இன்புளுயன்ஸ், சிபாரிசு செய்வது இவையும் ஊழல் மற்றும் லஞ்ச கணக்கில் வருமா வராதா.... என்றால் அதற்கு பதில் வரர்ர்ர்ரர்ர்ர்ரும் ஆனா வராஆஆது....... என்றுதான் வழ வழ கொழ கொழவாக பதில் அளிக்க முடியுமே தவிர நிலையான பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நான் இன்னாருடைய இன்னார் என்று கூறி நம் வேலைகளை முன்னுரிமை பெற்று விரைந்து முடித்து கொள்வது வரிசையில் இருப்பவருக்கு இன்னல் தோற்றுவிக்காதா என நாம் பார்ப்பதில்லை. நாம் எந்த சிறிய வேலையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய தொடர்புகளை பயன்படுத்தி முடித்துக்கொள்வது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய பழக்கமாகவே ஆகி விட்டது. என் மனைவி வங்கிக்கு சென்றால் நேராக மேலாளரிடம் சென்று என் தம்பி பெயரை சொல்லி நான் அவரின் அண்ணி (எங்கள் பகுதியில் என்னை யாருக்கும் தெரியாது மற்றும் எனக்கு எந்தவிதமான இன்புளுஎன்ஸ் இல்லை) என்று கூறி அவளுடைய வேலையை முடித்துக்கொண்டு வந்து விடுகிறாள்.
சவுதியில் ஒரு பண்ணையில் அந்த ஓனர் அவரின் குதிரையை covering செய்ய இந்த நாட்டு மன்னரின் பண்ணைக்கு அனுப்பினார், ஒரு பிஹாரி நபர் அந்த குதிரையை எடுத்து செல்லுமாறு பணிக்கப்பட்டார். அவர் எடுத்து சென்றவர், மன்னரின் பண்ணை வாயிலில் காவலர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என போன் செய்தார், அந்த முதலாளிக்கு இவர் சொன்னது புரிய வில்லை, என்னை அவருக்கு போன் செய்து விசாரிக்க சொன்னார், நான் என்னவென்று விசாரித்தேன்,மன்னர் இன்று அவர் பண்ணையில் ஓய்வெடுக்க வந்துள்ளார் அதனால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கூறினார். ஆனால் குதிரை இருக்கும் பகுதியில் அனுமதிப்பார்களே, அதுவும் உங்கள் முதலாளி பெயரை சொன்னால் அனுமதிப்பார்களே என்று கேட்டேன், இல்லை டாக்டர் சாப் முதலாளி பேரை சொன்னாலும் விட வில்லை என்று கூறினான் , நானும் அந்த சவுதி ஓனரிடம் எடுத்து கூறினேன், அவருக்கு அது மானப்பிரச்சினை ஆகி விட்டது, அவருடைய இன்புளுஎன்ஸ் ஐ உபயோகித்து அவனுக்கு குதிரையை மன்னரின் பண்ணைக்குள் எடுத்து செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார் . குதிரையும் covering செய்யப்பட்டு வந்து சேர்ந்தது, மாலையில் அவனிடம் நேரில் சென்று என்ன பிரச்சினை என்று வினவினேன், அதற்கு அவன் "டாக்டர் சாப் என்னோட இக்காமா(residence permit/identity card) எடுத்து செல்ல மறந்து விட்டேன், அதுதான் உள்ளே விட மாட்டேன் என்று கூறினார்கள், அதை முதலாளியிடம் சொல்லாமல் என்ன காரணமோ தெரியவில்லை உன் பெயரை சொன்ன பிறகும் கூட உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள் என்று கூறினேன்." "உன் பெயரை சொன்ன பிறகும் கூட" என்பது அந்த சவுதி முதலாளிக்கு கௌரவ பிரச்சினை ஆகி விட்டது.
இக்காமா என்பது இங்கு கர்ணனின் கவச குடலம் போன்றது எப்போதும் வைத்திருக்க வேண்டும், இது இல்லை என்றால் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
நம்ம ஊருல பிரதம மந்திரி இருக்கும் பகுதியிலிருந்து ஐந்து கி.மீ சுற்றுக்குள் நம்மள விட மாட்டங்க, நம்ம ஊரா இருந்தால் உன்னை ஓட விட்டு உக்காருற இடத்துல சுட்டிருப்பாங்க" என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.
கரையான்.
Influence and recommendation does not go that far in this country at basic levels but it definitely helps in the government. Everytime I am home, knowing people in the airport helps because I never have to stand in line while everyone is waiting in those long immigration lines to see their loved ones. I don't feel justified by that one bit, I have to confess. THe last time I was first at the baggage carousel but my suitcase was the last to come so I am sure my fellow passengers felt vindicated as they saw me bypass everyone on the immigration line but wait until the end to leave the airport! I felt justified too because using influence for personal gain trivial as the issue may be is not correct.On the other hand if one can use influence for a good cause such as getting govt to provide funds for feeding the poor etc, I think that is justified.
பதிலளிநீக்குGujili
தற்போது கோவிலில் இருந்து பாரளுமன்றம் வரை சிபாரிசு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.இது தவறு என்றாலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யாத வரையில் சட்டப் படி தவறில்லை என்பதால் எல்லாருமே சாதகமாக கொள்கிரோம்.இதில் ஜாதி,மத இணைப்புகளை பயன் படுத்துவது இன்னும் கொடுமையானது.இன்னும் ஆந்திரா போன்ற மானிலங்களில் விற்பனைப் பிரதினிதியின் ஜாதி பார்த்து மருந்துகள் வாங்குகிர கோழிப் பண்ணையாளர்கள் இருக்கிரார்கள்.மண்ணின் மைந்த்தர்களாக இருக்கிரார்களா என்று பார்த்து நிருவனங்களில் விற்பனைத் துரைக்கு ஆள் எடுக்கிர கொடுமை இன்னுமிருக்கிறது.
பதிலளிநீக்குசொக்ஸ்