சில சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் நான் எழுதும் பல செய்திகளின் மூலம், ஆகவே பாய் சொல்வது போல் அந்த மாதிரி எதுவுமே இல்லை(மத்திகிரியில் பாய்) என்பது ஒப்புக்கொள்ள கஷ்டம்தான். அதனால் என்ன நான் தொடர்ந்து எழுதுவேன்.
ஒரு முறை சவூதி நண்பர் ஒருவர், ஆர்மியில் பெரிய பதவியில் இருப்பவர் என்னை அவருடைய ஆர்மி பயிற்சி பள்ளியில் உள்ள சில குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்தார். நானும் சென்று என்னுடைய பணி முடிந்த வுடன் அவரிடம், இவ்வளவு குதிரைகள் இருக்கிறதே ஏன் நீங்கள் ஒரு கால்நடை மருத்துவரை இங்கு பணி அமர்த்தக்கூடாது ? என வினவினேன். அதற்கு அவர் அங்கு ஒரு சவூதி கால்நடை மருத்துவர் பணி புரிந்ததாகவும், அவரால் அதிகாலை ஐந்து மணிக்கு பணி வருவதற்கு சிரமமாக இருப்பதால் வேலையிலிருந்து சென்று விட்டார் என்றும், அவர் பணிவருவார் என எண்ணி அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் வாங்கியதாகவும் அவர் சென்று விட்டதால் வீணாக இருப்பதாகவும் கூறினார், அதை என்னை பார்வை இட வேண்டினார். நானும் அந்த புத்தம் புதிய கருவியை பார்வை இட்டு அதிர்ந்து போனேன், ஏனென்றால் அது மனிதர்களுக்கு உபயோக படுத்தும் ஸ்கானர் ஆகும், அதில் rectal probe க்கு பதில் trans-abdominal probe இருந்தது. நான் அதை வாங்கியது யார் என அவரிடம் கேட்டேன், முன்னாள் பணியிலிருந்த கால்நடை மருத்துவர்(சவூதி) தான் அந்த கருவியை தேர்வு செய்து order கொடுத்தார் என்றார். நான் அவரிடம் அந்த கருவியை வைத்துக்கொண்டு குதிரைக்கு PD செய்ய முடியாது என்பதை விளக்கினேன்.அதை கேட்டு மிகவும் நொந்து விட்டார், அதை என்ன செய்வது என்று பல நாட்கள் யோசித்து, கடைசியில் ஆர்மி மருத்துவமனைக்கு அதை கொடுத்தார்.
கரையான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக