ஞாயிறு, மார்ச் 27, 2011

கவிதை


பல்லிளித்து பசப்பு வார்த்தை பேசி
பாலர் பள்ளி அனுமதிக்கு அவசியமில்லை
கிலோ அரிசி ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ
மனக்கிலேசம் எங்களுக்கில்லை
கூனிக்குறுகி டைகட்டி வாய்பொத்தி
தலை ஆட்டி பொம்மையாய்
லட்சங்கள் சம்பாதிக்க ஆசை இல்லை
கிடைக்கும் நேரத்தில்  உண்ணாமல்
பசிக்கும்போது உண்டு
மயங்கும்போது தூங்க மர நிழல்
மின்வெட்டு இங்கில்லை
மேலதிகாரி  பயமில்லை
நேரம் காலம் கணக்கில்லை
வேறென்ன வேண்டும்
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்.......

கரையான்.



3 கருத்துகள்: