சவுதியில் வந்து துன்பப்பட்ட நண்பரின் கதை தொடர்ச்சி....
அவர் பணிபுரியும் கம்பனி சம்பளத்தை அறுநூறு ரியாலாக குறைத்து வேலை செய்ய சொன்னதால், தான் ஊருக்கே செல்வதாக கூறி வேலையிலிருந்து விலகுவதாக கூறி விட்டார், டிரைவராக பணிபுரிந்தால் தொள்ளாயிரம் கொடுப்பதாக கூறினார்கள், ஆனால் அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது மேலும் அவர் லைசென்ஸ் எடுக்க குறைந்தது இரெண்டாயிரம் ரியாலாவது ஆகும். ஆகவே அவர் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு கூறி விட்டார், அவருக்கான விசா செலவு என அவருடைய சம்பள பாக்கி(மூன்று மாதம்) பிடித்து கொண்டு 500 ரியால் மேலும் கட்ட வேண்டும், விமான டிக்கெட் அவரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனைகளுடன் அவருடைய பாஸ்போர்டை அவரிடம் கொடுத்தார்கள், ஏற்கனவே நஷ்டப்பட்டது போதாது என்று ஊருக்கு செல்லவும் கிட்டத்தட்ட அவர் 5000 ரியால் செலவு செய்ய வேண்டி இருந்தது. அவருக்கான பண மற்றும் பயண டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்ததில் கடந்த வாரம் மிகவும் கஷ்டமான வாரமாக கழிந்தது.
கரையான்.
Karayaan - what you are doing in terms of support for this friend of yours is highly commendable. Keep up the good work.
பதிலளிநீக்குThanks for this eye opening post on how people from other countries exploit our people.
Gujili
kumaran u r unbelievable!
பதிலளிநீக்குkudos to u!
just cant imagine the level of patriotism and compassion for fellow human beings shown by u ......!