சனி, பிப்ரவரி 21, 2009

நம் ஊரில் உள்ளதுபோல் இங்கும் பல ஜாதிகள் உண்டு. ஜாதிப்பாசம் இங்கே மிக அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு திருமணம் அவருடைய குடும்பத்தினரால் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடந்த சில மாதங்களுக்கு பின்னர் அந்த மாப்பிள்ளை அவருடைய ஜாதி/ tribe பற்றி தவறான தகவல் கொடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்திருப்பது பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தைக்கு தெரிய வர அவர்கள் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்று விட்டார்கள். ஆனால் அந்த பெண்ணுக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை, அவளுடைய கணவன் மிக அன்பானவன், இருவரும் ஒருவரை ஒருவர் மிக நேசிப்பதாகவும் ஆகவே இருவரையும் ஒன்றாக வாழ அனுமதிக்கவேண்டும் என்றும் நீதி மன்றத்தில் முறை இட்டார்கள். ஆனால் நீதி மன்றம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, இருவரும் வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டார்கள். இந்த பிரச்னை இங்கு பல ஊடகங்களின் மூலமாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவு என்ன ஆனது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஜாதி பிரச்னை கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே உள்ளது, ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வேறு படுகிறது அவ்வளவுதான்.
கரையான்.

1 கருத்து: