நம்ம எல்லாருமே ஒரு விஷயத்த தீவிரமா நம்பும்போது ஏதாவது ஒரு பக்கம் விமர்சனம் வந்தா சகிச்சுக்க முடியல என்பது கரையானோட சாய் பாபா பத்தின பதிவிலிருந்து கண்கூடாக தெரிகிறது.இதிலே நானும் விதி விலக்கில்ல.சாய் பாபா பற்றிய விமர்சனங்கள் இன்னிக்கு நேற்று இல்ல.ரொம்ப நாளாவே இருக்கிற ஒன்றுதான்.
இதுல என்ன ஒரு இடிக்கிற விஷயம்னா பாபா யாரையும் கட்டாயப் படுத்தி நன்கொடை வாங்கலே. ஆனா கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல சேர்த்த அல்லது சேர்ந்த சொத்துக்கு தண்ணி டேன்க்,பள்ளிக்கூடம், மருத்துவமனை மாதிரி சில ஆயிரம் கோடி செலவு பண்ணினா மிச்சமிருக்கிற லட்சம் கோடிய யாரும் கண்டு கொள்ளப் போவதில்லைன்கிற மாதிரி ஒரு அணுகு முறைங்கிறது கொஞ்சம் இடிக்கிற மாதிரி தெரியுது.எப்ப ஒருத்தர் சித்து வேலைகள பக்தர்கள மயக்கிரதுக்கு பயன்படுத்துகிராரோ அப்பவே ஆன்மிகம் அடிபட்டு அங்க பிசினெஸ் தொடங்கி விடுகிறதென்பது என்னோட கருத்து. உண்மையான ஆன்மிகம் சிவலிங்கத்தை கக்குவதிலோ மந்திரமாய் விபூதி கொண்டு வருவதிலோ இல்லை.அதை செய்பவர் கடவுள் என்றால் எல்லா magisianum கடவுள்தான்.நாம எப்பவுமே இறைத் தன்மை உடையவர்களை இறைவனாகவே வழி படத் தொடங்கி விடுகிறோம்.கொஞ்சம் நம்மை நாமே உள் நோக்கிப் பாரத்தால் அப்பப்போ நாமும் ஏதாவது சில தருணங்களில் இறைத் தன்மை அடைவது தெரிஞ்சிருக்கும். இது நிகழ்வது சிலருக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.இந்த உலகத்தில எந்த ஒரு நிகழ்வுமே தப்பு இல்லைங்கிற ஒரு சித்தாந்தம் உண்டு. எல்லாமே ஏதோ ஒரு நல்ல நிகழ்வை நோக்கிப் போகிற தடங்களுக்கான படிக்கட்டுகள் என்று நம்புகிற மனசு எல்லா நிகழ்வுகளையும் அதனதன் போக்கிலேயே எதிர் கொள்கிறது.ஒவ்வொரு ஷனத்திலும் நாம் வாழ்வின் திரும்பப் பெற முடியாத காலங்களை இழந்து கொண்டிருக்கிறோம். நமது தீராத கஷ்டங்களையும்,திரும்பப் பெற முடியாத கடந்த கால இழப்புகளையும் எப்போதோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லிப் போன வசை மொழிகளையும் மறக்க முடியாமல் நிகழ் காலத்தை அனுபவிக்காமல் எதிர் காலம் பற்றிய பயங்களோடு வாழ்வை எதிர் கொள்கிறோம்.எப்போது சக மனிதன் மேல் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாத அன்பும் அக்கறையும் ஏற்படுகிறதோ அந்தத் தருணம் கொடுக்கிற ஆனந்தம் அளவிட முடியாதது.அப்போது நம்மால் இறைவனை ஆழ் மனதிலிருந்து உணர முடியும். அதற்கு திருப்பதியோ, சபரி மலையோ.வேளாங்கண்ணியோ,மெக்கவோ சென்று தரிசனம் காணவேண்டிய அவசியம் இல்லை.நாற்பது வயதிலேயே மரித்துப் போன விவேகனந்தரிடத்தும் இறைத்தன்மை இருந்தது.மூப்படைந்து மறைந்த ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கடவுள் தன்மை இருந்தது.எல்லா மனிதரிடத்தும் ஏதோ சில தருணங்களில் கடவுள் வெளிப் பட்டுக் கொண்டுதானிருக்கிறார். அது வெளிப்படுகிற frequency வேண்டுமானால் மாறுபடலாம்.So நாம எல்லாருமே கடவுள்தான். ஆனா வெளிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி புல்லாய்ப்,புழுவாய் ,பூவாய் ,மரமாய் ,பறவையாய்ப்,பாம்பாய்,கல்லாய்,மனிதராய்த்,தேவராய்,அசுரராய் முகங்களை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நான் கடவுள்...அகம் பிரம்மாஸ்மி .
சொக்ஸ்
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல சேர்த்த அல்லது சேர்ந்த சொத்துக்கு தண்ணி டேன்க்,பள்ளிக்கூடம், மருத்துவமனை மாதிரி சில ஆயிரம் கோடி செலவு பண்ணினா மிச்சமிருக்கிற லட்சம் கோடிய யாரும் கண்டு கொள்ளப் போவதில்லைன்கிற மாதிரி ஒரு அணுகு முறைங்கிறது கொஞ்சம் illai ,nirayawe இடிக்கிறது.எப்ப ஒருத்தர் சித்து வேலைகள பக்தர்கள மயக்கிரதுக்கு பயன்படுத்துகிராரோ அப்பவே ஆன்மிகம் அடிபட்டு அங்க பிசினெஸ் தொடங்கி விடுகிறதென்பது என்னோட கருத்து.Bhayin karutthum adhuwe.
பதிலளிநீக்குMoreover,these type of so called "Babas",usually ,involves in sex scandals.
BHAI
I know Sai baba has done a lot of good stuff even though he obtained a lot of material gain in the process. I suppose a lot of folks benefited from his many philanthropic gestures. Not everyone is picky about where they get charity as long as it is charity. I have heard of many scandals about him but perhaps one of the things that I heard this morning sums it up when it comes to criticizing others for whatever it may be and that is "we shouldn't be surprised that the best of us have so much worse in us and the worst of us have so much good in us"; So I am going to keep that in perspective before I pass my opinion..
பதிலளிநீக்குGujili