மத்திய கிழக்கு நாடுகள்-பணிசூழல் என்னுடைய பார்வையில்
நம்முடைய நண்பரின் கதையை எழுதி இருந்தேன், இதுவரை நாம் பார்த்தது நாணயத்தின் ஒரு பக்கத்தைதான்(one side of the coin) , நம் மேலும் சில தவறுகள் இருக்கின்றது
என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. இங்கு வந்து அவதிப்பட்ட நண்பரின்
உறவினர் மதீனா நகரில் பணி புரிகின்றார், அவரிடம் நான் பேசும்போது
இங்கு வந்து அவதிப்பட்டவரைப்பற்றி சில விஷயங்கள் கூறினார்
ஊரிலே வேலை ஏதும் செய்யாமல் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வெட்டியாக பொழுதை கழித்துக்கொண்டு இருந்தார் இங்கு வந்தால் திருந்தி விடுவார் என கிட்ட தட்ட ஒன்னேகால் லட்சம் செலவு செய்து நான்தான் அவரை இங்கு வேலைக்கு அழைத்து வந்தேன் என கூறினார். இது எப்படி இருக்கின்றது என்றால், நம் ஊரில் குடி காரனாகி விட்ட மகனை திருத்த கல்யாணம் செய்து வைக்கும் தாய்மார்கள் போல்தான். மற்ற வெளி நாடுகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது, ஆனால் இங்கு எல்லாமே கொஞ்சம் மாறு பட்டுதான் இருக்கும், பழங்கால அடிமை முறைதான் இங்கே இன்னமும், கொஞ்சம் பெயர்மாற்றம் செய்யப்பட்டு "sponsorship" என அழைக்கப்படுகிறது. நாம் ஒரு குறிப்பிட்ட sponsor விசாவில் வந்தால் நம் பாஸ்போர்ட் அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும், அவர் நமக்காக இக்காமா எனப்படும் residence permit அட்டையை நமக்கு கொடுப்பார், அந்த அட்டை நம்மிடம் இல்லை என்றால் என் நேரமும் காவல்துறை சிறையில் அடைக்க முடியும், பேங்க், மருத்துவமனை என எங்கு சென்றாலும் அந்த கார்டை நாம் காட்ட வேண்டும். நாம் இந்த நாட்டை விட்டு தாய் நாட்டுக்கோ மற்ற நாட்டுக்கோ செல்ல வேண்டுமென்றால், sponsor நம்முடைய பாஸ்போர்ட்டை எடுத்து சென்று உள்துறை அமைச்சகத்திடம் exit/ re-entry அனுமதி பெற்று தந்தால் மட்டுமே நாம் செல்ல முடியும். நம்முடைய sponsor தவிர வேறு யாரிடமும் வேலை செய்வது சட்டத்திற்கு புறம்பானது, சிறையில் அடைக்கப்படலாம்.
நம் நண்பர் கதைக்கு வருவோம், இந்த ஊரில் survive ஆக வேண்டுமென்றால் மன உறுதியும், உடல் உறுதியும் இருந்தால் ஒழிய காலத்தை ஓட்டுவது மிக கடினம்.
நண்பர் சொக்கன் சொல்லலாம், நம் நம் ஊரில் மட்டும் என்ன வாழ்கிறது
இங்கேயும் கஷ்ட்டப்பட்டால்தான் தேற முடியும் என. நம் ஊரில் பாவ
புண்ணியம் பார்ப்பவர்கள் அதிகம், மேலும் நம் கஷ்டத்தை அடுத்தவரிடம்
கூறி ஆறுதல் தேடலாம், இங்கு அப்படி இல்லை, நம்முடன் பணி புரியும் ஒவ்வொருவரும் அதீத மன உளைச்சலும், வேதனையிலும் உழலும்போது நமக்கு எப்படி ஆறுதலாக இருப்பார்கள். அந்த நண்பர் இங்கு survive ஆக கொஞ்சமும் வாய்ப்பில்லை என்பதை அவரை பார்த்த முதல் நாளிலேயே புரிந்து கொண்டேன்.
(மேலும் எழுதுவேன்.....)
கரையான்.
I think this is the case wherever you immigrate to. AT leaast at thaai naadu one has the support of the family but to survive in a foreign land by yourself involves a lot of mana uridhi and udal uruthi. I have had a few of mine to share but I also was very blessed to have the support of friends in every place I lived and that is priceles..
பதிலளிநீக்குGujili
Here also the culture is changing drastically.Hire and fire is common nowadys.
பதிலளிநீக்குOne end we are not getting workers with involvement like olden days.There is an acute shortage of labours though you are ready to pay.
Other end corporate companies are extracting the maximum work till the person is fit for job.If he is not upgrading him to the present trend he has to loose the job irrespective of the past achievements.
When I showed sympathy to sac people becuse of inadecuate performance I was flagged as inefficient manager.This is the fact
Chocks