புதன், செப்டம்பர் 21, 2011

எதிர்பாராததை எதிர்பார்(EXPECT THE UNEXPECTED)

எதிர்பாராமல் மோட்டார் பழுதானதை எழுதி இருந்தேன், தண்ணீர் இல்லாமல் தென்னங்கன்றுகள் கதி என்னாகுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் கன மழை பெய்து இன்னும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாமல் செய்து விட்டது(Expect the Unexpected). சொக்கன் எழுதியது போல இந்த நிகழ்வுகள் எல்லா துறைகளிலும் இருந்தாலும், அவர்களுக்கு வேறொரு வாய்ப்பு அல்லது துறை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு எப்போதும் உண்டு, விவசாயிக்கு அது இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நெல் பயிர் செய்பவர், திடீரென்று வேறு பயிர் செய்ய முடியாது.  கடல் நீரை கொடுத்து முட்டை இட வைக்க வேண்டாம், விவசாயம் செய்ய வழி பிறக்கும் என்றால் அதுவே பெரிய விஷயம். பெரும்பாலான விவசாயிகள் அவர்கள் இஷ்டப்பட்டு நிலங்களை விற்பதில்லை, விவசாய கூலி பற்றாக்குறை அல்லது தொழிலாளர்களின் அடாவடிபோக்கு, ஸ்திரத்தன்மை அற்ற விலை, யூகிக்க முடியாத தட்ப வெட்ப நிலை என பல விஷயங்களால் நஷ்டப்பட்டு நொந்து போன விவசாயி எப்படி தன் வாரிசுகளை விவசாயத்தில் ஈடு படுத்துவான். அடுத்த தலைமுறை எப்படி இருந்தாலும் விற்கத்தான் போகிறார்கள், அதை நான் விற்று அனுபவித்து விட்டு போகிறேன் என்ற மன நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்து விட்டதன் விளைவுதான் விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக காரணம்.
நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகள் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவோம், அல்லது நம் குழந்தைகளில் எத்தனை பேர் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவர். இந்த கேள்விக்கு பெரும்பாலும் பதில் ஏமாற்றமளிப்பதாகதான் இருக்கும். 
இடைத்தரகர்கள் தொடர்ந்து போடும் தூண்டில் வார்த்தைகள், கருப்பு/ஊழல்  பண முதலைகள்  மிக சிறந்த, பாதுகாப்பான முதலீடாக நினைத்து எவ்வளவு விலை வேண்டுமானாலும் தர தயாராக இருப்பது என பல காரணங்களால் விவசாயிகள் நிலத்தை விற்க தூண்டப்படுகிறார்கள்.

கரையான்.  

4 கருத்துகள்:

  1. "நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகள் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவோம், அல்லது நம் குழந்தைகளில் எத்தனை பேர் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவர்"
    I feel this is true while we are witnessing the fast growth in other lines.May be ikkaraikku akkarai pachchai.But everyone thinks that their dept is the trublesome than any other.Even a Medical Dr insisting their children to become a Dr just to take care of their hospitals
    Chocks

    பதிலளிநீக்கு
  2. As I mentioned earlier it is sad that many farmers have to sell their lands. I hope that we can come up with different methods to take care of that. I know that farmers used to get special subsidies at some point, I wonder if that exists anymore. Regarding expectations, the worldview has changed so much. No one can expect anything from any one and it goes for parents from children or children from parents. Today's world is not the same that you and I grew up with.
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Subsidies are there, as always the government fixes a price not taking into consideration the present cost of production, so most of the times the subsidies do not match the loss. THere is free electricity in tamilnadu, but the problem is farmers get power supply only for 6 hours a day. In six hours, you may be able to irrigate one or two acres. The cost of labout, fertilisers, pesticides are going up every year, but the price of paddy remains the same for years together. And to get the subsidies the bribes taken by the govt officials, so many other factors gives hard time to the farmer.
    karaiyan.
    ( I am not writing these to discourage anyone from getting into farming... it is only to enlighten the readers of the practical difficulties...eventhough i am writing all these i am still investing my hard earned money in my farming (ad)venture,, and planing to invest more..i am sure the future is food/agriculture industry...)

    பதிலளிநீக்கு
  4. Karayan is true.A day will come in India when Rice or Wheat will be like Petrol.
    BHAI.

    பதிலளிநீக்கு