சனி, பிப்ரவரி 21, 2009

நான் செட்டிநாடு பண்ணையில் பணி புரியும் போது சில சமயங்களில் மனம் நொந்து போகும், இரவு பகலாக கண்விழித்து சில சமயம் சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் குதிரை மண்டையை போட்டுவிடும், அந்த சமயங்களில் நம்மை மேலும் நோகடிக்கும் விதமாக "இன்னும் கொஞ்சம் சரியாக சிகிச்சை அளித்திருக்கலாம்" என சில மேலதிகாரிகள் கொடுக்கும் அறிவுரைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும். ஒரு வேளை குதிரை நல்லபடியாக பிழைத்து கொண்டால் "கடவுள் புண்ணியத்துல பொழச்சுக்கிச்சு" என அவர்களே மாற்றி மேலும் நோகடிப்பார்கள். ஒரு முறை சவுதியில் நான் சிகிச்சை அளித்த குதிரை ஒன்று மாண்டு விட நான் மிகவும் வருத்தம் அடைந்தேன், எனக்கு ஒரு சின்ன உறுத்தல் முதலிலேயே அதை நான் அறுவை சிகிச்சைக்கு refer செய்து இருக்கலாமே என்று. அதன் முதலாளி என்னிடம் டாக்டர் நீ நன்றாகவே சிகிச்சை அளித்தாய், இது கடவுள் செயல். அதை பற்றி கவலை படாதே என்றார். அந்த குதிரையின் விலை ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கும் மேல்(நம் பணத்துக்கு கிட்ட தட்ட ஒன்னேகால் கோடி), மற்றொரு முறை அவரின் ஒரு குதிரை ஐந்து ஆண்டுகள் barren ஆக இருந்து pregnant ஆகியது, மிக்க சந்தோசம் அடைந்த அவர் என் கையை பிடித்து "இது தங்க கைகள் " என்றார். நான் இதையே செட்டிநாட்டில் இருந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் என எண்ணிக்கொண்டே அவரிடம்" எல்லாம் அவன் செயல்" என்றேன்.

கரையான்.

1 கருத்து: