blog-post.html

Comment in the same blog by a viewer

டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.







தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.






புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?




Chocks


3 கருத்துகள்:

  1. i pity rudran...his comments "othukki thallappadavendiyavai"
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Dr.Rudran's comments Muluwadhum "othukki thallappadavendiyavai" alla.
    Manidhanai கடவுள் என்று ninaitthaal,adhai wida madamai yedhuwumillai.
    Adhey manidhan,நல்ல காரியங்களை செய்து வந்தார் yendraal,adhu paarattap padawendum.
    BHAI.

    பதிலளிநீக்கு
  3. The only memory that comes to mind with respect to Saibaba is when we used to live in Ennore where my dad worked in the thermal power plant. Baba had a paid a visit to the colony and everyone wanted to go see him. I was perhaps 7 years or so and I heard all the hoopla about some big bakthan visiting Ennore. My neighbors piled up with their kids in a couple of the Jeeps to get his darshan at the local community center that was close to our colony. I decided that it would be fun and got into a jeep with a bunch of kids and rode with them. It sounded like fun and I sort of forgot to tell my parents about it. Well my parents had no idea where I was and they were searching all over the place. I eventually came back with the group of kids back in the Jeep after getting a darshan of Baba and had no clue what it was all about. I just wanted to hang out with my neighbor kids. I got home and realized that my parents had been frantically looking for me everywhere. Boy oh boy I got quite the punishment from both my parents once my dad got home; it was unforgettable! So even now if I think of Sai baba the punishment comes to my memory. I learnt never to leave the house without telling them where I was going that is until I went to college.
    Gujili

    பதிலளிநீக்கு