சனி, செப்டம்பர் 03, 2011

லஞ்சம் பற்றி....

லஞ்சம் பற்றிய நம் கருத்துக்கணிப்பில் கால்நடை மருத்துவத்துறை மிக பின் தங்கி இருப்பது ஒரு வகையில் சந்தோசமாக இருந்தாலும் பொழைக்க தெரியாதவர்கள் உள்ள துறை என்று ஏளனத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற கவலையும் எட்டிப்பார்க்கிறது.ஏன் இந்த நிலை என்று நண்பர் பாய்,செந்தில்  அல்லது சொக்கன்தான் விளக்கம் அளிக்க   வேண்டும். சொக்கனை இதில் ஏன் சேர்த்தாய் என கேள்வி எழலாம், கொடுத்தவர் என்பதால் சொக்கன் பெயரை சேர்த்தேன், துறையில் பணி புரிந்தவர்கள் என்பதால் பாய் மற்றும் செந்தில் விலாவாரியாக எழுதலாம். சமீபத்தில் அரசு சொட்டு நீர்பாசனம் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம் என அறிவித்து உள்ளது. இதில் விவசாயியை விட விவசாயத்துறை அலுவலர்களுக்குதான் பயன் அதிகம். முதலில் அறுவது சதவீத மானியம் இருந்தது, என்னுடைய நிலத்தில் சொட்டு நீர் பாசனம் செய்யலாம் என சம்பந்தப்பட்ட துறையை அணுகினேன், அவர்களும் ஒரு லட்சம் செலவுக்கு நீங்கள் நாற்பதாயிரம் கட்டினால் போதும் மீதத்தை அரசு செலுத்தி விடும் என்று கூறினார்கள், நானும் எல்லாம் தயார் செய்த பின்னர் ஒரு ஏக்கருக்கு கிடையாது குறைந்தது ஒரு ஹெக்டர் அளவு சொட்டு நீர் பாசனம் என்றால்தான் செய்ய முடியும் என்று கூறி விட்டார்கள், இதை முதலிலேயே சொல்லி இருந்தால் நான் நிலத்தை தயார் செய்திருக்க மாட்டேன், பாதியில் விட மனதில்லாமல் நானே முழுதும் செலவு செய்து சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்க வேண்டியதாகி விட்டது.  பின்னர் விசாரித்த போது நண்பர் ஒருவர் நீங்கள் தேவையான document களை வழங்கினால் மட்டும் போதாது, மற்ற விஷயங்களை நீங்கள் வைக்காததால் ஒரு ஏக்கருக்கு கிடையாது என்று கூறி விட்டார்கள் என்று கூறினார்.

கரையான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக