செவ்வாய், செப்டம்பர் 27, 2011
காதல் திருமணம்
சமீபத்தில் தொலைகாட்சியில் காதல் திருமணம் செய்துகொண்டவருக்கும் அவரின் மாமனார் அல்லது பெண்ணை பெற்றவருக்குமான ஒரு உரையாடல் நிகழ்ச்சி பார்த்தேன், அதில் காதலில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டு காதலித்த பெண்ணை கைப்பிடித்தார்கள் என்று விவரித்தார்கள், தன் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டோம் என்பதை மாமனார்கள் விவரித்தார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், வெறியுடன் காதலித்து, காதலித்த பெண்ணை பல இன்னல்களுக்கு இடையில் கைபிடித்த இந்நாள் தந்தையர்கள் தங்கள் பெண் காதல் திருமணம் செய்வதை ஒப்புக்கொள்வதில்லை, ஒருவர் தன் மாமனார் பட்ட துன்பங்கள், அவமானங்களை பார்த்ததால் தான் பெண் குழந்தையே பெற்றுக்கொள்ள வில்லை என்றார், ஒரே மகன் மட்டும் போதும் என்று நிறுத்தி கொண்டதாக கூறினார். தன் மகளும் காதல் திருமணம் செய்துகொண்டு எனக்கும் கஷ்டங்கள் கொடுத்து விடுவார் என்று எண்ணி பெண் குழந்தையே பெற்றுக்கொள்ள வில்லை என்று மேலும் கூறினார். இதை அனுபவம் சொல்லித்தந்த பாடம் என்பதா? இல்லை escapism என்பதா?
ஒரு நல்ல விஷயம் அனைவரும் தங்கள் மாமனார்களிடம் அவர்களால் ஏற்பட்ட கஷ்டங்களுக்காக வருத்தம் தெரிவித்து கொண்டார்கள். காதல் மணம் புரிந்தோர், மணம் புரிந்து காதலிப்போர் இதைப்பற்றி எழுதலாம்.
கரையான்.
திங்கள், செப்டம்பர் 26, 2011
நண்பர் இளங்கோ
நம் நண்பர் இளங்கோ அவர்களின் புகைப்படம் இந்த வார பசுமை விகடனில் வந்திருந்தது.....என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்...
ஏ. சுப்பிரமணியன், கணக்கன்பட்டி.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், பால் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இளங்கோ பதில் சொல்கிறார். ''கறந்த பால் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரைதான் நன்றாக இருக்கும். அதற்கு மேல் அந்தப் பாலில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கி விடும். இந்த பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லேக்டோஸ் என்ற பொருளை சாப்பிட்டுத்தான் பெருகுகின்றன. பாக்டீரியாக்கள் பெருகிய பிறகுதான் பால் கெட்டுப்போய் புளிப்புத் தன்மைக்கு மாறுகிறது. குளிர் சாதனப்பெட்டியில் வைக்கும்போது பாக்டீரியாக்களின் பெருக்கம் தடைபடும். குளிர் நிலையில் இருந்தாலும், 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்தி விடுவதுதான் நல்லது.
பால் கறக்கும் போதும் கவனமாக இருந்தால்தான், கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். பால் கறப்பவர்கள் கைகளில் நகங்கள் இருக்கக் கூடாது. பால் கறப்பதற்கு முன்னர் சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். பால் பாத்திரத்தை நல்ல தண்ணீரில் கழுவி, சூரிய ஒளியில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் பாத்திரங்களில் ஒட்டிக் கொண்டுள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முடியும். பாலில் ஈ போன்ற பூச்சிகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
மறுசுழற்சி செய்யத்தக்க தரமான பாலிதீன் பைகளில் அடைத்துதான் விற்பனை செய்ய வேண்டும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் கையுறை அணிய வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், கறந்து 8 மணி நேரம் வரை பாலைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்.''
கரையான்.
ஞாயிறு, செப்டம்பர் 25, 2011
முகவரி இழந்தோர்
அரபு நாடுகளில் பணி புரிவோரில் பெரும்பாலோர் முகவரி இழந்தோர்தான். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பணி புரிவோர் குறிப்பிட்ட காலம் அந்த நாட்டிலேயே வாழ்ந்தால் அங்கு குடியுரிமை பெரும் வாய்ப்பை பெறுகிறார்கள், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்போருக்கு எத்தனை ஆண்டுகள் அங்கு வசித்தாலும் குடியுரிமை கிடைக்காது.
சொந்த மண்ணுக்கு ஆண்டுக்கு ஒருமுறையோ / பல்லாண்டுகளில் ஒரு முறையோதான்
விஜயம் செய்ய வாய்ப்பிருப்பதால், பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊருக்கு விருந்தாளிபோல்தான் சென்று வர வேண்டிய கட்டாயம், காலம் உருண்டோடி விளையும் மாற்றத்தால் ஊரில் வசிக்கும் மற்றோரால் மறக்கப்படுகிறோம், பால்ய நண்பர்கள், அண்டை அயலார் என பலரும் உரு மாறி விடுவதாலோ, இடம் மாறி விடுவதாலோ சொந்த மண்ணில் அன்னியப்பட்டு போகிறோம். சென்ற தாயக விஜயத்தின் போது மனைவியுடன் கடைக்கு சென்றேன், கடைக்காரர் என் மனைவியை மிக பணிவோடு வரவேற்றார்,"வாங்கம்மா, சௌக்கியமா இருக்கீங்களா" என்றெல்லாம் விசாரிப்பு வேறு, பக்கத்தில் நின்ற என்னை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை, நம்ம ஊருல நம்மள தெரியல என் மனைவிய தெரியுதே என்று ஆச்சரியப்பட்டு போனேன்.(நம்ம விட மனைவி பேமசா இருக்காங்களேன்னு ஒரு சின்ன பெருமைதான்....), அவர் என் சகோதரனின் client அவர் வழக்கு சம்பந்தமாக எங்கள் வீட்டுக்கு வரும்போது என் மனைவி அறிமுகமாகி இருக்கிறார், இதன் காரணமாக உள்ளூரில் கடைக்கோ,வங்கி, கோவில் எங்கு சென்றாலும் "நான் இன்னாரோட அண்ணி" என்று அறிமுகப்படுத்தி கொள்கிறாள். "உங்க பேர சொன்னா யாருக்கு தெரியுது" என்று நக்கல்/குத்தல் வேறு.
"சொந்த மண்ணில் முகவரி இழந்த" கரையான்.
சனி, செப்டம்பர் 24, 2011
காசு மேல காசு .........
மதிய கிழக்கு நாடுகளில் வாழும் கீழ் நிலை தொழிலாளர்களின் நிலை மிக கொடுமை... இங்கு வருவதற்கு சராசரியாக தொழிலாளி ஒருவருக்கு ஒரு லட்சமாவது செலவாகி விடும், இந்த பணத்தை யாரும் கையில் வைதிருந்தோ, சேமிப்பில் இருந்தோ தருவதில்லை, ரெண்டு வட்டி மூன்று வட்டி கடனுக்கு வாங்கி தான் ஏஜென்ட்-க்கு கொடுத்து விட்டு வருகிறார்கள். அவர்கள் வருவதோ எண்ணூறு முதல் ஆயிரம் ரியால் வரைக்கான சம்பளம்தான். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு பத்தாயிரதிலிருந்து பன்னிரெண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதில் அவரின் உணவுக்காக குறைந்தது முன்னூறு ரியால், தொலைபேசியில் பேச நூறு ரியால் என கழிந்து விட்டால் மிச்சம் இருப்பது ஐயாயிரம் ரூபாய் அளவுதான் இருக்கும். அவர் வாங்கிய கடனுக்கு மாத வட்டி வேறு தனி. எங்கள் பண்ணையில் பணி புரியும் வங்க தேசத்தவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விடுமுறையில் செல்வர், அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், "இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சென்று எங்கள் மனைவி குழந்தைகளை பார்க்க எங்களுக்கும் ஆசைதான், ஆனால் எங்களின் கடன் எப்போது அடைப்பது, இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் விமான டிக்கெட்டுக்கான பணம் பயணம் செய்யாமலே நாங்கள் பெறுவதால் அது மிச்சமாகிறது மேலும் விடுமுறையில் செல்லும்போது உற்றார் உறவினருக்கு பரிசுப்பொருள்கள் கண்டிப்பாக வாங்கி செல்ல வேண்டும், அந்த காசும் மிச்சமாகிறது இப்படி எல்லாம் மிச்சம் பிடித்தால்தான் கடனை அடைக்க முடியும்"என்பார்கள்.
இங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் உணவு கோழிக்கறி + ரொட்டி அல்லது சோறு, காய்கறிகள் பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள், கோழி ஒரு கிலோ பத்து ரியால், இரண்டு நாட்களுக்கு(சமயத்தில் மூன்று நாட்கள் கூட) சாப்பிடலாம், சில நேரங்களில் எங்கள் பண்ணையின் பக்கத்தில் இருக்கும் layer farm- இல் cull செய்யப்படும் கோழிகள் ஒன்று ஒரு ரியால் விலையில் கிடைக்கும், மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு தினமும்
ஒன்றுஎன அடித்து சாப்பிடுவதும் உண்டு. காய்கரிகள சாப்பிட வேண்டுமென்றால்
விலை கட்டுப்படி ஆகாது. இப்படியெல்லாம் மிச்சம் பிடித்து கடைசியில் இவர்கள் சம்பாதிப்பது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக கல் ஆகிய வியாதிகளைத்தான்.
மேலும் எழுதுவேன்...
கரையான்.
புதன், செப்டம்பர் 21, 2011
எதிர்பாராததை எதிர்பார்(EXPECT THE UNEXPECTED)
எதிர்பாராமல் மோட்டார் பழுதானதை எழுதி இருந்தேன், தண்ணீர் இல்லாமல் தென்னங்கன்றுகள் கதி என்னாகுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் கன மழை பெய்து இன்னும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாமல் செய்து விட்டது(Expect the Unexpected). சொக்கன் எழுதியது போல இந்த நிகழ்வுகள் எல்லா துறைகளிலும் இருந்தாலும், அவர்களுக்கு வேறொரு வாய்ப்பு அல்லது துறை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு எப்போதும் உண்டு, விவசாயிக்கு அது இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நெல் பயிர் செய்பவர், திடீரென்று வேறு பயிர் செய்ய முடியாது. கடல் நீரை கொடுத்து முட்டை இட வைக்க வேண்டாம், விவசாயம் செய்ய வழி பிறக்கும் என்றால் அதுவே பெரிய விஷயம். பெரும்பாலான விவசாயிகள் அவர்கள் இஷ்டப்பட்டு நிலங்களை விற்பதில்லை, விவசாய கூலி பற்றாக்குறை அல்லது தொழிலாளர்களின் அடாவடிபோக்கு, ஸ்திரத்தன்மை அற்ற விலை, யூகிக்க முடியாத தட்ப வெட்ப நிலை என பல விஷயங்களால் நஷ்டப்பட்டு நொந்து போன விவசாயி எப்படி தன் வாரிசுகளை விவசாயத்தில் ஈடு படுத்துவான். அடுத்த தலைமுறை எப்படி இருந்தாலும் விற்கத்தான் போகிறார்கள், அதை நான் விற்று அனுபவித்து விட்டு போகிறேன் என்ற மன நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்து விட்டதன் விளைவுதான் விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக காரணம்.
நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகள் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவோம், அல்லது நம் குழந்தைகளில் எத்தனை பேர் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவர். இந்த கேள்விக்கு பெரும்பாலும் பதில் ஏமாற்றமளிப்பதாகதான் இருக்கும்.
இடைத்தரகர்கள் தொடர்ந்து போடும் தூண்டில் வார்த்தைகள், கருப்பு/ஊழல் பண முதலைகள் மிக சிறந்த, பாதுகாப்பான முதலீடாக நினைத்து எவ்வளவு விலை வேண்டுமானாலும் தர தயாராக இருப்பது என பல காரணங்களால் விவசாயிகள் நிலத்தை விற்க தூண்டப்படுகிறார்கள்.
கரையான்.
நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகள் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவோம், அல்லது நம் குழந்தைகளில் எத்தனை பேர் கால்நடை மருத்துவர் ஆவதை விரும்புவர். இந்த கேள்விக்கு பெரும்பாலும் பதில் ஏமாற்றமளிப்பதாகதான் இருக்கும்.
இடைத்தரகர்கள் தொடர்ந்து போடும் தூண்டில் வார்த்தைகள், கருப்பு/ஊழல் பண முதலைகள் மிக சிறந்த, பாதுகாப்பான முதலீடாக நினைத்து எவ்வளவு விலை வேண்டுமானாலும் தர தயாராக இருப்பது என பல காரணங்களால் விவசாயிகள் நிலத்தை விற்க தூண்டப்படுகிறார்கள்.
கரையான்.
செவ்வாய், செப்டம்பர் 20, 2011
எதிர்பாராதவற்றை எதிர்பார்ப்பது(expect the unexpected)-தான் விவசாயம்.
எதிர்பாராததை எதிர்பார்த்து நாற்காலியின் நுனியில் உட்காருவதுபோல் இருப்பதுதான் விவசாயம். நான் ஏற்கனவே என் நிலத்தில் தென்னை விவசாயம் செய்ய சொட்டு நீர் பாசனம் செய்ய அலைந்த கதையை சொல்லி இருந்தேன், எல்லாம் முடிந்து விட்டது நல்ல படியாக எல்லாம் நடந்து ஐந்து வருடத்தில் குலை குலையை காய்த்து தொங்கும் என எதிர்பார்த்திருந்தால் தென்னை மட்டை கூட மிஞ்சாத எதிர்பார்க்காதது தான் மிஞ்சும். வேலி அமைத்தாயிற்று, தென்னைக்கு குழி பழித்து, உரமிட்டு, சொட்டு நீர் பாசன வசதி செய்து, தென்னைக்கன்றும் பதித்தாகி விட்டது, இன்னும் என்ன வளர்ந்து இளநீரோ தேங்காயோ பறிக்க வேண்டியதுதான் என சந்தோஷமாக இருந்தால், திடீரென மோட்டார் பழுதடைந்து விட்டது, பழுது நீக்க செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி என சேதி வருகிறது(unexpected). புதிய மொடோர்தான் பொறுத்தியாக வேண்டும், அதுவும் உடனே செய்யப்பட வேண்டும், கால தாமதமானால் இருக்கும் தென்னங்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடும், சரி மொத்தம் எவ்வளவு செலவாகும் என்றால் புதிய மோட்டார் வாங்கி பொறுத்த அறுபது ஆயிரம் ஆகும் என்கிறார்கள், நாம்தான் வெளிநாட்டில் ரியாலாக வாங்குகின்றோமே பொருத்தி விட வேண்டியதுதான், வேறு வழி. நம்மூரில் இருக்கும் ஒரு சிறு அல்லது குறு விவசாயியால் இந்த செலவை உடனே செய்ய முடியுமா, மனைவியின் தாலி முதல் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான் வரை அனைத்தையும் அடகு வைத்தால்தான் முடியும்...இவை எல்லாம் மீட்க அடுத்த ஆண்டில் நிலத்தை அடகு வைத்தாக வேண்டும்...இந்த தொடர்ச்சியான விளையாட்டில் எல்லாம் போக கடைசியில் மிஞ்சப்போவது விவசாயின் கோவணம் மட்டும்தான்....
It is a vicious cycle...என்பார்களே இதுதானோ...
கரையான்.
வியாழன், செப்டம்பர் 15, 2011
INFLUENCE/ RECOMMENDATION
இன்புளுயன்ஸ், சிபாரிசு செய்வது இவையும் ஊழல் மற்றும் லஞ்ச கணக்கில் வருமா வராதா.... என்றால் அதற்கு பதில் வரர்ர்ர்ரர்ர்ர்ரும் ஆனா வராஆஆது....... என்றுதான் வழ வழ கொழ கொழவாக பதில் அளிக்க முடியுமே தவிர நிலையான பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நான் இன்னாருடைய இன்னார் என்று கூறி நம் வேலைகளை முன்னுரிமை பெற்று விரைந்து முடித்து கொள்வது வரிசையில் இருப்பவருக்கு இன்னல் தோற்றுவிக்காதா என நாம் பார்ப்பதில்லை. நாம் எந்த சிறிய வேலையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய தொடர்புகளை பயன்படுத்தி முடித்துக்கொள்வது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய பழக்கமாகவே ஆகி விட்டது. என் மனைவி வங்கிக்கு சென்றால் நேராக மேலாளரிடம் சென்று என் தம்பி பெயரை சொல்லி நான் அவரின் அண்ணி (எங்கள் பகுதியில் என்னை யாருக்கும் தெரியாது மற்றும் எனக்கு எந்தவிதமான இன்புளுஎன்ஸ் இல்லை) என்று கூறி அவளுடைய வேலையை முடித்துக்கொண்டு வந்து விடுகிறாள்.
சவுதியில் ஒரு பண்ணையில் அந்த ஓனர் அவரின் குதிரையை covering செய்ய இந்த நாட்டு மன்னரின் பண்ணைக்கு அனுப்பினார், ஒரு பிஹாரி நபர் அந்த குதிரையை எடுத்து செல்லுமாறு பணிக்கப்பட்டார். அவர் எடுத்து சென்றவர், மன்னரின் பண்ணை வாயிலில் காவலர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என போன் செய்தார், அந்த முதலாளிக்கு இவர் சொன்னது புரிய வில்லை, என்னை அவருக்கு போன் செய்து விசாரிக்க சொன்னார், நான் என்னவென்று விசாரித்தேன்,மன்னர் இன்று அவர் பண்ணையில் ஓய்வெடுக்க வந்துள்ளார் அதனால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கூறினார். ஆனால் குதிரை இருக்கும் பகுதியில் அனுமதிப்பார்களே, அதுவும் உங்கள் முதலாளி பெயரை சொன்னால் அனுமதிப்பார்களே என்று கேட்டேன், இல்லை டாக்டர் சாப் முதலாளி பேரை சொன்னாலும் விட வில்லை என்று கூறினான் , நானும் அந்த சவுதி ஓனரிடம் எடுத்து கூறினேன், அவருக்கு அது மானப்பிரச்சினை ஆகி விட்டது, அவருடைய இன்புளுஎன்ஸ் ஐ உபயோகித்து அவனுக்கு குதிரையை மன்னரின் பண்ணைக்குள் எடுத்து செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார் . குதிரையும் covering செய்யப்பட்டு வந்து சேர்ந்தது, மாலையில் அவனிடம் நேரில் சென்று என்ன பிரச்சினை என்று வினவினேன், அதற்கு அவன் "டாக்டர் சாப் என்னோட இக்காமா(residence permit/identity card) எடுத்து செல்ல மறந்து விட்டேன், அதுதான் உள்ளே விட மாட்டேன் என்று கூறினார்கள், அதை முதலாளியிடம் சொல்லாமல் என்ன காரணமோ தெரியவில்லை உன் பெயரை சொன்ன பிறகும் கூட உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள் என்று கூறினேன்." "உன் பெயரை சொன்ன பிறகும் கூட" என்பது அந்த சவுதி முதலாளிக்கு கௌரவ பிரச்சினை ஆகி விட்டது.
இக்காமா என்பது இங்கு கர்ணனின் கவச குடலம் போன்றது எப்போதும் வைத்திருக்க வேண்டும், இது இல்லை என்றால் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்கலாம்.
நம்ம ஊருல பிரதம மந்திரி இருக்கும் பகுதியிலிருந்து ஐந்து கி.மீ சுற்றுக்குள் நம்மள விட மாட்டங்க, நம்ம ஊரா இருந்தால் உன்னை ஓட விட்டு உக்காருற இடத்துல சுட்டிருப்பாங்க" என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.
கரையான்.
கமென்ட்-ஆவது எழுதலாமே...
நண்பர்களே/நண்பிகளே எழுதுபவர்களை ஊக்கப்படுத்த குறைந்த பட்சம் கமெண்டாவது எழுதலாமே....சென்னை நட்சத்திரங்கள் கணக்கில் login செய்ய முடியாதவர்கள் வேறு கணக்கில் login செய்து உங்கள் கருத்துக்களை பதிக்கலாம்.
கரையான்.
திங்கள், செப்டம்பர் 12, 2011
video
சில நேரங்களில் எதையோ பிடிக்க போய் வேறு ஒன்றை பிடித்த கதை ஆகி விடும் அல்லவா, அதைப்பற்றியதுதான் இந்த வீடியோ பதிவு.
கரையான்.
ஞாயிறு, செப்டம்பர் 11, 2011
indru rasitha status
Srividhya Srinivasan
“The opposite of love is not hate – it is indifference.”
VIKRAM KARVE
Krishnan Ramu the real opposite of love is SHE in tamil. Just check LOVE in the mirror..it will show EVOL
7
வெள்ளி, செப்டம்பர் 09, 2011
செவ்வாய், செப்டம்பர் 06, 2011
indru rasitha status
Priya Kalyanaraman
நான் ஸ்கூலில் படிக்கும்போது தெருவில் ஆசிரியர்களைப் பார்த்தால் எகிறிக் குதித்து ஒளிந்து கொள்வேன். இன்று என் குழந்தைகள், ஆசிரியர்களைக் கண்டாலே ஓடிப் போய் உற்சாகமாய்ப் பேசுகிறார்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் உங்கள் தின வாழ்த்துக்கள்!
Like · · 3 hours ago · Privacy:
71 people like this.
Krish Jk நான் ஸ்கூலில் படிக்கும்போது தெருவில் ஆசிரியர்களைப் பார்த்தால் எகிறிக் குதித்து ஒளிந்து கொள்வேன்....இபோதும் அதே கதி தான் .... என் குழந்தையின் வீட்டு படத்தை இன்னும் நான் முடிக்க வில்லை
about an hour ago · Unlike · 10 people
Priya Kalyanaraman suupperu
about an hour ago · Like
திங்கள், செப்டம்பர் 05, 2011
சர்தார்ஜி ஜோக்....நெட்டில் சுட்டது..
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
ஜோக் 2
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.
மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க...
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க...
கரையான்.....
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
என்னுடைய ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களாய் பணிபுரியும் தோழர்/தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்....
கல்லூரி வாழ்க்கையில் என்னைகவர்ந்த ஆசிரியர் டாக்டர் குணசீலன் அவர்கள், அதற்காக மற்றவர்களை பிடிக்காதா என்றால் தவறு, அனைவரிலும் அவர் கொஞ்சம் அதிகமாக கவர்ந்தார் எனலாம். சமீபத்தில் அவரைப்பார்த்தபோது நம் நண்பர் நாயூரான் அவருடன்,"சார் உங்களபத்தி ரொம்ப கம்பிளைன்ட் வருது, பாத்து நடந்துக்குங்க" என்று அவனுடைய பாணியில் கூறினான், அவர் "என்னப்பா கண்ணா என்னபத்தி கம்பிளைண்டா நான் ஒன்னும் அப்படி பெரிய தப்பு ஏதும் பண்ணலையே யாரு உன்னிடம் என்னைப்பற்றி கூறியது" என்றார். "இல்ல சார் பசங்கதான்... ஹாஸ்டல் வார்டனா இருந்துகிட்டு பசங்கள கஞ்சா அடிக்க விட மாட்டேன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கீங்களாம், படம்(நீலம்) பாக்க முடியல தண்ணீ கூட அடிக்க முடியலைன்னு பசங்க எல்லாம் ரொம்ப பொலம்பறாங்க சார்" என்றான். என்னப்பா இது நல்ல பழக்கம் வரட்டும்னு கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தா இப்படியெல்லாம் கூடவா சொல்லுவாங்க இதுக்கு நீ வேறே பஞ்சாயத்து செய்ய வர்ற...என்றார்.
கரையான்.
ஞாயிறு, செப்டம்பர் 04, 2011
நூதன முறை லஞ்சம்
தினமலர் வாரமலரில் படித்தது....
நூதன முறை லஞ்சம்!
வாரிசு சான்றிதழ் பெற, உரிய அலுவலகத்தில் மனு செய்தேன். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், "நீங்கள் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்...' என்று சொல்லி, என் பெயரை துண்டு சீட்டில் குறித்தார். அதன் மறுபக்கத்தில் ஒரு மொபைல் நம்பரை குறித்து, என்னிடம் கொடுத்து, "அந்த எதிர் கடையில், இந்த நம்பருக்கு, 301 ரூபாய்க்கு, "டாப் - அப்' செய்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் வாரிசு சான்றிதழ் வேலை, கனகச்சிதமாக முடிந்து விடும்...'என்றார்.
ஒரு காலத்தில், லஞ்சத்தை பணமாக, நேரடியாக வாங்கி பழக்கப்பட்டவர்கள், இப்போது புதிய யுக்தியாக லஞ்சத்தை, "டாப்-அப்' மூலம் பெறுவது, அவர்கள் பாதுகாப்பிற்காக என்பதை புரிந்து கொண்டேன்; அவர் சொன்னபடியே செய்தேன்.
இப்போதெல்லாம், லஞ்சத்தை பணமாக பெறுவது, கவுரவ குறைச்சலாக உள்ளது. அதனால், தன் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு, டாப்-அப், பூஸ்டர் கார்டு, ரேட் - கட்டர் கார்டுக்கு பணம் செலுத்த சொல்வது, வெளிமாவட்டத்தில் இருக்கும் தன் வங்கி கணக்கில், பணம் போட சொல்வது போன்ற, நூதன வழியை கண்டுபிடிக்கின்றனர். இந்த வழியில் லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி விட்டது என்பது விசாரித்து பார்த்ததில் தெரிய வந்தது. கேட்க, கேட்க எனக்கு தலைசுற்றியது.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி
வாரிசு சான்றிதழ் பெற, உரிய அலுவலகத்தில் மனு செய்தேன். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், "நீங்கள் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்...' என்று சொல்லி, என் பெயரை துண்டு சீட்டில் குறித்தார். அதன் மறுபக்கத்தில் ஒரு மொபைல் நம்பரை குறித்து, என்னிடம் கொடுத்து, "அந்த எதிர் கடையில், இந்த நம்பருக்கு, 301 ரூபாய்க்கு, "டாப் - அப்' செய்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் வாரிசு சான்றிதழ் வேலை, கனகச்சிதமாக முடிந்து விடும்...'என்றார்.
ஒரு காலத்தில், லஞ்சத்தை பணமாக, நேரடியாக வாங்கி பழக்கப்பட்டவர்கள், இப்போது புதிய யுக்தியாக லஞ்சத்தை, "டாப்-அப்' மூலம் பெறுவது, அவர்கள் பாதுகாப்பிற்காக என்பதை புரிந்து கொண்டேன்; அவர் சொன்னபடியே செய்தேன்.
இப்போதெல்லாம், லஞ்சத்தை பணமாக பெறுவது, கவுரவ குறைச்சலாக உள்ளது. அதனால், தன் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு, டாப்-அப், பூஸ்டர் கார்டு, ரேட் - கட்டர் கார்டுக்கு பணம் செலுத்த சொல்வது, வெளிமாவட்டத்தில் இருக்கும் தன் வங்கி கணக்கில், பணம் போட சொல்வது போன்ற, நூதன வழியை கண்டுபிடிக்கின்றனர். இந்த வழியில் லஞ்சம் பெறுவது வாடிக்கையாகி விட்டது என்பது விசாரித்து பார்த்ததில் தெரிய வந்தது. கேட்க, கேட்க எனக்கு தலைசுற்றியது.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி
கரையான்.
சனி, செப்டம்பர் 03, 2011
லஞ்சம் பற்றி....
லஞ்சம் பற்றிய நம் கருத்துக்கணிப்பில் கால்நடை மருத்துவத்துறை மிக பின் தங்கி இருப்பது ஒரு வகையில் சந்தோசமாக இருந்தாலும் பொழைக்க தெரியாதவர்கள் உள்ள துறை என்று ஏளனத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற கவலையும் எட்டிப்பார்க்கிறது.ஏன் இந்த நிலை என்று நண்பர் பாய்,செந்தில் அல்லது சொக்கன்தான் விளக்கம் அளிக்க வேண்டும். சொக்கனை இதில் ஏன் சேர்த்தாய் என கேள்வி எழலாம், கொடுத்தவர் என்பதால் சொக்கன் பெயரை சேர்த்தேன், துறையில் பணி புரிந்தவர்கள் என்பதால் பாய் மற்றும் செந்தில் விலாவாரியாக எழுதலாம். சமீபத்தில் அரசு சொட்டு நீர்பாசனம் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம் என அறிவித்து உள்ளது. இதில் விவசாயியை விட விவசாயத்துறை அலுவலர்களுக்குதான் பயன் அதிகம். முதலில் அறுவது சதவீத மானியம் இருந்தது, என்னுடைய நிலத்தில் சொட்டு நீர் பாசனம் செய்யலாம் என சம்பந்தப்பட்ட துறையை அணுகினேன், அவர்களும் ஒரு லட்சம் செலவுக்கு நீங்கள் நாற்பதாயிரம் கட்டினால் போதும் மீதத்தை அரசு செலுத்தி விடும் என்று கூறினார்கள், நானும் எல்லாம் தயார் செய்த பின்னர் ஒரு ஏக்கருக்கு கிடையாது குறைந்தது ஒரு ஹெக்டர் அளவு சொட்டு நீர் பாசனம் என்றால்தான் செய்ய முடியும் என்று கூறி விட்டார்கள், இதை முதலிலேயே சொல்லி இருந்தால் நான் நிலத்தை தயார் செய்திருக்க மாட்டேன், பாதியில் விட மனதில்லாமல் நானே முழுதும் செலவு செய்து சொட்டு நீர் பாசன குழாய்கள் அமைக்க வேண்டியதாகி விட்டது. பின்னர் விசாரித்த போது நண்பர் ஒருவர் நீங்கள் தேவையான document களை வழங்கினால் மட்டும் போதாது, மற்ற விஷயங்களை நீங்கள் வைக்காததால் ஒரு ஏக்கருக்கு கிடையாது என்று கூறி விட்டார்கள் என்று கூறினார்.
கரையான்.
INVICTUS-MOVIE
சமீபத்தில் INVICTUS என்ற ஆங்கில படம் பார்த்தேன். அந்த படத்தை பார்க்கும்போது நம் தலைவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. கிளின்ட் ஈஸ்த்வூத் இயக்கத்தில் உருவான படம், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையை தழுவி உண்மை சம்பவங்களை கதைக்களமாக கொண்ட படம். நிறவெறி ஆட்சி முடிந்து பெரும்பான்மை கருப்பர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தோல் நிறத்தால் பிரிந்து கிடந்த வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் விளையாட்டு மூலமாக சேர்த்து வைத்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கும் தலைவர் பற்றிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நெல்சன் மண்டேலாவுடன்(Morgan Freeman) நம் மன்னுமோகன் சிங்கையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒரு தலைவன் நாட்டை ஆள பெரும்பான்மை மட்டும் இருந்தால் போதாது, அந்த மக்களையும் நாட்டையும் உண்மையாக நேசிக்க வேண்டும் என்பதை மிக அருமையாக சித்தரித்துள்ளது இந்த படம்.
படம் பார்த்து முடிந்த வுடன் ஒரு ஏக்க பெருமூச்சுதான் விட முடிகிறது, ஓட்டுக்காக மக்களை எப்படியெல்லாம் பிரித்து ஒட்டு வாங்கலாம் என ரூம் போட்டு யோசிக்கும் நம் தலைவர்கள் அனைவரும் பாக்க வேண்டிய படம்.
கரையான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)