குதிரைகளுக்கு இருப்பது போல் ஒரு well-equipped hospital மற்ற மிருகங்களுக்கு இங்கு இல்லை, அதனால் pharmacy களில் பணி புரியும் மருத்துவர்களே பெரும்பாலும் அந்தந்த கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்றோ அல்லது பார்மசி அருகிலோ வைத்து சிகிச்சை அளிப்பார்கள். சில சமயங்களில் எங்கள் பார்மசிக்கும் குதிரை அல்லாது மற்ற மிருகங்களை எடுத்து வருவார்கள், ஆனால் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுத்து விடுவோம். எங்கள் அருகில் ஒரு எகிப்து நாட்டு கால்நடை மருத்துவர் பணி புரியும் பார்மசி இருந்தது, அவர் ஆடுகளுக்கு owner கொண்டு வரும் pick-up truck -ல் வைத்தே பெரும்பாலான சிகிச்சைகளை அளிப்பார். அவருடைய சிகிச்சைகள் பலவேறாக இருக்கும் caesarean section, mammectomy, hysterectomy என அனைத்து சிகிச்சைகளும் open air theater (அதாவது pick-up truck இன் பின் புறம்) வைத்தே முடிப்பார். பெரும்பாலும் அவருடைய அறுவைகள் தோல்வியிலேயே முடியும். ஒரு முறை அவர் ஒரு ஆட்டை pick-up truck இன் பின் புறம் வைத்து எதோ செய்து கொண்டிருந்தார், நான் அவரருகில் சென்று "என்ன டாக்டர் இப்படி பார்மசி எதிரிலேயே post-mortem செய்கிறீர்கள் எங்களுக்கு துர் நாற்றம் அடிக்காதா என கேட்டேன், என்னுடைய கேள்வியை கேட்டு மிக்க கோபம் அடைந்து, டாக்டர் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ரெண்டு மணி நேரமாக mammectomy செய்து கொண்டு இருக்கிறேன், நீ என்னை கேவலப்படுத்தி விட்டாயே என்று கோபமாக கேட்டார். நான் அவரிடம், "டாக்டர் கொஞ்சம் நல்லா பாருங்கள் rigor martis கூட செட் ஆகி விட்டது இதை எப்படி surgery என்று கூறு கிறீர்கள்" என திருப்பி கேட்டேன். அப்போது தான் அவர் அந்த ஆடு செத்து விட்டது என்பதையே கவனித்தார்.
கரையான்.
hey karayan,
பதிலளிநீக்குThis story tops your earlier one.. my gosh this is truly unbelievable and how does this vet get away with this? Can you report his surgery on postmortems??
Gujili
that's 'Egyptian Style' all over the world.
பதிலளிநீக்குMostly they are 'certificate doctors' -be it human or vety. field.
Bhai.
Dear karaiyan:
பதிலளிநீக்குI keep my colleagues entertained with your stories. Thanks for giving a glimpse of your life in your own unique writing style.
GFK