ஞாயிறு, ஜூலை 07, 2013

கவலை கவலை கவலை

வயது ஆக ஆக வயோதிகம் வருதோ இல்லையோ கவலைகளின் அளவு கூடுவது இயல்பு அதாவது வங்கி கணக்கில் காசு அதிகம் சேர சேர நம்முடைய  உடலுக்கான மருத்துவ செலவு அதிகமாவது போல். என்னடா சம்பந்தமே இல்லாம பிதற்று ரானேன்னு நீங்கள் நினைக்கலாம்.
 பண்ணையில இந்த வருஷம் அருமையான உற்பத்தி, குறைந்த mortality நல்ல  conception என்று சந்தோஷப்பட எண்ணிக்கொண்டிருக்கும்போது பண்ணையின் top stallion திடீரென்று மண்டையபோட்டு என்னோட மன உறுதி, திறமை மேல இருக்கிற நம்பிக்கை எல்லாத்தையும்  பஞ்சராக்கி விட்டது. ஒரு stud farm ல stallion  சாகும்போது மொத்த breeding programme தலை கீழாகி விடும்.  அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு மில்லியன்  டாலர்.   இதைப்போன்ற சம்பவங்கள் நிகழும்போது அதை முதலாளிக்கிட்ட சொல்லுவது போன்ற  தர்ம சங்கடமான நிலை அனுபவித்து பார்க்கும்போதுதான் அந்த கஷ்டம் தெரியும். அது stallion ஒ mare ஒ அதன் விலை நம்முடைய சங்கடத்தை அதிகப்படுத்தும். முதலாளியை பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகவும் உறுத்தலாகவும் இருக்கும்.ஆனால்  வேறு வழியே இல்லை சொல்லித்தான் ஆகணும்.  பலமுறை இந்த வலியை அனுபவித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த நிலையில் இருக்கும்போதும் முதல்முறை இந்த சங்கடம் ஏற்படுவது போல்தான் உணர்கின்றேன்.(ஓவரா தண்ணிய போட்டு மட்டை ஆகி விட்டு அடுத்த நாள் மனைவியை face செய்ய சங்கட  படும் கணவன் மாதிரி என்றுகூட சொல்லலாம்).  இந்த நிலையிலும் ஒன்றை நினைத்து என் மனதை தேற்றி கொள்வேன், அது என்னன்னா இந்த செய்திய கேட்கும் முதலாளியின் நிலை, மில்லியன் மில்லியனா காச போட்டு வாங்கி அந்த குதிரைய பத்திரமா பாத்துக்க  எனக்கு சம்பளத்தையும் அள்ளி கொடுத்து கடைசியில குதிர செத்து போச்சுன்னு நான் சொல்லும்போது அவருக்கு எப்படி இருக்கும்?

கரையான்.

7 கருத்துகள்:

  1. I like your perspective on this Karayaan... I would say that one always ought to look at all sides of the coin. I know life may seem like you want to throw the towel in, but there is so much to be thankful for and looking at the positive side of everything helps your outlook on life. After all life is 1% what happens to you and 99% of how you react to it.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை எண்ணி அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம், பின்னர் வாழ்க்கை துணையின் (மனைவி/கணவன்)கட்டுப்பாடுகளை எண்ணி அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம், பின்னாளில் குழந்தைகள் நம் பேச்சை கேட்காமல் கட்டுப்பாடற்று திரிவதாக எண்ணி அவர்கள் மேல் கோபம் படுகிறோம்...இதில் எந்த நிலையிலும் எதையும் நிறுத்தவும் முடியாது விலகி கொள்ளவும் முடியாது....இதுபோலதான் பணியிலும் வெற்றிகளை எப்படி மகிழ்வுடன் ஏற்று கொள்கிறோமோ அதே போல் ...தோல்விகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்....

    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. நம்ம முதலாளியிடம் 'அல்லாஹ் கரீம்' என்று சொல்லு.ஒன்னும் சொல்லமாட்டார்.

    பாய்.

    பதிலளிநீக்கு
  4. "After all life is 1% what happens to you and 99% of how you react to it"
    Fantastic quote from Gujili..
    Karaiyan can write on this
    Chocks

    பதிலளிநீக்கு
  5. Chocks,
    I want to just clarify that I am not the originator for this statement - "life is 1% what happens to you and 99% of what you react to it" I heard it at church or read this somewhere, I am not sure. As a strong proponent of preventing plagiarism, I want to make sure that credit for original ideas always goes to the right person. Thanks for commenting, haven't heard from you in a while.
    Gujili

    பதிலளிநீக்கு
  6. Gujili.. I feel there is nothing new in this universe.Everything is existing .One who use the right one in the right place in the right time is succesful and smart.Even best selling self devvelopment books quotes are shared by our Thiruvalluvar about 2000 years back. So I consider this quote is from you only. You deserve for that
    Chocks

    பதிலளிநீக்கு