புதன், பிப்ரவரி 18, 2009

வந்துவிட்டேன் திரும்பவும், கணினியில் எழுந்த பிரச்சனைகளால் கடந்த ஒரு வாரமாக ஒன்றும் எழுத முடியவில்லை. சவுதியில் என் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான சம்பவங்களுடன் எழுத விரும்பிகிறேன்..
சவூதி என்றவுடன் பலருக்கும் ஒரு பயம்தான் எழுகிறது, சவுதியிலையா இருக்கே என்று ஒரு அதிசய விலங்கைப்பாப்பதுபோல்தான் அவர்களுடைய உணர்ச்சி வெளிப்பாடு இருக்கும், செய்தி ஊடகங்கள் அளிக்கும் தவறான செய்திகள் மற்றும் இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள்தான் அதற்கு காரணம். நான் முதல் முதலாக இங்கு வந்தபோது என் மனைவி,சகோதரர் மற்றும் என் தாயார் என அனைவரின் எதிர்ப்பையும் மீறித்தான் வந்தேன். இந்திய செய்தி ஊடகங்கள் (உலக ஊடகங்களும்தான்) மூலம், இங்கு எல்லோரும் பெரிய தாடி வளர்த்துக்கொண்டு, கையில் AK-47 துப்பாக்கி வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கார்களை கொன்று குவிப்பது போன்று ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அப்படி எதுவும் கிடையாது, உலகிலேயே மிக பாதுகாப்பான இடம் இதுதான் என நான் கூறுவேன்.
ஒரு சிறிய காரியம் ஆக வேண்டுமென்றாலும் ஏரியா தாதாவான கவுசிலரைப்பிடித்து, அவர் மூலமாக வட்ட செயலாளரிடம்சொல்லி ,தலைவரைப்பார்த்து கூழை கும்பிடு போட்டு கொடுக்க வேண்டிய கமிஷனை வெட்டி வேலையை முடிக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. நிலத்தை வாங்கிப்போட்டு கொஞ்சம் ஆயாசப்படுத்தி திரும்புவதற்குள் வேறொருவன் போலி பத்திரம் தயாரித்து அதே இடத்தில் கோபுரமே கட்டி விடும் அநியாயங்கள் இங்கு நடப்பதில்லை. நான் நம் நாட்டை கேவலப்படுத்துவதாக் யாரும் எண்ண வேண்டாம், நடப்பதை கூறுகிறேன்.
தொடருவேன்.......கரையான்.

2 கருத்துகள்: