செவ்வாய், செப்டம்பர் 20, 2011

எதிர்பாராதவற்றை எதிர்பார்ப்பது(expect the unexpected)-தான் விவசாயம்.

எதிர்பாராததை எதிர்பார்த்து நாற்காலியின் நுனியில் உட்காருவதுபோல் இருப்பதுதான் விவசாயம். நான் ஏற்கனவே என் நிலத்தில் தென்னை விவசாயம் செய்ய சொட்டு நீர் பாசனம் செய்ய அலைந்த கதையை சொல்லி இருந்தேன், எல்லாம் முடிந்து விட்டது நல்ல படியாக எல்லாம் நடந்து ஐந்து வருடத்தில் குலை குலையை காய்த்து தொங்கும் என எதிர்பார்த்திருந்தால் தென்னை மட்டை கூட மிஞ்சாத எதிர்பார்க்காதது தான் மிஞ்சும்.  வேலி அமைத்தாயிற்று, தென்னைக்கு குழி  பழித்து, உரமிட்டு, சொட்டு நீர் பாசன வசதி செய்து, தென்னைக்கன்றும் பதித்தாகி விட்டது, இன்னும் என்ன வளர்ந்து இளநீரோ தேங்காயோ பறிக்க வேண்டியதுதான் என சந்தோஷமாக இருந்தால், திடீரென மோட்டார் பழுதடைந்து விட்டது, பழுது நீக்க செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி என சேதி வருகிறது(unexpected). புதிய  மொடோர்தான் பொறுத்தியாக வேண்டும், அதுவும் உடனே செய்யப்பட வேண்டும், கால தாமதமானால் இருக்கும் தென்னங்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடும், சரி மொத்தம் எவ்வளவு செலவாகும் என்றால் புதிய மோட்டார் வாங்கி பொறுத்த அறுபது ஆயிரம் ஆகும் என்கிறார்கள், நாம்தான் வெளிநாட்டில் ரியாலாக வாங்குகின்றோமே பொருத்தி விட வேண்டியதுதான், வேறு வழி. நம்மூரில் இருக்கும் ஒரு சிறு அல்லது குறு விவசாயியால் இந்த செலவை  உடனே செய்ய முடியுமா, மனைவியின் தாலி முதல் வீட்டில்  உள்ள தட்டு முட்டு சாமான் வரை அனைத்தையும் அடகு வைத்தால்தான் முடியும்...இவை எல்லாம் மீட்க அடுத்த ஆண்டில் நிலத்தை  அடகு வைத்தாக வேண்டும்...இந்த தொடர்ச்சியான விளையாட்டில் எல்லாம் போக கடைசியில் மிஞ்சப்போவது விவசாயின் கோவணம் மட்டும்தான்.... 
 It is a vicious cycle...என்பார்களே இதுதானோ...

கரையான்.

2 கருத்துகள்:

  1. இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாத் துறைகளிலும் இருந்தாலும் விவசாயத்தில் அதன் தாக்கம் கூடுதலாகவே இருக்கிரது.கோவையைச் சுற்றியுள்ள நிறைய தென்னை தோட்டங்கள் காங்றீட் கட்டடங்களாக உரு மார்றிக் கொண்டிருக்கின்ரன.எனக்கு இத்தனை ஏக்கர் விளைனிலம் உள்ளது என்று பெருமை அடித்த காலம் போய் நகரின் மையப் பகுதியில் 2 பிளாட் இருக்கிரது என்று விவச்சயிகள் பெருமை பேசுகிரார்கள்.பன்னைப் பொருட்களுக்கு சரியான விற்பனை விலையும் கூலித் தொழிலாலிகளின் பட்ராக் குரையுமே விவசாயிகள் விளை நிலங்களை விற்று விட்டு அபார்ட்மென்ட்களில் குடியேரும் அவல நிலைக்குக் காரனமாகிவிட்டது.கோழிப் பன்னையாளர்கள் இன்னும் 5 ஆண்டுகளில் மக்காச் சோளம் பற்றாக் குரையால் மாற்றுத் தீவன மூலப் பொருட்கள் என்ன என்று இப்பொதே ஆய்வு,கருத்தரஙம் நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.விட்டால் வெரும் கடல் நீரைக் கொடுத்து 2.5 கி எடையும் முட்டைக் கொழிகளில் வருடம் 350 முட்டயும் எடுத்தாலும் ஆச்சரியப் படுவதர்கில்லை.அந்த அளவு தானியப் பற்றாக் குரையின் தீவிரம் எல்லோருக்கும் வயிற்றில் புளி காய வைத்திருக்கிரது
    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  2. OK - I know agriculture is no longer profitable but if many of the farmers forsake it we will be facing the biggest food shortage crisis. I know nature doesn't help at the right time and all the climate change of global warming does not help. Let us do what we can to avoid a food shortage epidemic!
    Gujili

    பதிலளிநீக்கு