வெள்ளி, பிப்ரவரி 27, 2009

ஒரு முறை என்னையும் என் சக கால்நடை மருத்துவ நண்பரையும், எங்கள் கிளினிக் அருகில் உள்ள ஒரு மினி zoo க்கு அங்கு இருந்த நாய்களை சிகிச்சை செய்ய அழைத்தார்கள். வழக்கம்போல் நான் எனக்கு அனுபவம் இல்லை என்று ஒதுங்கி கொண்டேன், நம் நண்பர் தான் சிகிச்சை அளிப்பதாக கூறி என்னையும் துணைக்கு அழைத்தார், எனக்கும் ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என அவருடன் சென்றேன். அங்கு இருந்த சர்க்கஸ் நாய்களுக்கு சிகிச்சை அளித்தோம், பின்னர் அங்கிருந்த ஒரு பாகிஸ்தானி ,சிங்கம் ஒன்று கால் தாங்குவதாக(lame) கூறினான்.நம் நண்பர் அதையும் பார்ப்பதாக கூறி அவனுடன் சிங்கம் இருக்கு கூண்டருகில் சென்றார், நான் கூண்டிலிருந்து ஒரு நூறடி தள்ளி நின்றுகொண்டேன். பின்னர் அவன் அவரிடம் வெளியில் எடுத்து காட்டவா என வினவினான், அவரும் குதிரையை trot செய்து பார்ப்பதுபோல் பார்க்க எண்ணி சரியென்று ஒப்புக்கொண்டார், உடனே அவர்கள் நின்று இருந்த பகுதிக்கான இரும்பு gate ஐ பூட்டி விட்டு சிங்கம் இருந்த கூண்டின் கதவை திறந்து விட்டான், சிங்கம் வேகமாக கூண்டை விட்டு வெளியேறியது, அது வந்த பகுதியில் அந்த பாகிஸ்தானியும் நம் நண்பரும் மட்டும்தான், அதை பார்த்து மிரண்டு போன நண்பர் வேகமாக வந்து கம்பிமேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார், அது ஐம்பதடி உயர கேட் எங்கிருந்து ஏறுவது. நான் கேட்டுக்கு மறு பக்கம் நின்றுகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், அவர் என்னிடம் கேட்டைதிறக்க கூறினார், சாவி அந்த பாகிஸ்தானியிடம் நான் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்கத்தான் முடிந்தது.அவர் படும் பாட்டை பார்த்து விட்டு அந்த பாகிஸ்தானி சிங்கத்தை பிடித்து திரும்பவும் கூண்டுக்குள் அடைத்தான். அதன் பின்தான் நம் நண்பருக்கு உயிர் திரும்ப வந்தது. அது ஒன்றும் செய்யாது டாக்டர் சாப் என அவருக்கு ஆறுதல் கூறினான், தேனிர் அருந்தும்போது அவனுடைய சுண்டு விரல் மிஸ் ஆகி இருப்பதை கவனித்து எங்கே என அவனிடம் கேட்டேன், சிங்கம் ஒருமுறை கடித்து விட்டது என சாதாரணமாக கூறினான், அப்போது நம் நண்பர் முகத்தில் எழுந்த பய உணர்ச்சி இன்னும் என் கண் முன்னால் உள்ளது.

கரையான்.

1 கருத்து: