சில நேரங்களில் பல நாட்டு கால்நடை மருத்துவர்களுடன் பணிசெய்யும் வாய்ப்பு கிடைப்பதுண்டு, எனக்கு இங்கு சூடான் மற்றும் எகிப்து நாட்டு மருத்துவர்களுடன் பழகும் மற்றும் அவர்களின் treatment களை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதுண்டு. ஒரு முறை ஒரு எகிப்து நாட்டு கால்நடை மருத்துவர் என்னை ஒரு ஆட்டுக்கு pregnancy diagnosis செய்ய என்னை அழைத்தார், ultra-sound scanner மூல மாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நான் அவரிடம் எனக்கு ஆடுகளில் அவ்வளவாக அனுபவம் போதாது என் கூறினேன், அவரோ நீ கவலைப்படாமல் scan செய்து சொல் அது தவறாக இருந்தாலும் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறினார். நானும் சென்று ஸ்கேன் செய்து நான்கு ஆடுகளுக்கு சரியாக வே சொன்னேன், ஒரு ஆட்டுக்கு என்னால் சரியாக diagnose செய்ய முடிய வில்லை. பின்னர் அவனிடம், நீ எப்படி diagnose செய்வாய் என கேட்டேன், அவன் சொன்ன பதிலில் ஆடிப்போய் விட்டேன். ரொம்ப casual ஆக "டாக்டர், பெரும்பாலும் அந்த ஆடு மேய்ப்பவர் சரியாக சொல்லி விடுவார், ஆடு சினையா இல்லையா என்பதை, இல்லை என்றால் ஒரு prostoglandin injection கொடுப்பேன் அபார்ஷன் ஆனால் ஆடு சினை, ஆக வில்லை என்றால் சினை இல்லை"
கரையான்.