வெள்ளி, பிப்ரவரி 27, 2009

ஒரு முறை என்னையும் என் சக கால்நடை மருத்துவ நண்பரையும், எங்கள் கிளினிக் அருகில் உள்ள ஒரு மினி zoo க்கு அங்கு இருந்த நாய்களை சிகிச்சை செய்ய அழைத்தார்கள். வழக்கம்போல் நான் எனக்கு அனுபவம் இல்லை என்று ஒதுங்கி கொண்டேன், நம் நண்பர் தான் சிகிச்சை அளிப்பதாக கூறி என்னையும் துணைக்கு அழைத்தார், எனக்கும் ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என அவருடன் சென்றேன். அங்கு இருந்த சர்க்கஸ் நாய்களுக்கு சிகிச்சை அளித்தோம், பின்னர் அங்கிருந்த ஒரு பாகிஸ்தானி ,சிங்கம் ஒன்று கால் தாங்குவதாக(lame) கூறினான்.நம் நண்பர் அதையும் பார்ப்பதாக கூறி அவனுடன் சிங்கம் இருக்கு கூண்டருகில் சென்றார், நான் கூண்டிலிருந்து ஒரு நூறடி தள்ளி நின்றுகொண்டேன். பின்னர் அவன் அவரிடம் வெளியில் எடுத்து காட்டவா என வினவினான், அவரும் குதிரையை trot செய்து பார்ப்பதுபோல் பார்க்க எண்ணி சரியென்று ஒப்புக்கொண்டார், உடனே அவர்கள் நின்று இருந்த பகுதிக்கான இரும்பு gate ஐ பூட்டி விட்டு சிங்கம் இருந்த கூண்டின் கதவை திறந்து விட்டான், சிங்கம் வேகமாக கூண்டை விட்டு வெளியேறியது, அது வந்த பகுதியில் அந்த பாகிஸ்தானியும் நம் நண்பரும் மட்டும்தான், அதை பார்த்து மிரண்டு போன நண்பர் வேகமாக வந்து கம்பிமேல் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார், அது ஐம்பதடி உயர கேட் எங்கிருந்து ஏறுவது. நான் கேட்டுக்கு மறு பக்கம் நின்றுகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், அவர் என்னிடம் கேட்டைதிறக்க கூறினார், சாவி அந்த பாகிஸ்தானியிடம் நான் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்கத்தான் முடிந்தது.அவர் படும் பாட்டை பார்த்து விட்டு அந்த பாகிஸ்தானி சிங்கத்தை பிடித்து திரும்பவும் கூண்டுக்குள் அடைத்தான். அதன் பின்தான் நம் நண்பருக்கு உயிர் திரும்ப வந்தது. அது ஒன்றும் செய்யாது டாக்டர் சாப் என அவருக்கு ஆறுதல் கூறினான், தேனிர் அருந்தும்போது அவனுடைய சுண்டு விரல் மிஸ் ஆகி இருப்பதை கவனித்து எங்கே என அவனிடம் கேட்டேன், சிங்கம் ஒருமுறை கடித்து விட்டது என சாதாரணமாக கூறினான், அப்போது நம் நண்பர் முகத்தில் எழுந்த பய உணர்ச்சி இன்னும் என் கண் முன்னால் உள்ளது.

கரையான்.

செவ்வாய், பிப்ரவரி 24, 2009

மதிப்புக்குரிய நண்பர்களே நண்பிகளே , நாடு நடுவில் நான் காணாம போய்டுவேன் ஆனால் தினமும் பிளாக் ஒரு முறை கண்டிப்பாக படிப்பேன்.
நம்ம IDC நினைவுகளை இன்று பகிர்ந்து கொள்வேன். நாங்கள் Day Scholars பரிக்ஷைக்கு உருண்டு பொருந்து படித்துவிட்டு பேருந்தில் இருந்து புஸ்தக்கத்துக்குள் மூக்கை நுழைத்து கொண்டு இரங்க, கல்லூரியின் front lawn யில் நம்மக்கள் உட்கார்ந்து கொண்டிர்ருபார்கள்.
ஒரு முறை நான் IDC break இல் திருநெல்வேலி சென்று இருந்தேன்(அது எனது அப்பாவின் சொந்த ஊரு ). அங்கே பத்து நாள் நன்றாக எல்லாம் சுற்றி பாத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு திரும்ப வந்தோம். அங்கே ஹல்வா வாங்கிவிட்டு பேருந்து ஏற வந்தால் திடீரென்று மூணு நாலு குரல் அக்கா அக்கா என்று கேட்டது. இது யாரு நம்பலை இப்பட்டி அழைக்கிறார்கள் என்று பார்தால் நம்ம juniors சில பெண்கள் !
அக்கா! கல்லூரி திரும்பவும் திறக்க போகிறது உங்களுக்கு கடிதம் கிடைத்ததா என்று எனக்கு தகவல் குடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறி, அதே பேருந்தில் திரும்பவும் சென்னை வந்து சேந்தோம். வழியில் எல்லா கடவுள்களுக்கும் நன்றி சொல்லி கொண்டு வீட்டுக்கு திரும் பி வந்தேன்.
GFK

குதிரை medicine

மதிப்பிற்குரிய பாய்/ கரையான்/பீர் அவர்களே,
உங்களுக்கு ஒரு குதிரை மருத்துவத்துறை கேள்வி ஒன்று கேட்க விரும்புகிறேன். In my Endocrinology class, one of my students had a question about her horse. I believe it is castrated but it is still extremely aggressive. Supposedly the vet prescribed Depoprogesterone and she was curious how that would help. I am aware that castration alone will not suppress the aggression as adrenals are also a source of testosterone. However I was curious if in your practice as equine vets or vets if you prescribed progesterone for aggressive horses and if so why and does it work?
Thanks - Gujili
பொண்டாட்டி சொல்றத ஒண்ணு கூட காது கொடுத்து கேட்கமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு என்னவரு(குஜிலி பாஷையில சொல்லனும்னா என்னுடைய கண் கண்ட தெய்வம்), ஐயா உங்களுக்கு வயசு நாப்பது ஆவுது சாப்பாட்டுல கட்டுப்பாடு வேணும்னு சொன்னேன். நான் சொன்னத கேக்காம நாங்கெல்லாம் யாரு வயது எண்பது ஆனா கூட நான் குமரன் தான் கிழவனில்லடி, கல்ல தின்னா கூட எங்களுக்கு ஒன்னும் ஆவாது என்று சொல்லிட்டு, வேண்டாம்னு நான் சொன்னத கேக்காம ஒட்டகப்பால் குடிக்க கிளம்பிட்டாரு. ஒட்டகப்பால் காய்ச்சாம குடிச்சா பேதி ஆகும்கறது நாடறிஞ்ச விஷயம், வெள்ளிக்கிழமை காலையில வெறும் வயித்துல குடிக்கிறேன்னு ஒரு லிட்டர் முழுசா குடிச்சிட்டு வந்தாரு. குடிச்ச ஒரு மணி நேரத்தில அது வேலையை தொடங்கிடுச்சி non-stop ஆக . மனுஷன் போறாரு, வர்றாரு வந்த வேகத்திலய திரும்ப போறாரு, மடை திறந்த வெள்ளம்போல நிறுத்த முடியாது, அதுவே நின்னாதான் உண்டு. கிட்ட தட்ட மூணு மணி நேரம் நாக்குல ஒட்டி இருக்கிற கடைசி சொட்டு ஓட்டகப்பாலு கூட அதோட வேலையை செய்துட்டுதான் போகும். இவரு வயிறு காலி ஆச்சோ இல்லையோ, வீட்டுல இருந்த over-head tank காலி ஆயிடுச்சி. அந்த மூணு மணி நேரம் எங்கள படுத்திய பாடு இருக்கே. வேலியில போற ஓணான எடுத்து மடியில கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே ன்னா நான் என்ன செய்ய முடியும். உங்களுக்குத்தான் தெரியுமே அதை ஏன் குடிச்சீங்கன்னு கேட்டா, "நீ செய்யற சாப்பாட்டையே இத்தனை வருஷமா ஒரு பிரச்சனையும் இல்லாம சாபிடுறேன், இது என்ன செய்துடப்போரதுன்னு ஒரு நம்பிக்கையுள்ள குடிச்சேன்னு", அந்த நேரத்திலையும் குசும்பு போகல. நல்ல வேலை இவருக்கு குமரன்னு பேரு வச்சாங்க குழந்தைன்னு வைக்காம விட்டாங்க. என்னவரு எனக்கு ஹீரோ மட்டுமில்லை காமெடியன் கூடத்தான்.
திருமதி.கரையான்.

திங்கள், பிப்ரவரி 23, 2009

தோழி GFK அவர்களின் வேண்டுகோளை ஏற்று நம் நண்பர்களின் விலாசங்களை சேகரிக்கும் முயற்சியாக நம் நண்பர் "கொசு" விடம் நம் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்களை எனக்கு மெயில் செய்யுமாறு பத்து நாட்களுக்கு முன் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தேன். உடனே அனுப்புவதாக உறுதி அளித்தார், அந்த "உடனே" இன்னும் வரவில்லை. இன்று அவருக்கு நினைவு படுத்தி அழைத்தால் வேலைப்பளுவில் மறந்துவிட்டதாக கூறுகிறார். ஈரோடில் கால்நடை மருந்தகத்தில் இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சில நண்பர்களை மாற்றவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கரையான்.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

எல்லா ஊருலயும் வெள்ளக்காரங்கன்னா கொஞ்சம் அதிகமாகவே மதிக்கப்படுவார்கள், இங்க அது கொஞ்சம் அதிகம். வெளிநாட்டுகாரர்களில் , வெள்ளக்கரங்களுக்கு இந்த ஊருல எங்க போனாலும் ராஜ மரியாதைதான்., அதுவும் அமெரிக்கா காரன்னா ரொம்ப .... நம்முடைய நண்பர் பீர் சொன்ன ஒரு சம்பவம் இங்க பகிர்ந்துக்க விரும்பறேன். சவுதியில் ஒரு பெரிய கோழி கம்பனி அவுங்க தீவன தொழிற்சாலைக்கு ஒரு nutritionist பணி நியமனம் செய்ய முடிவு செய்தார்கள். அதற்கு ஒரு அமெரிக்கா மருத்துவர நியமனம் செய்ய அந்த கம்பனி இயக்குனர்கள் கூடி முடிவு செய்து, அவர்களுடைய அமெரிக்கா agent க்கு ஒரு nutritionist ஐ தேர்வு செய்து அனுப்புமாறு தகவல் அனுப்பினார்கள். அவரும் ஒரு அமெரிக்கரை தேர்வு செய்து அனுப்பி வைத்தார். வருவது அமெரிக்கர் ஆயிற்றே வரவேற்க கம்பனியின் முதன்மை மேலாளரே விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டுமல்லவா.... வரவேற்க இவரும் சென்றார், அந்த அமெரிக்கரும் வந்தார், ஆனால் அடுத்த நாளே அவரை திரும்ப அமெரிக்காவிற்கே அனுப்பி விட்டார்கள், ஏன் தெரியுமா, வந்தவர் கருப்பு அமெரிக்கர்.... இவர்களுக்கு தோல் வெள்ளையாக வேண்டும்....

கரையான்.

நன்றி நன்றி நன்றி

அன்புள்ள சென்னை நட்சத்திரங்களே,
உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும் என் கண் கண்ட தெய்வம் சார்பிலும் உங்கள் வாழ்துதல்களுக்கு மிக்க நன்றி.
குஜிலி

சனி, பிப்ரவரி 21, 2009

நம் ஊரில் உள்ளதுபோல் இங்கும் பல ஜாதிகள் உண்டு. ஜாதிப்பாசம் இங்கே மிக அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு திருமணம் அவருடைய குடும்பத்தினரால் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடந்த சில மாதங்களுக்கு பின்னர் அந்த மாப்பிள்ளை அவருடைய ஜாதி/ tribe பற்றி தவறான தகவல் கொடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்திருப்பது பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தைக்கு தெரிய வர அவர்கள் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்று விட்டார்கள். ஆனால் அந்த பெண்ணுக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை, அவளுடைய கணவன் மிக அன்பானவன், இருவரும் ஒருவரை ஒருவர் மிக நேசிப்பதாகவும் ஆகவே இருவரையும் ஒன்றாக வாழ அனுமதிக்கவேண்டும் என்றும் நீதி மன்றத்தில் முறை இட்டார்கள். ஆனால் நீதி மன்றம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, இருவரும் வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டார்கள். இந்த பிரச்னை இங்கு பல ஊடகங்களின் மூலமாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவு என்ன ஆனது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஜாதி பிரச்னை கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே உள்ளது, ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வேறு படுகிறது அவ்வளவுதான்.
கரையான்.

The team "Chennai Stars" congratulate Gujili and her husband for being promoted as "Associate Professor". Gujili's kanavar must be the luckiest person on earth as having the best things in life."British Education, American Salary and Indian Wife" We are very are happy with only one of these, he must be doubly or triply happy.

கரையான்.

நான் செட்டிநாடு பண்ணையில் பணி புரியும் போது சில சமயங்களில் மனம் நொந்து போகும், இரவு பகலாக கண்விழித்து சில சமயம் சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் குதிரை மண்டையை போட்டுவிடும், அந்த சமயங்களில் நம்மை மேலும் நோகடிக்கும் விதமாக "இன்னும் கொஞ்சம் சரியாக சிகிச்சை அளித்திருக்கலாம்" என சில மேலதிகாரிகள் கொடுக்கும் அறிவுரைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும். ஒரு வேளை குதிரை நல்லபடியாக பிழைத்து கொண்டால் "கடவுள் புண்ணியத்துல பொழச்சுக்கிச்சு" என அவர்களே மாற்றி மேலும் நோகடிப்பார்கள். ஒரு முறை சவுதியில் நான் சிகிச்சை அளித்த குதிரை ஒன்று மாண்டு விட நான் மிகவும் வருத்தம் அடைந்தேன், எனக்கு ஒரு சின்ன உறுத்தல் முதலிலேயே அதை நான் அறுவை சிகிச்சைக்கு refer செய்து இருக்கலாமே என்று. அதன் முதலாளி என்னிடம் டாக்டர் நீ நன்றாகவே சிகிச்சை அளித்தாய், இது கடவுள் செயல். அதை பற்றி கவலை படாதே என்றார். அந்த குதிரையின் விலை ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கும் மேல்(நம் பணத்துக்கு கிட்ட தட்ட ஒன்னேகால் கோடி), மற்றொரு முறை அவரின் ஒரு குதிரை ஐந்து ஆண்டுகள் barren ஆக இருந்து pregnant ஆகியது, மிக்க சந்தோசம் அடைந்த அவர் என் கையை பிடித்து "இது தங்க கைகள் " என்றார். நான் இதையே செட்டிநாட்டில் இருந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் என எண்ணிக்கொண்டே அவரிடம்" எல்லாம் அவன் செயல்" என்றேன்.

கரையான்.

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

tenure and promotion

அன்புள்ள நண்பர்களே
எனக்கும் என்னுடைய சம்சாரத்துக்கும் இன்றைக்கு tenure and ப்ரோமொடின் கிடைத்துள்ளது. ஆதலால் நாங்கள் இருவரும், assistant இல் இருந்து associate professor ஆகி விட்டோம்..
குஜிலி...

வியாழன், பிப்ரவரி 19, 2009

coming back to life in saudi arabia .........

முதல் முறையாக நான் பணிபுரியும் இடம் செல்லும்போது எங்களுக்கு அவ்வளவாக வழி தெரியாது, ஒரு பண்ணைக்கு செல்லும் வழியில் மணலில் எங்கள் வாகனத்தின் டயர்கள் சிக்கிக்கொண்டது. எங்களால் மிகுந்த முயற்சிகளுக்கு பின்னும் வண்டியை எடுக்க முடிய வில்லை. அப்போது வெகு தூரத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த இருவர் நாங்கள் சுட்டெரிக்கும் வெய்யிலில் எங்கள் வாகனத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு எங்கள் அருகில் வந்தனர். அவர்கள் பார்க்க கரடு முரடான ஆசாமிகளாக தோன்றினார்கள்(அவர்களிடம் AK-47 ஏதும் இல்லை). விடு விடுவென அவர்கள் காரிலிருந்த கயிற்றை எடுத்து எங்கள் வண்டியில் கட்டினார்கள் பின்னர் டயர் பதிந்திருந்த தடத்தில் மணலை கையாலேயே எடுத்தார்கள், விடுவிடுவென ஐந்து நிமிடத்தில் எங்கள் வண்டியை இழுத்து சமமான தரையில் விட்டு எங்கள் நன்றியை கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டார்கள்.

if you work hardu in வெயில், you can enjoy the நிழலு later in your வாழ்க்கை. All people வந்து play in the groundu. If you want to achieve the அது you have to do இது. you people playing க்கு பிறகு leave all சாமான் like this not goodu. you must keep them in அதது இருந்த place ல். I am கஷ்டப்பட்டு working for you people to get all the இது. but you people புரிஞ்சிக்கரதில்ல.

நம்முடைய Physical டைரக்டர் இன் டயலாக் சாம்பிள்.

புதன், பிப்ரவரி 18, 2009

வந்துவிட்டேன் திரும்பவும், கணினியில் எழுந்த பிரச்சனைகளால் கடந்த ஒரு வாரமாக ஒன்றும் எழுத முடியவில்லை. சவுதியில் என் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான சம்பவங்களுடன் எழுத விரும்பிகிறேன்..
சவூதி என்றவுடன் பலருக்கும் ஒரு பயம்தான் எழுகிறது, சவுதியிலையா இருக்கே என்று ஒரு அதிசய விலங்கைப்பாப்பதுபோல்தான் அவர்களுடைய உணர்ச்சி வெளிப்பாடு இருக்கும், செய்தி ஊடகங்கள் அளிக்கும் தவறான செய்திகள் மற்றும் இங்கு இருக்கும் கட்டுப்பாடுகள்தான் அதற்கு காரணம். நான் முதல் முதலாக இங்கு வந்தபோது என் மனைவி,சகோதரர் மற்றும் என் தாயார் என அனைவரின் எதிர்ப்பையும் மீறித்தான் வந்தேன். இந்திய செய்தி ஊடகங்கள் (உலக ஊடகங்களும்தான்) மூலம், இங்கு எல்லோரும் பெரிய தாடி வளர்த்துக்கொண்டு, கையில் AK-47 துப்பாக்கி வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கார்களை கொன்று குவிப்பது போன்று ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அப்படி எதுவும் கிடையாது, உலகிலேயே மிக பாதுகாப்பான இடம் இதுதான் என நான் கூறுவேன்.
ஒரு சிறிய காரியம் ஆக வேண்டுமென்றாலும் ஏரியா தாதாவான கவுசிலரைப்பிடித்து, அவர் மூலமாக வட்ட செயலாளரிடம்சொல்லி ,தலைவரைப்பார்த்து கூழை கும்பிடு போட்டு கொடுக்க வேண்டிய கமிஷனை வெட்டி வேலையை முடிக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. நிலத்தை வாங்கிப்போட்டு கொஞ்சம் ஆயாசப்படுத்தி திரும்புவதற்குள் வேறொருவன் போலி பத்திரம் தயாரித்து அதே இடத்தில் கோபுரமே கட்டி விடும் அநியாயங்கள் இங்கு நடப்பதில்லை. நான் நம் நாட்டை கேவலப்படுத்துவதாக் யாரும் எண்ண வேண்டாம், நடப்பதை கூறுகிறேன்.
தொடருவேன்.......கரையான்.

வியாழன், பிப்ரவரி 12, 2009

நண்பர்களே,
நான் ஒரு excel document create பண்ணி இருக்கிறேன் . நீங்கள் என்னக்கு நம்ம அட்டேண்டன்சே register பெயர்களை கொடுத்தால் மற்றும் தங்கள் முகவரி,telephone number, email அட்ரஸ்,spouse name ,children name if any வித் age. If you could pass it on to my email address I will start filling up the columns then I can pass it on to others with all your permission. Please let me know if it works and acceptable to all of you. Thanks for the help.

GFK

பிஸி நாட்கள்

எல்லோருக்கும் வாழ்க்கை மிக பிஸி ஆகி போய்விட்டது; இந்த ஸ்ப்ரிங் செமஸ்டர் இல் பிப்ரவரி மாதம் மற்ற மாதங்களை விட அதிக பிஸி. எங்கள் departmentil புது ப்ரோபிச்சொர் வேலைக்கு interview செய்கிறோம்.
என்ன பிசியாக இருந்தாலும் நான் தினமும் blog ai வாசிப்பேன்.
என் மௌனத்திற்கும் மன்னிக்கவும்...
சீக்கிரம் ப்ளோகில் என்ட்ரி செய்வேன்.
Gujili

செவ்வாய், பிப்ரவரி 10, 2009

அன்புக்குரிய நண்பர்களே:
நீண்ட மௌனத்திற்கு மன்னிக்கவும். இங்கே வாழ்க்கை became a little busy.Neal was sick, after that it was my turn again. Anyway this blog is my daily tonic and it keeps me going. Here is a very funny coincidence. Mani Konaar's batch is celebrating silver jubilee of their graduation this year with a event in December in their college. It has been the tradition of their college for many years. So their class has a blog too just like us! So everyday Mani Konaar and I share each other's blog postings. The thing they have done is made an huge excel document with their whole attendance register in it with columns for spouses name,children's name,present address and phone number. Frankly they have the whole class on the blog and I wish we could get more people to post. I will try to do it but I will need help with names as you know by now.
GFK

பாயின் நண்பர்கள்



1.கொடைக்கானலில் எடுத்தது-1995.
2.பட்டமளிப்பு விலா. -படத்தில் இருக்கும் நண்பர்களை விட, மதிப்பிற்குரிய ஆசான், டாக்டர்.வேங்கட சுப்பா ராவ் ,அவர்களை என்றும் மறக்க முடியாது.
நமது வாத்தியார்களில் மிகவும் நேர்மையான ,அனைவருக்கும் உதவி செய்யக்குடிய ,பந்தா இல்லாத ஜென்டில்மன். இவரைப் போன்ற ஓரிரு நல்ல ஆசான் கலைக், குறித்து எழுதுவேன். இன்றும் அவருடன் தொடர்பு வைத்துள்ளேன். நான் RECOMMEND செய்து அவரிடம் செல்ப வர்களுக்கு ,அனைத்து உதவியும் செய்வார்.அவர் நீடூழி வால்க!333
3.ஆல் இந்தியா டூரில் -தாஜ்மகாலில் எடுத்தது.யார் எனது இடது புறத்தில் ஒட்டிகொண்டுல்லானோ ,அவன் தான் இன்று வரை ,ஒழுங்காக தொடர்பு வைத்துள்ளான்.அவன் தான் என் ஆருயிர் நண்பன்.அவன் நீடூழி வால்க.மற்றவர்களிடம் எத்தனை முறை பேசினாலும்,பதில் இல்லை.


திங்கள், பிப்ரவரி 09, 2009

சில சுவாரஸ்யமான அனுபவங்கள்தான் நான் எழுதும் பல செய்திகளின் மூலம், ஆகவே பாய் சொல்வது போல் அந்த மாதிரி எதுவுமே இல்லை(மத்திகிரியில் பாய்) என்பது ஒப்புக்கொள்ள கஷ்டம்தான். அதனால் என்ன நான் தொடர்ந்து எழுதுவேன்.

ஒரு முறை சவூதி நண்பர் ஒருவர், ஆர்மியில் பெரிய பதவியில் இருப்பவர் என்னை அவருடைய ஆர்மி பயிற்சி பள்ளியில் உள்ள சில குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்தார். நானும் சென்று என்னுடைய பணி முடிந்த வுடன் அவரிடம், இவ்வளவு குதிரைகள் இருக்கிறதே ஏன் நீங்கள் ஒரு கால்நடை மருத்துவரை இங்கு பணி அமர்த்தக்கூடாது ? என வினவினேன். அதற்கு அவர் அங்கு ஒரு சவூதி கால்நடை மருத்துவர் பணி புரிந்ததாகவும், அவரால் அதிகாலை ஐந்து மணிக்கு பணி வருவதற்கு சிரமமாக இருப்பதால் வேலையிலிருந்து சென்று விட்டார் என்றும், அவர் பணிவருவார் என எண்ணி அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் வாங்கியதாகவும் அவர் சென்று விட்டதால் வீணாக இருப்பதாகவும் கூறினார், அதை என்னை பார்வை இட வேண்டினார். நானும் அந்த புத்தம் புதிய கருவியை பார்வை இட்டு அதிர்ந்து போனேன், ஏனென்றால் அது மனிதர்களுக்கு உபயோக படுத்தும் ஸ்கானர் ஆகும், அதில் rectal probe க்கு பதில் trans-abdominal probe இருந்தது. நான் அதை வாங்கியது யார் என அவரிடம் கேட்டேன், முன்னாள் பணியிலிருந்த கால்நடை மருத்துவர்(சவூதி) தான் அந்த கருவியை தேர்வு செய்து order கொடுத்தார் என்றார். நான் அவரிடம் அந்த கருவியை வைத்துக்கொண்டு குதிரைக்கு PD செய்ய முடியாது என்பதை விளக்கினேன்.அதை கேட்டு மிகவும் நொந்து விட்டார், அதை என்ன செய்வது என்று பல நாட்கள் யோசித்து, கடைசியில் ஆர்மி மருத்துவமனைக்கு அதை கொடுத்தார்.

கரையான்.

புதன், பிப்ரவரி 04, 2009

கரி அறிவியல்

இந்த வாத்தியார் அடிக்கடி THIS ,YEAH என்று மட்டுமல்ல ,பிற ஆங்கில கொலைகளையும் செய்தார்.பெயர் : 'கரி' ரன்.அடுத்த வாரம் ரெகார்ட் SUBMIT பண்ண வேண்டுமேன்றால்,'YOU ALREADY SUBMIT NEXT WEEK' என்று கூறுவார்.ஒரு முறை நான் ரெகார்ட் சுப்மிட் பண்ணவில்லை.ரூமிற்கு அழைத்தார்.ஏன் ? என்று கேட்டார்.நான் அவருடைய பாணியிலேயே ,"சாரி சார் ! I WILL NOT SUBMIT LAST WEEK BECAUSE I AM SICK; NOW,I ALREADY SUBMIT RECORD NEXT WEEK" என்று கூறினேன். ஓகே ,சரி என்று என்னை அனுப்பிவிட்டார்.'B' க்ரடே தந்தார்.என்னைப்போன்று சரியாக காரணம் கூரதவர்களுக்கு 'C' and 'D' grades தான் குடுத்தார்.
பாய்.

மத்திகிர்யில் பாய்

எனது மத்திகிரி ப.கே.ப . அனுபவங்களை எழுதும்படி கறையானும் ,பீரின் அனுபவங்களை எழுதும்படி குஜிளியிம் கூறியுள்ளனர். என் தரப்பிலிருந்து எழுதுவதற்கு ஏதும் இல்லை.அங்கு எனது நேரம் பின்வருமாறு கழிந்தது.வகுப்பு முடிந்ததும் முற்பகலிலும் பிற்பகலிலும் கிரிக்கெட் விளையாடுதல்,இரவில் கார்ட்ஸ் ,அதிகாலையில் VAS வீட்டிற்கு சென்று ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் மட்சுகளை டீவீயில் பார்த்தல் ,விடுமுறை நாட்களில் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு செல்தல் .இருப்பினும் ஐந்தாண்டு கல்லூரி ஹோச்டல் வாழ்கையை விட ,இங்குள்ள மூன்று மாத வாழ்கை பிரமாதம். ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம்.புத்தாண்டு தினத்தன்று இரவு நேர GET TOGETHER இல் ,பிரியப்போகிறோம் என்று பேசும்போது அழுது விட்டேன்.
பீர் ஒரு சாது.CD பட்சினர் ஜோடி சேருவதிலேயே மதிகிரியை களித்தனர். AB பட்சிப்போல் ஒரு உள்ளார்ந்த அன்பு,கேலி,கிண்டல் ,SPORTIVE தன்மை அவர்களிடம் இல்லை. வால்க வளமுடன்,
பாய்.

திங்கள், பிப்ரவரி 02, 2009

குஜிலி ஜெயபாபுவுடைய ஒருதலை காதல் பற்றி எழுதியதும் அவனுடைய தோல்வியடைந்த காதல் முயர்ச்சிகளிலோன்று நினைவுக்கு வருகிறது.நாம் மத்திகிரியில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் ஐந்து பேர்கள் மெஸ்ஸில் சாப்பாடு பரிமாற வேண்டும். அப்போது அந்த குறிப்பிட்ட பெண் சாப்பாடு பரிமாற வரும்போது அவனுடைய தட்டில் சோற்றிலேயே I LOVE YOU என எழுதி வைத்து, குழம்பு ஊற்றும்போது தட்டை தூக்கி அந்த பெண் பார்க்க ஏதுவாக காட்டுவான், ஆணால் அந்த பெண்ணோ அதை கண்டு கொள்ளாமல் எழுத்துக்கள் அழியுமாறு குழம்பை அதிகமாக ஊற்றுவார். ஆனால் அதை பற்றி நினைத்து மனம் நொந்துவிடாமல் அடுத்த நாளும் வேறு வழியில் தன்னுடைய முயற்ச்சியை தொடருவான்.
கரையான்.

''ஊர்ஸ்" இன் சேட்டைகள்

நமது நண்பர் "ஊர்ஸ்" ஜெயபாபுவின் சேஷ்டைகள் அநேகம் உண்டு. பல ஆண்டுகளாக நீடித்த சேஷ்டை அவருடைய காதல் அனுபவங்கள். அவருடைய நீடிய ONE-SIDED அன்பின் RECIPIENT நமது வகுப்பில் மாதேஸ்வரன்னுகு பின் ATTENDANCE இல் இருக்கும் அழகி. ஜெயபாபு அவழுடைய கொடை ஒன்றை எஅப்படியோ சுடுட்டி விட்டான். அந்த கொடையை விரித்து லேடீஸ் hostel போகும் வழியில் உள்ள மரத்தில் ஏறி உட்கார்ந்து avazhl போகும் போதும் வரும் போதும் பேரை சத்தமாக கூப்பிட்டு "மாமா வந்திருக்கேன்" என்று கூக்குரல் விட்டு கொண்டிருப்பான். அவள் அழாத கொரசேல் தான்.. அவனை கண்டதும் பத்து மயில் தூரம் செல்வாழ்ல் அந்த பெண். ஜெயபாபு என்றால் எப்போதும் அந்த கொடை கூத்து கதை தான் முதல் ஞாயபகத்திற்கு வரும்..
Gujili

ஞாயிறு, பிப்ரவரி 01, 2009

குதிரைகளுக்கு இருப்பது போல் ஒரு well-equipped hospital மற்ற மிருகங்களுக்கு இங்கு இல்லை, அதனால் pharmacy களில் பணி புரியும் மருத்துவர்களே பெரும்பாலும் அந்தந்த கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்றோ அல்லது பார்மசி அருகிலோ வைத்து சிகிச்சை அளிப்பார்கள். சில சமயங்களில் எங்கள் பார்மசிக்கும் குதிரை அல்லாது மற்ற மிருகங்களை எடுத்து வருவார்கள், ஆனால் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுத்து விடுவோம். எங்கள் அருகில் ஒரு எகிப்து நாட்டு கால்நடை மருத்துவர் பணி புரியும் பார்மசி இருந்தது, அவர் ஆடுகளுக்கு owner கொண்டு வரும் pick-up truck -ல் வைத்தே பெரும்பாலான சிகிச்சைகளை அளிப்பார். அவருடைய சிகிச்சைகள் பலவேறாக இருக்கும் caesarean section, mammectomy, hysterectomy என அனைத்து சிகிச்சைகளும் open air theater (அதாவது pick-up truck இன் பின் புறம்) வைத்தே முடிப்பார். பெரும்பாலும் அவருடைய அறுவைகள் தோல்வியிலேயே முடியும். ஒரு முறை அவர் ஒரு ஆட்டை pick-up truck இன் பின் புறம் வைத்து எதோ செய்து கொண்டிருந்தார், நான் அவரருகில் சென்று "என்ன டாக்டர் இப்படி பார்மசி எதிரிலேயே post-mortem செய்கிறீர்கள் எங்களுக்கு துர் நாற்றம் அடிக்காதா என கேட்டேன், என்னுடைய கேள்வியை கேட்டு மிக்க கோபம் அடைந்து, டாக்டர் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ரெண்டு மணி நேரமாக mammectomy செய்து கொண்டு இருக்கிறேன், நீ என்னை கேவலப்படுத்தி விட்டாயே என்று கோபமாக கேட்டார். நான் அவரிடம், "டாக்டர் கொஞ்சம் நல்லா பாருங்கள் rigor martis கூட செட் ஆகி விட்டது இதை எப்படி surgery என்று கூறு கிறீர்கள்" என திருப்பி கேட்டேன். அப்போது தான் அவர் அந்த ஆடு செத்து விட்டது என்பதையே கவனித்தார்.
கரையான்.