வியாழன், மார்ச் 10, 2011

MODERN PONIES

என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் போனீஸ் பற்றி எழுதுகின்றானே என நினைக்க வேண்டாம். பெரும்பாலான stud farms இல் போனி ஒன்றோ இரண்டோ  இருக்கும் அதனுடைய வேலை mares estrus இல் இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்வதுதான், போனீஸ் களை வைத்து டீஸ் செய்யும்போது estrus இல் இருக்கும் mares நன்றாக கவரிங் இல் நிற்குமா என்பதை உறுதி செய்வது மட்டும்தான் போனியின் வேலை, estrus இல் இல்லாத mare இடம் உதை வாங்குவதும் போனீஸ் தான். கடைசியில்   stallion தான் கவரிங் செய்யும், இதுபோன்றதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பணி சூழல். நேற்று நண்பர் ஒருவர் கால்நடை மருத்துவராக அருகில் ஒரு stud farm -ல் பணி  புரிகிறார் மிகவும் நொந்து அவர் கவலைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருடைய பண்ணையில் அவருடன் பணி புரியும் மேலாளர் பற்றி புலம்பிக்கொண்டு இருந்தார், கடந்த மூன்று வாரத்தில் மூன்று குதிரைகள் காலிக் காரணாமாக இறந்து விட்டன, பழி முழுவதையும் நம் நண்பர் மேல் போட்டு மேலாளர்(அமெரிக்காவை சேர்ந்தவர்) தப்பித்து கொண்டார், இப்போது நம் மருத்துவ நண்பர் கடும் நெருக்கடியில், குதிரைகள் சினை ஆகும்போதும், குட்டி போடும்போதும்  மேலாளர் அவரால்தான் எல்லாம் நல்லபடியாக நடந்ததாக முதலாளியிடம் சென்று தம்பட்டம் அடித்து கொள்வார், இப்போது குதிரைகள் சாகும்போது மருத்துவர்தான் காரணம் என முதலாளியிடம் கூறுகிறார், குதிரைக்கான feeding மற்றும் அனைத்து நிர்வாகமும் கவனிப்பது மேலாளர்தான் அப்படி இருக்கும்போது நான் எப்படி காரணம் ஆக முடியும் என மிகவும் கவலையுடன் கூறினார். 
இந்த நண்பர் போல் நம்மில் பலரும் போனீஸ் ஆக அனுபவப்பட்டிருப்போம், சென்னை நட்சத்திரங்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை comments -இல் எழுதாமல் பிளாக் போஸ்ட் ஆக எழுதவும்.

கரையான்.

2 கருத்துகள்: