செவ்வாய், மார்ச் 01, 2011

எலிகள்

திருடித் தின்றே
பலக்கப்பட்டுத்
தாறுமாறாக
இனப்பெருக்கம் 
செய்யும் எலிகளைப்
பிடிப்பது சுலபமல்ல! 

அதிகாரிகளின் அறை
காவல்துறை
அமைச்சர்களின்
மேசைக்கடியிலும்
நடமாடுகின்றன
எலிகள் சுதந்திரமாக!

பொறிக்குள்
நுழையாமலேயே
உணவை எடுத்துக் கொள்வதில்
பெருச்சாளிகள்
பெரும் திறமை பெற்றவை!

உழைத்துச் சம்பாதிப்பதை
இடைத்தரக சுண்டெலிகளிடம்
தாரை வார்க்க வேண்டியுள்ளது!

அடையாளப்படுத்த
முடிவதில்லை;
எலிகளின் இருப்பிடத்தை
எந்தப் பொந்திலும்
எந்த எலியும் இருக்கலாம்!

வாழ்க்கையின்
எதாவதொருநாளில்
எலிகளைப் த்தான்டியே
வர வேண்டியுள்ளது.

நன்றி:சை.பீர் முஹம்மது

இப்படிக்கு,
எலிகள் தொந்தரவால் வெளிநாடு வந்த,
பாய்.

4 கருத்துகள்:

  1. வாழ்க்கையின்
    எதாவதொருநாளில்
    எலிகளைத் தான்டியே
    வர வேண்டியுள்ளது .
    yenra varigalil irukkira valiyum yathaarththamum apt for our nation.
    But..BHai..don't you come across even a single Yeli out of India..?
    Chocks

    பதிலளிநீக்கு
  2. No Chocks,
    I have been here in Qatar for the past 8 years,but never encountered a yeli[Lancham].Where as in TN,I had to pass many yelies in hierarchial order.
    BHAI.

    பதிலளிநீக்கு
  3. We have yeligal hear but not at the bottom level. There are subtle yeligal that one has to deal with sometimes but a simple lunch or dinner once in a while is enough for them; they don't bother you too much not anywhere close to what it is in TN
    Gujili

    பதிலளிநீக்கு
  4. lanjam is everywhere, it is universal. Only difference is, lanjam is demanded when some work is required to be done out of the normal route. In india even for doing their duty govt officials must be paid lanjam.
    karaiyan.

    பதிலளிநீக்கு