செவ்வாய், பிப்ரவரி 24, 2009

பொண்டாட்டி சொல்றத ஒண்ணு கூட காது கொடுத்து கேட்கமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு என்னவரு(குஜிலி பாஷையில சொல்லனும்னா என்னுடைய கண் கண்ட தெய்வம்), ஐயா உங்களுக்கு வயசு நாப்பது ஆவுது சாப்பாட்டுல கட்டுப்பாடு வேணும்னு சொன்னேன். நான் சொன்னத கேக்காம நாங்கெல்லாம் யாரு வயது எண்பது ஆனா கூட நான் குமரன் தான் கிழவனில்லடி, கல்ல தின்னா கூட எங்களுக்கு ஒன்னும் ஆவாது என்று சொல்லிட்டு, வேண்டாம்னு நான் சொன்னத கேக்காம ஒட்டகப்பால் குடிக்க கிளம்பிட்டாரு. ஒட்டகப்பால் காய்ச்சாம குடிச்சா பேதி ஆகும்கறது நாடறிஞ்ச விஷயம், வெள்ளிக்கிழமை காலையில வெறும் வயித்துல குடிக்கிறேன்னு ஒரு லிட்டர் முழுசா குடிச்சிட்டு வந்தாரு. குடிச்ச ஒரு மணி நேரத்தில அது வேலையை தொடங்கிடுச்சி non-stop ஆக . மனுஷன் போறாரு, வர்றாரு வந்த வேகத்திலய திரும்ப போறாரு, மடை திறந்த வெள்ளம்போல நிறுத்த முடியாது, அதுவே நின்னாதான் உண்டு. கிட்ட தட்ட மூணு மணி நேரம் நாக்குல ஒட்டி இருக்கிற கடைசி சொட்டு ஓட்டகப்பாலு கூட அதோட வேலையை செய்துட்டுதான் போகும். இவரு வயிறு காலி ஆச்சோ இல்லையோ, வீட்டுல இருந்த over-head tank காலி ஆயிடுச்சி. அந்த மூணு மணி நேரம் எங்கள படுத்திய பாடு இருக்கே. வேலியில போற ஓணான எடுத்து மடியில கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே ன்னா நான் என்ன செய்ய முடியும். உங்களுக்குத்தான் தெரியுமே அதை ஏன் குடிச்சீங்கன்னு கேட்டா, "நீ செய்யற சாப்பாட்டையே இத்தனை வருஷமா ஒரு பிரச்சனையும் இல்லாம சாபிடுறேன், இது என்ன செய்துடப்போரதுன்னு ஒரு நம்பிக்கையுள்ள குடிச்சேன்னு", அந்த நேரத்திலையும் குசும்பு போகல. நல்ல வேலை இவருக்கு குமரன்னு பேரு வச்சாங்க குழந்தைன்னு வைக்காம விட்டாங்க. என்னவரு எனக்கு ஹீரோ மட்டுமில்லை காமெடியன் கூடத்தான்.
திருமதி.கரையான்.

5 கருத்துகள்:

  1. Thirumadhi Karayan avargale,
    That was an extremely funny anecdote!! Blog vaasithavudan urundu urundu sirikaadha korai dhaan yennaku.. Neengal iruvarum - kanavan manaiviyaga seydhitaazhil "humor" column dhayavu senji yezhudavendum. Ungal iruvarakkum deivam commedy yezhudhum thalaandhai koduthullar..
    Please write more!!
    Gujili

    பதிலளிநீக்கு
  2. Thirmathi Karaiyaan Avargaley:
    Intha sambhavathai padithuvitu naan oreydiyaa sirithen.Gujili solvathupol yungal writing style romba dhool kalaparudhu! As far as drinking Camel Milk, Yaaro ithey blogil yezhuthirunthaargal ottaga paalai kudikka koodaa thenru. Oru nimidam.... Gnabagam vandhiduchu..... Karaiyan avargal thaan. Ippothaan therigirathu sondha anubavathil irundhu yezhudhinaar yendru!
    GFK

    பதிலளிநீக்கு
  3. Yes.Drinking camel's raw milk,will make everybody to empty not only his digestive tract,but also the water pipelines.
    BHAI.

    பதிலளிநீக்கு
  4. Yes I will write more, especially husband and wife jokes between me and my kankanda deivam. Thank you very much for the compliments.
    Thirumathi.Kumaran.

    பதிலளிநீக்கு
  5. So does anyone know why camel's milk cause so much digestive problems? Does their milk have a high fat content?
    Gujili

    பதிலளிநீக்கு