இன்னமும் ஞாபக மேடுகளில்
நிரவிக் கிடக்கிறது
நண்பனின் துரோகங்களும்
நண்பனுக்கு செய்த துரோகங்களும்..
அவமதித்த உறவுகளும்
பிரயோஜனம் இல்லாததாலேயே
உதாசீனம் செய்த உறவுகளும் ..
விரசம் தடவிய பார்வைகளை
கோவில்களில் கூட தவிர்க்க முடியாத
மனோபாவங்களும்...
மனைவியிடம் கூட
பகிர்ந்து கொள்ள முடியாத
சுயங்களும்...
ஏற்றி விட்ட படிகளை
உடைத்துச் செல்லும்
யுத்த தர்மங்களும்...
யாருக்கும் தெரியப் போவதில்லை
என்பதாலேயே
நியாயப் படுத்தப் பட்ட
அதர்மங்களும் ...
வேடிக்கை மட்டும் பார்த்துப் போன
சாலை விபத்துக்களும்..
பேருந்தின் கூட்ட நெரிசலில்
குழந்தையைச் சுமந்து தவிக்கும் தாய்க்குக் கூட
இடம் கொடுக்காமல்
எங்கேயோ பார்பபதாய் பாவித்த பொழுதுகளும்...
திட்டிக் கொண்டே செய்து வரும் தர்மங்களும்
.........என
வந்து கொண்டே இருக்கிறது
குழந்தயின் சிரிப்பில்
மனம் கனிந்த வாழ்த்துக்களில்
பாசங்கில்லா
உறவுகளின் குதூகலிப்பில்
எதிர் பார்ப்பில்லா
நட்புகளின் பிடியில்
லட்சியங்களை விதைத்த
பள்ளிப் பருவத்து
ஆசான்களில்
கேட்காமலே உதவும்
அறிமுக மில்லாதவர்களின் குணங்களில்
என்று பட்டியல் நீண்டாலும்..
எனது ரூபம் குரங்கைப் போல
கண்ணும் காதும் மூடிக் கொண்டு
பணியில்
சமூகத்தில்
குடும்பத்தில்...
இன்னமும் ஆடிக் கொண்டே..
சொக்ஸ்
ஏற்றி விட்ட படிகளை
பதிலளிநீக்குஉடைத்துச் செல்லும்
யுத்த தர்மங்களும்...
யாருக்கும் தெரியப் போவதில்லை
என்பதாலேயே
நியாயப் படுத்தப் பட்ட
அதர்மங்களும் ...
kavithai varikal ovvonrum perumpaanmaiyorin ullaththil irunthu varum opputhal vaakku moolankal... arumai...arumai....
nanri chockaa...
karaiyan.
Chocka,
பதிலளிநீக்குAs usual your poems just blow my mind away! Very thought provoking, convicting and reminding me to walk the walk and not just talk the talk. Thank you thank you thank you...
Gujili
Chocks:
பதிலளிநீக்குyour poetry is wonderful and of a very high caliber. My parents enjoyed your poetry too. Thank you,
GFK
Chokkukku Nigar Chokku Dhaan.
பதிலளிநீக்குBHAI.